Published:Updated:

அலறும் ஆம்புலன்ஸ்... அசத்தும் தீபா! - வாழ நினைத்தால் வாழலாம்

தீபா
பிரீமியம் ஸ்டோரி
தீபா

அவசரத் தேவை

அலறும் ஆம்புலன்ஸ்... அசத்தும் தீபா! - வாழ நினைத்தால் வாழலாம்

அவசரத் தேவை

Published:Updated:
தீபா
பிரீமியம் ஸ்டோரி
தீபா
ஒரு வைரஸால், உலகம் முழுக்கப் பலர் பணிகளிலிருந்து நீக்கப் பட்டு, விலகி, பலர் வேறு பணி களை, துறைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில், கேரளாவில் கல்லூரிப் பேருந்து ஓட்டுநராக இருந்த தீபா ஜோசப், இப்போது ஆம்புலன்ஸ் டிரைவராகியிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோழிக்கோடு மாவட்டத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தீபா. டிரைவிங் மீதான அவரது விருப்பம், கனரக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெற்று, கல்லூரிப் பேருந்தின் டிரைவர் பணியில் அமரவைத்தது. பெண்கள் அதிகம் ஈடுபட்டிராத, சவால்மிக்க இந்தப் பணியைத் திறமையுடன் செய்துகொண்டிருந்த தீபாவின் வேலையைப் பறித்தது, கொரோனா. பொருளாதாரப் பிரச்னை துரத்த, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகிவிட்டார் தீபா. முந்தைய பணியைப் பறித்த அதே கொரோனாவேதான், புதிய பாதையையும் காட்டியிருக்கிறது.

“அப்பா ஜோசப், விவசாயி. வீட்டில் மூன்று பெண்கள். நான்தான் மூத்தவள். பத்தாவது வரை படித்தேன். என் உறவுக்கார சகோதரர்கள் கார் வைத்திருந்ததால், அவர்களிடம் நானும் டிரைவிங் பழகினேன். 18 வயதில் திருமணமாகிவிட்டது. கணவர் அனில்குமார் மெக்கானிக். மகன் பத்தாம் வகுப்பும், மகள் எட்டாம் வகுப்பும் படிக்கின்றனர். முதலில் ஒரு ஹோட்டலில் கேஷியர், அடுத்து இன்னொரு ஹோட்டலில் வெயிட்டர் என வேலை பார்த்தேன். பின்னர், டிரைவிங் கிளாஸ் சென்று கனரக வாகனங்களைப் பழகி, 2016-ம் ஆண்டு ஓட்டுநர் உரிமம் பெற்றேன். புலியாவு நேஷனல் ஆர்ட்ஸ் காலேஜில் பஸ் டிரைவர் பணி இருப்பதாகக் கேள்விப்பட்டுச் சென்றேன். சற்று யோசித்தவர்கள், என் தன்னம்பிக்கையான பேச்சின் காரணமாக என்மீது நம்பிக்கை வைத்தனர். கடந்தாண்டுதான் பணியில் சேர்ந்தேன். கொரோனா காரணமாக மார்ச் மாதத்திலேயே கல்லூரிகள் மூடப்பட்டன. கணவருக்கும் பணி இல்லை. வீட்டு வாடகை, வண்டி இ.எம்.இ என்று திண்டாடினோம்.

அப்போதுதான், ஒரு டிரஸ்ட்டில் ஆம்புலன்ஸ் டிரைவர் பணி இருப்பதாகக் கேள்விப்பட்டுச் சென்றோம். நான் பெண் என்பதால் எமர்ஜென்சி நேரத்தில் எப்படி பணியாற்ற முடியும் என்று யோசித்தார்கள். எந்த நேரமும் பணி செய்யத் தயாராக இருக்கிறேன் என்று உறுதியளித்ததால் வேலை கிடைத்தது. மூன்று மாதங்களாக ஓடிக்கொண்டிருக்கிறேன்'' என்றவரிடம், அந்த அனுபவத்தைக் கேட்டோம்.

தீபா
தீபா

“காலேஜ் பஸ்ஸைவிட, ஆம்புலன்ஸ் இயக்குவதில் சவால்கள் நிறைந்திருக்கின்றன. மேலும், பி.பி.இ கிட் (கொரோனா உடல் கவசம்) போட்டுக்கொண்டிருப்பதால் 10 நிமிடங்கள் ஓட்டுவதே கடினம். மிக அதிகமான உஷ்ணம், கொட்டும் வியர்வையுடன்தான் வேலைசெய்ய வேண்டும். இரண்டு எமர்ஜென்சி கேஸ் களை அட்டெண்ட் செய்திருக்கிறேன். மயக்கமான ஒருவரை மருத்துவமனையில் சேர்க்க 24 கி.மீ தூரத்தை 13 நிமிடங்களில் அடைந்தோம். ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட ஒருவரை கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு இடையில்

40 கி.மீ தூரத்திலிருந்த மருத்துவமனைக்கு அரை மணி நேரத்தில் கொண்டுசேர்த்தேன். இருவரும் இப்போது நலமாக இருக்கிறார்கள். என் குடும்பத்தினர், கொரோனா காலகட்டத்தில் இந்தப் பணியா என்று பயந்தனர். இப்போது புரிந்துகொண்டு எனக்கு உதவியாக இருக்கின்றனர்”

- எனர்ஜி குறையாமல் பேசுகிறார்.

“எத்தனையோ நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ளன. கஷ்டமாக இருக்கும்தான் என்றாலும், கண்டு கொள்வதில்லை. ஆம்புலன்ஸ் டிரைவராக, ஒரு மருத்துவமனை முன்பு நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர், ‘இது மகத்தான பணி. கொரோனா வைரஸால் உங்களுக்குக் கைகொடுக்கக்கூட முடியவில்லை. அதனால் சல்யூட் அடிக்கிறேன்’ என்று நெகிழவைத்தார். இதுபோன்ற சின்னச் சின்ன அங்கீகாரங்கள் போதும், கனவுகளை நோக்கி ஓடிக்கொண்டேயிருப்போம். நம்பிக்கையும் கடின உழைப்பும் இருந்தால் பெண்களாலும் எதிலும் சாதிக்க முடியும்!”

- தீபாவின் குரலில் உறுதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘இயக்குநர் தீபா’... ஒரு கனவு!

தீபாவுக்கு இன்னோர் ஆச்சர்ய முகமும் இருக்கிறது. “நிறைய சினிமா பார்ப்பேன். இயக்குநர் வினீஷ் ஆராத்யா என் குடும்ப நண்பர். அவர், 2018-ல் ‘பத்மவியூஹத்திலே அபிமன்யு’ என்ற படம் எடுத்தபோது, உதவி இயக்குநர் ஒருவர் திடீரென்று உயிரிழக்க, அந்த வேலைக்கு என்னை அழைத்தார். அதில் பணியாற்றியதுடன், சௌத் இந்தியா ஃபிலிம் அகாடமி எடுத்த, ‘Journey’ குறும்படத்தில் லீட் ரோலில் நடித்தேன். கொரோனா காலகட்டத்திலும் இரண்டு குறும்படங்களில் நடித்துள்ளேன். அடுத்த ஒரு படத்தில் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்ற உள்ளேன். சினிமா, டிரைவிங் இரண்டுமே என் இரண்டு கண்கள். இயக்குநராகும் கனவு இருக்கிறது. லால் ஏட்டா (மோகன் லால்), ரஜினி சார் படங்களை இயக்கும் பெரும்கனவு அது. விஜய் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும். அவரை ஒருமுறை பார்க்க ரொம்ப ரொம்ப ஆசை!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism