``அழகு ஆரோக்கியத்தின் வெளிப் பாடு’ன்னு சொல்லுவாங்க. அந்த அழகையும் ஆரோக்கியத்தையும் இயற்கையான பொருள்களிடமிருந்தே பெறலாம். இந்த எண்ணம்தான் மூலிகைகளை மூலதனமாகக் கொண்டு பிசினஸ் செய்யும் ஐடியாவை எனக்குள்ள ஏற்படுத்துச்சு’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சௌமியா. மூலிகை அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பாளரான இவர், குழந்தைகளுக்கான கதைசொல்லியும்கூட.

``சொந்த ஊரு சேலம். எங்க குடும்பத்துல நான்தான் முதல் பட்டதாரி. இன்ஜினீயரிங் முடிச்சிட்டு பெங்களூருல ஹெச்ஆரா வேலை பார்த்துட்டு இருந்தேன். கிடைக்குற ஓய்வுநேரத்துல சோப்பு தயாரிக்கிறதைப் பொழுதுபோக்கா பண்ணிட்டு இருந்தேன். பெங்களூருல தொடர்ந்து வேலை பார்க்க முடியாத சூழல்ல வீட்டுக்கு வந்துட்டேன். முன்னாடி நான் வேலை பார்த்த நிறுவனம் ரசாயனப் பொருள்கள் சம்பந்தப்பட்டது. அதனால எனக்குக் கழுத்து, தோள்பகுதி சருமம் பாதிக்கப்பட்டு தழும்பு மாதிரி கறுப்பா மாறியிருந்தது. ஜாதிக்காய், மாசிக்காய், பதிமுகம் போன்ற மூலிகைகளைச் சருமத்துக்குப் பயன் படுத்தினா குணமாகும்னு மூலிகை மருத்துவம் சார்ந்த புத்தகத்துல படிச்சேன்.

ஏற்கெனவே, சோப்பு தயாரிப்புல அனுபவம் இருக்குறதால அந்த மூலிகைகளை வாங்கி, வீட்டிலேயே சோப்பு ரெடி பண்ணிப் பயன் படுத்தத் தொடங்கினேன். சில வாரங்கள்லேயே எனக்கிருந்த சரும பிரச்னை முழுவதுமா குணமாகிடிச்சு. இதுபத்தி என் ஃபேஸ்புக் பேஜ்ல போஸ்ட் பண்ணேன். நிறைய பேர் தங்களுடைய கூந்தல், சரும பிரச்னைகளுக்குத் தகுந்த மாதிரி மூலிகை சோப்பு, ஷாம்பூ கிடைக்குமான்னு கேட்டாங்க. அப்போதான், மூலிகைகளைக்கொண்டு சோப்பு, ஷாம்பூ தயாரிச்சு விற்பனை செய்யுறதுக்கான ஐடியா கிடைச்சுது.

என் சொந்த ஊரான சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்ல நிறைய மூலிகைகள் கிடைக்கும். அவற்றின் மருத்துவ குணங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். வேம்பு, குப்பைமேனி, வெட்டிவேர், மஞ்சள், ஜாதிக்காய், மாசிக்காய், ரோஜா, பதிமுகம், ஆவாரம்பூ, மரிக்கொழுந்து, அதிமதுரம், குன்றிமணி, ஆலமர இலை, வேர்னு ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருள்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே சோப்பு, ஷாம்பூ, ஹேர் ஆயில், குளியல் பொடி தயார் செய்து விற்பனை செய்யத் தொடங்கினேன்.

பெரும்பாலான மூலிகைகள் தமிழ் நாட்டிலேயே கிடைச்சுடும். பதிமுகம் மாதிரியான அரிதான மூலிகைகளை மட்டும் கேரளா, மும்பையிலேருந்து வாங்குவேன். ‘சௌமியா ஹோம்மேட் புராடக்ஸ்' (sowmyashomemadeproducts) என்ற பெயரில் ஒரு வெப்சைட்டை தொடங்கி அதிலேயே எங்க தயாரிப்புகளை விற்பனை செய்யுறோம்” என்று கூறும் சௌமியா இந்த பிசினஸில் மாதம் 30,000 ரூபாய்வரை சம்பாதிக்கிறார்.

குழந்தைகளுக்கான கதை சொல்லியாகவும் வலம் வரும் சௌமியா, ``புத்தகத்துல நான் படிக்கிற கதைகள், கட்டுரைகள் எல்லாத்தையும் என் கணவர்கிட்ட சொல்வேன். அவர் கொடுத்த ஊக்கத்துல ஃபேஸ்புக் லைவ்ல கதைகள் சொல்ல ஆரம்பிச்சேன். தொடக்கத்துல ஜெயமோகன் கதைகளைத்தான் தேர்ந்தெடுத்தோம். ஆனா, காப்பிரைட் பிரச்னை வரும்னு சிறுவர்களுக்கான கதைகளைச் சொல்ல ஆரம்பிச்சேன். எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு.

கற்பனைத் திறனை வளர்க்கவும், சிந்திக்கும் திறனை அதிகப்படுத்தவும் கதைகள் முக்கியமானவை. கதை படிக்க நேரம் இல்லாத பலரும் செவி வழியா கதைகளை விரும்பிக் கேட்கறாங்க. இதுக்காகவே தினமும் புதுப்புது புத்தகங்களைப் படிச்சிட்டு இருக்கேன். இதன் தொடர்ச்சியா இப்போ கதை புத்தகங்களும் எழுதிட்டு இருக்கேன். பள்ளி குழந்தைகளுக்குக் கதையுடன் சேர்த்து ப்ளே தெரபிக்கான வகுப்புகளும் எடுக்கறேன்.

மத்தபடி, பெரிய பிளான் எதுவும் இல்ல. ஒவ்வொரு நிமிஷத்தையும் நமக்கும் மத்தவங்களுக்கும் பயனுள்ளதா வாழணும். அவ்ளோதான்!”

- அடக்கமாகச் சொல் கிறார் சௌமியா.