Published:Updated:

உயர்வுக்கு உயரம் தடையல்ல... - தன்னம்பிக்கை தரணி

தரணி
பிரீமியம் ஸ்டோரி
News
தரணி

எனக்கு இப்போ 37 வயசாகுது. இத்தனை வருஷத்துல ஒருநாள்கூட நான் ரெண்டடிதான் இருக்கேன்னு வருத்தப்பட்டதே இல்லை

``நம்ம எல்லோர்கிட்டயும் ஒரு ப்ளஸ் இருக்கும். அதை நோக்கி வாழ்க்கையைத் திருப்பினா போதும், ஜெயிச்சிடலாம். யாருடைய கேலி, கிண்டல்களும் நம்ம வாழ்க்கை முழுக்க பயணம் செய்யப்போறது இல்ல”

- ஒவ்வொரு வார்த்தையிலும் நம்பிக்கை விதைத்துப் பேசுகிறார் தரணி. மரபணுக் குறைபாடு காரணமாக உடல் வளர்ச்சி பாதிப்புக்குள்ளானவர் தரணி. தளராத தன்னம்பிக்கையால் தமிழக அரசு குரூப் - 2 போட்டித் தேர்வில் வெற்றி பெற்று இன்று விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். தன் வெற்றிப் பயணத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

உயர்வுக்கு உயரம் தடையல்ல... - 
தன்னம்பிக்கை தரணி

“எனக்கு இப்போ 37 வயசாகுது. இத்தனை வருஷத்துல ஒருநாள்கூட நான் ரெண்டடிதான் இருக்கேன்னு வருத்தப்பட்டதே இல்லை. என்னோட அடையாளம்ங்கிறது உயரம் இல்ல, என் வெற்றிதான் என்பதில் சின்ன வயசிலிருந்தே ரொம்ப உறுதியா இருந்தேன். பிறக்கும்போது நான் மற்ற குழந்தைகள் மாதிரி இயல்பாதான் இருந்தேனாம். ஆனா, வயசு ஆக ஆக என் உயரம் அதிகரிக்காததால டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயிருக்காங்க. மரபணுக் குறைபாடு காரணமாக இயல்பான குழந்தைகளுக்கான உடல் வளர்ச்சி எனக்கு இருக்காதுனு டாக்டருங்க சொல்லிட் டாங்க. அக்கா, நான், தங்கச்சினு அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்ததால் என்னை எங்க தாத்தா பாட்டி தான் வளர்த்தாங்க. சென்னையிலதான் படிச்சேன்.

குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம்தான் எனக்கு மத்தவங்க மாதிரி இயல்பான வளர்ச்சியில்லைனு புரிய ஆரம்பிச்சுது. எனக்குத் தாழ்வு மனப்பான்மை வரக் கூடாதுனு எங்க தாத்தா என்னை ரொம்ப தன்னம் பிக்கையோட வளர்த்தாரு. நான் குழந்தையா இருந்த போதே, தாத்தா என்னை அவர் கையைப் பிடிச்சுட்டு நடக்க அனுமதிக்க மாட்டாரு. `நீ தைரியமான பொண்ணு. நீ முன்னாடி நடந்து போ, நான் பின்னாடி வர்றேன்’னு சொல்லுவாரு. தனியா கடைக்குப் போயிட்டு வரச் சொல்லுவாரு. அதனால அடுத்தவங்க கிண்டல் பண்ணாகூட நான் ரொம்ப ஈஸியா கடந்து போயிடுவேன்.

ஸ்கூல்ல எல்லா விஷயத்துக்கும் முதல் ஆளா தன்னம்பிக்கையோடு நிப்பேன். எனக்குனு ஸ்கூல்ல தனி டேபிள் சேர் ரெடி பண்ணிக் கொடுத்தாங்க. 80 சதவிகித மதிப்பெண் எடுத்து பாஸ் பண்ணி, அப்புறம் கரெஸ்ல பி.காம் படிச்சேன். படிப்பு முடிஞ்சதும், அப்பாவோட சொந்த ஊரான விழுப்புரம் வந்துட்டேன். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கிட்ட மனு கொடுத்து தற்காலிக ஊழியரா அரசு மருத்துவமனையில வேலைக்குச் சேர்ந்தேன். எனக்குனு ஓர் அடையாளம் இருக்கணும், என்மேல யாரும் இரக்கப்படக் கூடாது, யாரையும் சார்ந்து இருக்கக் கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருந்தேன்” என்ற தரணி அரசுப் போட்டித் தேர்வுக்குத் தயாரானது பற்றிப் பேசத் தொடங்கினார்.

``நான் பார்த்துட்டிருந்தது தற்காலிக வேலைதான். அதனால் பயிற்சி வகுப்பு களுக்குப் போய் அரசு போட்டித் தேர்வுக்குப் படிக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாதான் இருந்துச்சு. ஆனா, நான் ஜெயிச்சா, என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கும் ஊக்கமாக இருக்குமேனு நினைச் சுப்பேன். ஆரம்பத்துல சில தேர்வுகள்ல தோல்வியைச் சந்திச்சேன். ஆனா, நம்பிக் கையை இழக்கல. மூணு வருஷ முயற்சிக்குப் பிறகு, குரூப் - 2 தேர்வுல வெற்றி பெற்று காஞ்சிபுரத்தில் வருவாய்த் துறை உதவியாளரா வேலைக்குச் சேர்ந்தேன்.

உயர்வுக்கு உயரம் தடையல்ல... - 
தன்னம்பிக்கை தரணி

வேலைக்குச் சேர்ந்து எட்டு வருஷங்களாச்சு. அரசு போட்டித் தேர்வுக்குப் படிக்கிற நிறைய பேருக்கு என்னால் முடிஞ்ச ஆலோசனைகளை வழங்கி ஊக்கம் கொடுத்துட்டு இருக் கேன். அலுவலகத்துல என் வேலைகள்ல ரொம்பவே கவனமா இருப்பேன். இப்போ பதவி உயர்வுக்காகக் காத் திட்டிருக்கேன். ஒவ்வொரு நாளும் நிறைவா இருக்கு. கனவுகளுக்காகப் போராடத் தயாராகிட்டா, நம்ம வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. நிச்சயம் ஜெயிப் போம்”

- தன்னம்பிக்கையை விதைக்கும் தரணி, சமீபத்தில் தன் காதலனைக் கைப்பற்றி இருக்கிறார்.