Published:Updated:

“இப்பவும் அடிக்கடி தொலைஞ்சு போறேன்...” - கற்றல் குறைபாட்டை வென்ற விஞ்ஞானி பிருந்தா

விஞ்ஞானி பிருந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
விஞ்ஞானி பிருந்தா

எதிர்நீச்சல்

‘`படிப்பே வரலை... சரியா எழுதத் தெரியலை... மறதி புத்தி... யார்கூடவும் பழகறதில்லை...’’ - இப்படிப்பட்ட தொடர் விமர்சனங்களையும் புகார்களையும் எதிர் கொண்டு வளர்ந்தவர் அவர். இன்று உலகின் முன்னணியான ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் வருடங்கள் கடந்தும் நினைவுகூரப்படுகிற இடத்தில் இருக்கிறார். நமக்கு சயின்ட்டிஸ்ட் பிருந்தாவாக அறிமுகமாகிறார். சென்னையில் டைசல் பயோபார்க் லேபின் நிறுவனரான பிருந்தா, தோல்வியின் அர்த்தத்தை மாற்றி எழுதியவர்.

‘`சொந்த ஊர் தேனி. அம்மா, அப்பாவைத் தவிர அவங்க உறவுக்காரங்க எல்லாரும் நல்லா படிச்சவங்க. என் அக்காவும் சூப்பரா படிப்பா. இவங்களுக்கெல்லாம் நேரெதிரா நான் மட்டும் படிப்புல ரொம்ப வீக்கா இருந்தேன். மக்கு, படிப்பே வரலைனு எனக்கு முத்திரை குத்தினாங்க. அதனால எனக்குள்ளேயும் ஒருவித தாழ்வு மனப்பான்மை வந்தது. பெற்றோர் தரப்புலேருந்தும் ஸ்கூல்லேருந்தும் தொடர்ச்சியான அழுத்தம், புகார்கள்னு எல்லாத்தையும் சமாளிக்கிறது பெரிய சவாலா இருந்தது.

உண்மையில் எனக்கு கற்றல் குறைபாடு இருந்தது. ஆனா, அந்த வயசுல அது தெரியலை. படிப்பு ஏறாதது மட்டுமல்ல, நான் யார்கூடவும் அதிகம் பேச மாட்டேன், பெரும்பாலும் என்னைத் தனிமைப்படுத்திப்பேன். என் குழந்தைப்பருவம் மொத்தமும் இப்படித்தான் போச்சு. ஆனாலும் நடந்த எதுக்காகவும் நான் வருத்தப்பட்டதில்லை.’’ - தாழ்வு மனப்பான்மையைத் தன்னம்பிக்கையாக மாற்றிய பிருந்தாவின் முயற்சிகள் பிரமிப்பானவை.

விஞ்ஞானி பிருந்தா
விஞ்ஞானி பிருந்தா

‘`படிப்புதான் வரலையே தவிர பயாலஜி எனக்கு சூப்பரா வந்தது. கற்றல் குறைபாடு, பதற்றம்னு பல பிரச்னைகள் இருந்ததால எனக்கு வேற எங்கேயும் போய் படிக்கப் பிடிக்கலை. அக்கா படிச்ச கிருஷ்ணன்கோவில்ல கலசலிங்கம் காலேஜ்ல சேர்ந்தா பாதுகாப்பா இருக்கும்னு அங்கேயே சேர்ந்தேன். அழுது அடம்பிடிச்சு பயோடெக்னாலஜியில சேர்ந்தேன். ஸ்கூலைவிட காலேஜ் இன்னும் மோசமா இருந்தது. கிட்டத் தட்ட ஜெயில் வாழ்க்கை மாதிரி. ரூல்ஸை மதிக்க மாட்டேங்கிறானு காலேஜ்லயும் எனக்கு கெட்ட பெயர். ஆனா, அதையெல்லாம் தாண்டி நான் பிரமாதமா படிச்சேன். மூணாவது வருஷத்துல எனக்கு அமைஞ்ச இம்யூனாலஜி புரொஃபஸர் என் வாழ்க்கையில மறக்க முடியாதவர். அவருக்கு நான் ஃபேவரைட் ஸ்டூடன்ட்டானேன். என்மேல எனக்கே நம்பிக்கை துளிர்விடத் தொடங்கின தருணம் அது. ஃபைனல் இயர் புராஜெக்ட்டுக்காக ஆஸ்திரியா, வியன்னாவுல சீட் கிடைச்சது. தேனியைவிட்டு வெளியில போகாத நான் முதன்முறையா துணிஞ்சு, தைரியமா வெளிநாட்டுக்குக் கிளம்பத் தயாரானேன்

வியன்னா ஏர்போர்ட்ல போய் இறங்கினதும் யாரோ என்னைத் தள்ளிவிட்ட மாதிரி இருந்தது. கீழே விழுந்தேன். எழுந்து என் பையைப் பார்த்தபோது நான் கொண்டுபோயிருந்த 5,25,000 ரூபாய் மொத்தத்தையும் பிக்பாக்கெட் அடிச்சிருந்தாங்க. பாஸ்போர்ட் மட்டும் தப்பிச்சது. கையில போன்கூட இல்லை. அடுத்து என்ன பண்ணப் போறேன்னு தெரியலை. நான் படிக்கப்போறதா இருந்த லேப்ல இந்தியன் ஸ்டூடன்ட்ஸ் என் நிலைமையைப் பார்த்துட்டு ஆறு மாசத்துக்கு அவங்ககூட தங்க அனுமதி கொடுத்தாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மூணாவது வருஷக் கடைசிலயே வியன்னா போயிட்டதால மறுபடி, இந்தியா வந்து ஃபைனல் இயர் எக்ஸாம் எழுதிட்டுக் கிளம்பிட்டேன். கூடவே அதே யுனிவர்சிட்டியில பிஹெச்.டிக்கு அப்ளை பண்ணினேன். கடுமையான போட்டிகளுக்கு இடையில் இடம் கிடைச்சது. ஆனா, படிப்பை முடிக்கிற வரையிலான நாள்கள் சாதாரண மானவையா இல்லை. இனவெறி, பாலியல் சீண்டல்னு எல்லாத்தையும் அனுபவிச்சேன். இந்த அனுபவங்கள் எல்லாம் என்னை இன்னும் ஸ்ட்ராங்கா மாத்தின. நிறைய அவார்ட்ஸோடு வெளியில வந்தேன். அடுத்து ஜெர்மனியில ஃபெடரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வேக்ஸின்ல ஆறு மாசத்துக்கு ஃபெலோஷிப் கிடைச்சது.

பிஹெச்.டி முடிக்கறதுக்கு முன்னாடியே அத்தைப் பையனோடு எனக்குக் கல்யாணமாயிடுச்சு.அவங்களுக்கு கண் மருத்துவம் தொடர்பான பிசினஸ். கண் பிரச்னைகளுக்கான எதிர்ப்புத்திறன் தொடர்பான சப்ஜெக்ட்ல போஸ்ட் கிராஜுவேஷன் பண்ணலாம்னு ஹார்வர்டு யுனிவர்சிட்டிக்கு அப்ளை பண்ணினேன். செலக்ட் ஆயிட்டேன். ஹார்வர்டு யுனிவர்சிட்டியின் கண் மருத்துவத்துறையில் 28 பேர்ல நான் பெஸ்ட் பிரெசன்ட்டேஷன் அவார்டு வாங்கினேன். கருவிழி டிரான்ஸ்பிளான்ட்டேஷன் தொடர்பான ரொம்ப புதிய ஆய்வு அது.

“இப்பவும் அடிக்கடி தொலைஞ்சு போறேன்...” - கற்றல் குறைபாட்டை வென்ற விஞ்ஞானி பிருந்தா

அமெரிக்காவில் இருந்தபோது குழந்தை பிறந்தது. எனக்கும் என் கணவருக்கும் நிரந்தரமான அமெரிக்க வாழ்க்கையில் விருப்பமில்லை. அங்கே வொர்க் லைஃப் பேலன்ஸ் இல்லை. அங்கேயே தங்கினா சிங்கிள் மதராயிடுவேன்னு தோணுச்சு. குழந்தைக்கு ஆறு மாசமானதும் இந்தியாவுக்கு வந்துட்டேன். வந்ததும் சென்னையில `டைசல் பயோபார்க்' என்ற பெயரில் என் சொந்த ரிசர்ச் லேப் தொடங்கினேன்.பார்வையிழப்புக்கான மருந்து தயாரிப்புக்காக வொர்க் பண்ணிட்டிருக்கேன்’’ - படிப்பே வராது எனப் பழிக்கப்பட்டவர் பட்டங்கள் பாராட்டுகள் என இன்று கம்பீரமாக உயர்ந்திருக்கிறார்.

