Published:Updated:

நாம முடிவு பண்ணிட்டா யாராலும் நம்மை அசைக்க முடியாது! - `தில்லு' காட்டும் `ஜில்லு' ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா

பெண்களுக்கு மீதான பாலியல் வன் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த நெருப்பு வளையத்தில் நின்று 36 மணி நேரம் நடனமாடி உலக சாதனை புரிந்திருக்கிறார்.

நாம முடிவு பண்ணிட்டா யாராலும் நம்மை அசைக்க முடியாது! - `தில்லு' காட்டும் `ஜில்லு' ஐஸ்வர்யா

பெண்களுக்கு மீதான பாலியல் வன் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த நெருப்பு வளையத்தில் நின்று 36 மணி நேரம் நடனமாடி உலக சாதனை புரிந்திருக்கிறார்.

Published:Updated:
ஐஸ்வர்யா
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா

ஒரு வேலையை உருப்படியாகச் செய்வதற்கே திணறுவோருக்கு மத்தியில் சேலத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ஓர் ஆச்சர்ய மனுஷி. நடனம், பேச்சாளர், தொகுப்பாளர், மாடல், நடிகை என பல துறைகளில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.

`` ‘ஜில்லு’ன்னாதான் என்னை எல்லாருக்கும் தெரியும். சின்ன வயசுல ‘தில்லானா மோகனாம்பாள்’ ஜில் ஜில் ரமாமணி ஆச்சி மனோரமா மாதிரி காஸ்ட்யூம்போட்டு ‘தில்லாம் டோமரி டப்பாங்குத்து ஆட்டம் ஆடுவேன்’ பாட்டுக்கு டான்ஸ் ஆட வெச்சிருக் காங்க. அன்னிலேருந்து என் பேர் `ஜில்லு' ஆயிடுச்சு’’ என்பவருக்கு சிறிய வயதிலேயே மேடைப்பேச்சும் கை வந்தது. முறையாக பரதமும் கதக் நடனமும் கற்றிருக்கிறார்.

பெண்களுக்கு மீதான பாலியல் வன் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த நெருப்பு வளையத்தில் நின்று 36 மணி நேரம் நடனமாடி உலக சாதனை புரிந்திருக்கிறார். பாடல் வடிவில் உருவாக்கப்பட்ட திருக்குறளுக்கு பரதநாட்டியம் ஆடியும் அதே நிகழ்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு குருவாக இருந்தும் அந்த முயற்சியை உலக சாதனையாக்கியுள்ளார்.

“நான் அரசுப் பள்ளி மாணவிதான். எட்டாங் கிளாஸ் படிக்கும்போதே சேலம், நாமக்கல் போன்ற இடங்கள்ல லோக்கல் சேனல்ல தொகுப் பாளரா இருந்திருக்கேன். அப்போ தொடங்குன பயணம் இப்பவும் புத்தக வெளியீட்டு விழா, இலக்கிய நிகழ்வுகள், நிறுவன நிகழ்ச்சிகள்னு போயிட்டே இருக்கு. மெகா டிவியில் தொகுப் பாளரா இருக்கேன். 8-ம் வகுப்புலேயே பட்டி மன்றங்களிலும் பேச ஆரம்பிச்சிட்டேன்” என்பவர் இதுவரை 4,000 மேடைகளில் பேசியிருக் கிறார். பெரும்பாலான தமிழ் சேனல்களில் பட்டி மன்றங்கள், விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக் கிறார். 40-க்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் குறும்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார்.

“விளம்பரப் படங்களுக்கு டப்பிங் பேசுவேன். அது மூலமா மாடலிங் வாய்ப்பு கிடைச்சுது. பல ரேம்ப் வாக்ல செலிபிரிட்டி மாடலாவும் கலந்திட்டிருக்கேன்” என்பவர் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் கேரள மற்றும் இலங்கை மணப்பெண் அலங்காரத்துக்காக சிறந்த மாடலுக்கான விருதுகளையும் பெற்றிருக்கிறார். தற்போது மாறன் கந்தசாமி இயக்கும் ‘சில்லாக்கி டும்மா’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சினிமாத் துறையில் ஆரம்பகால கலைஞர்கள் படும் சிரமத்தைத் தோலுரிக்கிறார்...

