Published:Updated:

வாழ்க்கை வாழ்வதற்கே! - மரணத்தை வென்ற கிருத்திகாவின் வெற்றிக்கதை

கிருத்திகா
பிரீமியம் ஸ்டோரி
News
கிருத்திகா

கடவுள் என்னை பிழைக்க வெச்சதுக்கு நியாயமான காரணம் இருக்கும்னு நம்பி, எதிர்மறை எண்ணங்களைத் தூக்கிப் போட் டேன். சில மாச ஓய்வுக்குப் பிறகு ஸ்கூல் போனேன்

“தீர்க்கமான இலக்கு இருந்தா போதும். வாழ்க்கையில எப்படிப்பட்ட சவாலான சூழல் வந்தாலும், அந்த இலக்கே நம்மை உயர்ந்த இடத்துக்குக் கூட்டிட்டுப்போயிடும். ‘வாழவே பிடிக்கலை’னு ஒருகட்டத்துல முடிவெடுத்த நான், இன்னிக்குப் பலருக்கும் நம்பிக்கையூட்டுற அளவுக்கு வளர்ந்திருக்கேன். அதுக்குக் காரணமா இருந்தது என் இலக்கு”

- சென்னையைச் சேர்ந்த கிருத்திகாவின் பேச்சில் உயிரோட்டமான வார்த்தைகள் ஊற்றெடுக்கின்றன. பால்யத்தில் இருந்தே துரத்திய சவால்கள், மரணத்தின் விளிம்பில் கிருத்திகாவின் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கின்றன. அபாயகட்டத்தில் இருந்து மீண்டு எழுந்தவர், தொழில்முனைவோராகும் இலக்குடன் புது வாழ்க்கையைத் தொடங்கி, அதில் வெற்றியையும் வசப்படுத்தியிருக்கிறார்.

“என்னோட ஜெயின் சமூகத்துல பெண் களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனா, எங்க பெற்றோர், மூணு மகள்களையும் முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்தாங்க. நல்லா படிச்சேன். ஆனாலும், என்னோட ஸ்கூல் பருவம் அவ்வளவு மகிழ்ச்சியானதா அமையல. ப்ளஸ் டூ படிச்சுகிட்டு இருந்தபோது எதிர் பாராத வகையில ஒருநாள் எனக்கு தீ விபத்து ஏற்பட்டுச்சு. 50 சதவிகிதத்துக்கும் மேல் தீக் காயம் ஏற்பட்ட நிலையில, என்னை ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. நோய்த்தொற்றால் நிமோனியா பாதிப்பும் ஏற்படவே வென்டி லேட்டர் சிகிச்சையில் இருந்தேன். மேல் சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டு உயிர்பிழைச்சேன்”

- வலி பகிர்பவருக்கு, அந்த மருத்துவமனை சூழலே, புதிய வாழ்க்கைக்கான பிடிப்பையும் கொடுத்திருக்கிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே! - 
மரணத்தை வென்ற 
கிருத்திகாவின் வெற்றிக்கதை

“ரெண்டு மாசம் ஆஸ்பத்திரியில இருந் தேன். இதுக்கிடையில என்னோட சருமத்தை சீரமைக்க 13 முறை ஆபரேஷன் நடந்துச்சு. வாழ்க்கை மீதான நம்பிக்கையே போயிடுச்சு. இனி யாருக்கும் பாரமா இருக்கக் கூடாதுனு தற்கொலை செய்துக்கலாம்னு நினைச்ச நேரத்துல, சிகிச்சையளிச்ச டாக்டர்கள்தான் நம்பிக்கை கொடுத்தாங்க. தீ விபத்தால என்னைவிடவும் அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்ட பலரும், சிகிச்சைக்குப் பிறகு நம்பிக்கையோடு வாழுற கதைகளைக் கேட்டேன்.

கடவுள் என்னை பிழைக்க வெச்சதுக்கு நியாயமான காரணம் இருக்கும்னு நம்பி, எதிர்மறை எண்ணங்களைத் தூக்கிப் போட் டேன். சில மாச ஓய்வுக்குப் பிறகு ஸ்கூல் போனேன். அப்போ பப்ளிக் எக்ஸாமுக்கு ஒரு மாசம்தான் இருந்துச்சு. மெடிக்கல் சர்டிஃபிகேட் கொடுத்தேன். ஆனாலும், நான் படிச்ச முன்னணி தனியார் ஸ்கூல்ல, சரியா எக்ஸாம் எழுத முடியாம மார்க் குறைஞ்சுடும்னு நினைச்சு தேர்வெழுத என்னை அனுமதிக்கல. வருத்தத்துல வீட்டுலயே முடங்கிடாம, நம்பிக்கையுடன் கரஸ்ல ப்ளஸ் டூ முடிச்சேன். உடல்நல பாதிப்புகள் தொடர்ந்தாலும், மகிழ்ச்சியா வாழப் பழகினேன். தொழில்முனைவோராகும் வைராக்கியத்துடன், முன்னணி கல்வி நிறுவனத்துல இன்டீரியர் டிசைனிங் கோர்ஸ் முடிச்சேன்”

- தடைகளைக் கடந்து படிப்பை முடித்த கிருத்திகா, தற்போது மாதம்தோறும் சில லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் இளம் தொழில் முனைவோர்.

“காலேஜ் முடிச்சதும் தனியார் நிறுவனத்துல சில வருஷங்கள் வேலை செஞ் சேன். முறையான அனுபவத் துடன், சரியான தருணத்துல இன்டீரியர் டிசைனிங் வேலைகளுக்கான ஸ்டார்ட் அப் நிறுவனத்தை ஆரம்பிச் சேன். புதுச்சேரியில பிரபல மான ‘த ஸ்போர்ட்ஸ் ஸ்டூடியோ’ அகாடமி, முன்னணி தொழில் நிறுவனங்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள்னு கடந்த மூணு வருஷத்துல,

80-க்கும் மேற்பட்ட புரா ஜெக்ட்டுகளை முடிச்சுக் கொடுத்திருக்கோம். சிலருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக் கேன்.

நான் படிச்ச டிசைனிங் இன்ஸ்டிட்யூட்ல பகுதிநேர பேராசிரியராகவும் வேலை செய்யுறேன். நிறைய தொழில்முனைவோர்களை உருவாக்கணும். இழப்பு களையும் தோல்விகளையும் கடந்தும்கூட பெரிய வெற்றி களை வசப்படுத்த முடியும்னு பலருக்கும் நம்பிக்கை ஊட்டணும்.”

- லட்சியங்கள் சொல்லும் கிருத்திகாவின் நல்ல எண்ணங்கள் எல்லாமே கைகூடட்டும்!