40 வருட பாரம்பர்யமான அப்பாசாமி அசோசியேட்ஸ், பார்வை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண் மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனம். குடும்ப பிசினஸான இதில் பயோ பார்மசூட்டிகல்ஸ் என்ற பிரிவில் பார்வையிழப்பை மீட்கும் மருந்து தயாரிப்புக்கான ரிசர்ச் அண்டு டெவலப்மென்ட் வேலைகளை மேற்கொண்டு வருகிறார் பிருந்தா. கணவர் ராம், பார்வை தொடர்பான ஆராய்ச்சியாளர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`நான் நோய் எதிர்ப்புத்திறன் ஆலோசகரும் கூட. இப்போ உள்ள வெஸ்டர்ன் மருத்துவத் தால் என்னென்ன பிரச்னைகளை சந்திக்கி றோம்னு பேசறேன். தலைவலிக்கு மாத்திரை போடறோம்னா, அதுக்கான காரணத்தைச் சரி பண்ண மாத்திரை போடறதில்லை. ஹார்ட், கிட்னி, எலும்பு மாற்று சிகிச்சைகள் வரை எல்லாம் இப்படித்தான். எதுக்குமே காரணத்தைச் சரிசெய்யாம தற்காலிகத் தீர்வுகளை நாடுறோம். இதுக்கான மாற்று வேலைகளைப் பண்ணிட்டிருக்கேன். பிரச்னைக்கான மூலகாரணத்தைக் கண்டு பிடிச்சு சரிசெய்யறதுக்கான வேலை அது’’ - காலத்துக்கேற்ற அவசிய தகவல் சொல்பவர், பயணங்களின் காதலியுமாம்.

‘`பெரும்பாலும் தனியா டிராவல் பண்ணுவேன். கற்றல் குறைபாடு இன்னிக்கும் எனக்கு இருக்கு. இப்பகூட என் ஆபீஸ்லேருந்து வீட்டுக்குப் போக வழி தெரியாது. அதை `டைரக்‌ஷனல் டிஸ்லெக்ஸியா'னு சொல்வாங்க. ஒவ்வொரு ட்ரிப்பிலும் தொலைஞ்சு போயிருக் கேன். திரும்பி வர வழி தெரியாம முழிச்சுட்டு நின்னிருக்கேன். லாங்வேஜ் குறைபாடும் உண்டு. மத்தவங்க மாதிரி என்னால வேகமா எழுத முடியாது. இத்தனை பிரச்னைகளைத் தாண்டி எப்படி இந்த இடத்துக்கு வந்தீங்கனு நிறைய பேர் கேட்பாங்க.

பிஹெச்.டி படிச்சிட்டிருந்தபோது புரொஃபஸர்தான் எனக்கு டிஸ்லெக்ஸியானு கண்டுபிடிச்சாங்க. கேள்விகள் கேட்டு அதை உறுதிப்படுத்தினாங்க. ‘இதுக்காக நீ குற்ற உணர்வு கொள்ளவோ, அசிங்கப்படவோ தேவையில்லை. சமாளிக்க கத்துக்கோ’னு சொல்லி அதுக்கான வழிகளையும் காட்டினாங்க. கோபம், பதற்றம், கற்றல் குறைபாடுன்னு எல்லாருக்கும் ஏதோ ஒரு பிரச்னை இருக்கு. ஆனா அதை ஏத்துக்கிறதுலதான் பலருக்கும் தயக்கமே.

இது என் பிரச்னை, இதுலேருந்து நான் வெளியில வந்து வாழ்ந்தாகணும்னு புரிஞ்சுக் கணும். டிராவல் பண்ணா தொலைஞ்சு போயிடறேன்னு டிராவலே பண்ணாம இருக்க முடியாதில்லையா... வாழ்க்கைப் பயணமும் அப்படித்தான்...’’

- தத்துவமாக முடிக்கிறார் பிருந்தா.