“ `அட்ஜஸ்ட்மென்ட்’ அப்படின்ற விஷயத் துக்கு சம்மதிக்காததால பல படங்கள்ல இருந்து விலகியிருக்கேன். மாடலிங் துறையில இருக்கிற வங்களுக்கு ஒரு போட்டோஷூட் எடுக்கிறதுங் கிறது ஆரம்ப கால கனவு. அது மூலமாதான் வாய்ப்புகளையே தேடுவாங்க. போட்டோ ஷூட்டுக்குக்கூட அட்ஜஸ்ட்மென்ட் கேப் பாங்க. வளர்ந்த நடிகைகளுக்குத்தான் படங்கள்ல காஸ்ட்யூம், மேக்கப் எல்லாம் கொடுப்பாங்க. என்னைப் போல ஆரம்ப கால கலைஞர்களுக்கு அதெல்லாம் கிடைக்காது. ஒரு படத்துல சான்ஸ் கிடைச்சா அதுக்கான காஸ்ட்யூம், அக்ஸஸரீஸ் எல்லாம் நாங்கதான் ரெடி பண் ணிட்டுப் போகணும். எப்படியாவது முன்னேறிடணும்னு கையில இருந்து காசை செலவழிச்சு ரெடி பண்ணிட்டுப் போய் நிப்பேன்.

நாம முடிவு பண்ணிட்டா 
யாராலும் நம்மை அசைக்க முடியாது! - `தில்லு' காட்டும் `ஜில்லு' ஐஸ்வர்யா

இந்தப் படத்துல நடிக்கணும்கிறதுக்காக இவ்ளோ செலவு பண்ணிருக்காங்க, இந்த நேரத்துல கேட்டா ‘நோ’ சொல்ல முடியாதுன்னு பிளான் பண்ணி கடைசி நேரத்துல செக் வைப் பாங்க. எவ்ளோ செலவு பண்ணியிருந்தாலும் சரி, கிட்டத்தட்ட படப்படிப்பு முடிஞ்சிருந்தாகூட வேண்டாம்னு விட்டுட்டு வந்திருக்கேன். இதுபோல படங்களுக்கு ரெடி பண்ணின பல காஸ்ட்யூம்கள் பயன்படுத்தாமலேயே என்னோட பீரோல அடுக்கி வெச்சிருக்கேன்.

இப்படி தொந்தரவு குடுக்கிறவங்க ஆரம்ப காலத்துல சினிமாத் துறைக்குள்ள நுழைஞ்ச போது அவங்கபட்ட கஷ்டங்களையும் அவமானங்களையும், இப்போ முன்னேற விரும்புறவங்களுக்கு கொடுக்காம இருந்தாலே, பல பேருடைய கனவுகள் ஜெயிக்கும். அதுக்காக சினிமாத் துறையே இப்படித்தான்னு நினைச்சு டாதீங்க. பல நல்லவங்களும் கண்ணியமானவங் களும், புதிய கலைஞர்களைக் கைத்தூக்கி விடுறவங்களும் இந்தத் துறையில இருக்கத்தான் செய்யுறாங்க.

சினிமாத் துறையில மட்டுமில்ல பெண்களுக்கு ஏத்த வேலைன்னு சொல்ற இடங்கள்லகூட இந்தப் பிரச்னைகள் இருக்கு. ஆனா இப்படித் தான் இருக்கணும்னு நாம முடிவு பண்ணிட்டா யாராலும் நம்மை அசைக்க முடியாது. இது மாதிரியான சின்ன சின்ன தடைகளை எல்லாம் தகர்த்துட்டு துணிஞ்சு முன்னேறிகிட்டே இருப் பேன்” - தில்லாகப் பேசி விடைகொடுத்தார் ‘ஜில்லு’ ஐஸ்வர்யா.