Published:Updated:

பொண்ணுங்க தவில் வாசிக்கிறது தப்பா..? - தவில் கலைஞர் சரோஜினி

சரோஜினி
பிரீமியம் ஸ்டோரி
சரோஜினி

#Motivation

பொண்ணுங்க தவில் வாசிக்கிறது தப்பா..? - தவில் கலைஞர் சரோஜினி

#Motivation

Published:Updated:
சரோஜினி
பிரீமியம் ஸ்டோரி
சரோஜினி

னக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. இதெல்லாம் ஆண்கள் பார்க்குற வேலை’ன்னு யாராச்சும் சொல்லும்போது, ‘நான் இதைச் செஞ்சு காட்டுவேன்’னு எல்லா பெண்களுக்குள்ளும் ஓர் உத்வேகம் வரும்ல அப்படியான உத்வேகம்தான் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய தவில் வாசிப்பில் என்னை அடியெடுத்து வைக்க வெச்சது...”

- தன்னம்பிக்கை மிளிர பேசுகிறார் தவில் வாசிப்பில் கலக்கிக்கொண்டிருக்கும் சரோஜினி.

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தற்காலிக தவில் கலைஞராகப் பணியாற்றும் சரோஜினி 5-ம் வகுப்பு படிக்கும்போது தவில் வாசிக்கத் தொடங்கியவர். குடும்பத்துடன் பல கச்சேரிகளுக்குச் செல்ல ஆரம்பித்தவர் தற்போது கோயிலில் தவில் வாசித்துக் கொண்டிருக்கிறார். இந்த இசைப் பயணம் குறித்து அவரிடம் பேசினோம்...

பொண்ணுங்க தவில் வாசிக்கிறது தப்பா..? - தவில் கலைஞர் சரோஜினி

“என் அப்பா சின்னப்பிள்ளை எங்க ஊர்ல நன்கு அறியப்பட்ட நாதஸ்வர வித்வான். என் அண்ணன் குருமூர்த்தி தவில் வித்வான். இசைவேளாளர் குடும்பத்தில் அப்பாவும் பையனும் நாதஸ்வரம், தவில் வாசிக்கிறதுல ஆச்சர்யப்படுறதுக்கு ஒண்ணுமில்லை. ஆனா, பெண்களை தவில் வாசிக்க அனுப்பத் தயங்குவாங்க. அதையெல்லாம் மீறி என்னைத் தவில் வாசிக்க அனுப்பினதுதான் பெரிய விஷயம். இப்போகூட பரவாயில்லை. பத்து பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால பெண்களுக்கான சூழல் ரொம்ப மோசமா இருந்துச்சு. சில பெண்கள் நாதஸ்வரம் வாசிச்சாங்க... ஆனா, தவில் வாசிக்கிறதுக்கு யாரும் பெருசா முன்வரலை. தவில் வாசிப்புங்கிறது கிட்டத்தட்ட ஆண்களுக்கு மட்டுமான ஒன்றாகவே இருந்துச்சு. அந்தச் சூழல்லதான் தவில் வாசிக்கத் தொடங்கினேன். தவில் கத்துக்க ஆரம்பிக்கும்போது, சொந்தக்காரங்க பலரும், ‘பொம்பள புள்ளைக்கு எதுக்கு இதெல்லாம்?’னு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. சொந்தக்காரங்களை விட்டுத்தள்ளுங்க... என் அம்மாவே நான் தவில் கத்துக்கிறதை விரும்பலை. ஆனா, என் அப்பா எதையுமே காதுல வாங்கிக்கலை. `மத்த பொண்ணுங்க யாரும் தவில் வாசிக்கலைங்கிறதுக்காக என் பொண்ணு தவில் வாசிக்கக்கூடாதா...'ன்னு சொல்லி எனக்கு தவில் வாசிக்கக் கற்றுக் கொடுத்தார்.

ஆர்வத்தோட தவில் கத்துக்க ஆரம்பிச்ச நான் ஒரே வருஷத்துல கச்சேரி செய்யுற அளவுக்கு முன்னேறினேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போது அரங்கேற்றம் பண்ணிட்டேன். அதன்பிறகு அப்பா, அண்ணாகூட நானும் கச்சேரிக்குப் போக ஆரம்பிச்சேன். எங்கு நாங்க வாசிக்கப் போனாலும் எல்லாரோட பார்வையும் என்மேலதான் இருக்கும். ‘சின்ன பொண்ணு என்னம்மா தவில் வாசிக்கிறா பாரு’ன்னு சொல்லிப் பாராட்டுவாங்க. எனக்கு கிடைக்கிற பாராட்டுகளைப் பார்த்துட்டு அம்மாவும் சந்தோஷப்பட ஆரம்பிச்சிட் டாங்க” என்று சொல்லும் சரோஜினி, பேரொளி, தவில் சுடரொளி போன்ற பட்டங் களை வாங்கியிருக்கிறார்.

பொண்ணுங்க தவில் வாசிக்கிறது தப்பா..? - தவில் கலைஞர் சரோஜினி

“ஸ்கூல் முடிச்சுட்டு இன்ஜினீயரிங் காலேஜ்ல சேர்ந்த பின்பும் கச்சேரிக்குப் போறதை நான் நிறுத்தலை. லீவு நாள்ல கச்சேரி இருந்தா போயிருவேன். படிப்பு முடிஞ்சதும் அத்தைப் பையன்கூட கல்யாணம். கல்யாணத்துக்குப் பிறகு, கச்சேரிக்கு அனுப்ப மாட் டாங்களோன்னு உள்ளுக் குள்ள சின்ன பயம் வந்துச்சு. ஆனா, என் கணவர் மணி கண்டன், ‘உனக்குப் பிடிச்சதை செய்’னு சொல்லி ஊக்கப் படுத்தினார்.

கல்யாணத்துக்குப் பிறகும் பழைய உற்சாகத்தோட வாசிக்கப் போனேன். குழந்தை பிறந்ததும் குழந்தையை அம்மா பொறுப்புல விட்டுட்டு கச்சேரிக்குப் போக ஆரம்பிச் சுட்டேன். விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தற்காலிக தவில் கலைஞர் வேலை, அப்பா, அண்ணாவுடன் கச்சேரி கள்னு வாழ்க்கை பரபரப்பா போயிட்டிருக்கு. இப்ப நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று சரோஜினி முடிக்க கோயிலில் மங்கள இசை முழங்க ஆரம்பிக்கிறது.