Published:Updated:

கேட்டால் மாற்றம் வரும்! - சிறுகதை #MyVikatan

ராணி பள்ளிப் பருவம் முதலே சமூகப் பிரச்னைகள் குறித்த போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் பெற்றிருக்கிறாள்‌. இந்தத் துணிவே அவளை மேலாளரிடம் பேச வைத்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை முடித்த ஓராண்டுக்குப் பின்னர்தான் மும்பையில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. படிக்க வைப்பதில் ஆர்வமாக இருந்த பெற்றோருக்கு மகளை வேலைக்கு அனுப்புவதில் துளியும் ஆர்வமில்லை. ``ஏம்மா நீ வேலைக்குப் போயே ஆகணுமா, அதுவும் எங்கள விட்டுட்டு தனியா இவ்வளவு தூரத்துல நீ எப்படி இருப்ப" என்று அம்மா கூறினார்.

ஆனாலும், வேலைக்குச் செல்வதில் உறுதியாக இருந்தாள் ராணி. ``பின்ன எதுக்கு இந்த நாலு வருஷம் நான் கஷ்டப்பட்டு படிச்சேன், என்னால எல்லாம் சும்மா வீட்ல இருக்க முடியாது" என மும்மரமாகச் சுழன்று மும்பைக்கு ரயில் ஏறிவிட்டாள்.

வேலை கொடுத்த நிறுவனமே ஒரு வாடகை வீட்டையும் தந்து, அலுவலகம் சென்று வர வாகன ஏற்பாட்டையும் செய்திருந்தது. காலையில் அலுவலகம் வந்தாலும், நாள் முழுவதும் சைட்டில்தான் வேலை. புதிதாக வேலை நடந்துகொண்டிருக்கும் சைட் என்பதால் கழிவறை வசதிகள் இல்லாமலிருந்தது.

Woman (Representational Image)
Woman (Representational Image)

ராணி பள்ளிப் பருவம் முதலே சமூகப் பிரச்னைகள் குறித்த போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் பெற்றிருக்கிறாள்‌. இந்தத் துணிவே அவளை மேலாளரிடம் பேச வைத்தது. ``மேடம், சைட்ல எங்களுக்குக் கழிவறை வசதி இல்ல" என்று ஒரு கூட்டத்தில் முதல் ஆளாகக் கேள்வி எழுப்பினாள்.

``ராணி... நீ சரியான கேள்வி கேட்ட. இந்தப் பிரச்னை சம்பந்தமா நாங்க யாரும் பேசல. உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு" என்றாள் ராணியின் தோழி ஸ்வப்னா. ``யெஸ் ஸ்வப்னா, மாதவிடாய் காலத்துல நாள் முழுக்க ஒரே இடத்துல இருக்கோம், பேட் சேஞ்ச் பண்ணக்கூட நேரமும் வசதியும் இல்லை. நீங்க யாரும் கேட்கல, அதான் நானே கேட்டேன்" என்றாள் ராணி.

புராஜெக்ட் ஆரம்பிக்கும்போதே இதைக் கவனிக்காமல் விட்டதால் அவர்களின் க்ளையன்ட், புராஜெக்ட் தொகையில் இருந்து 10% பிடித்துக்கொண்டார்கள். அதோடு, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஒரு வகுப்பை எடுக்க ஏற்பாடு செய்திருந்தது க்ளையன்ட் நிறுவனம். அதில் உரையாற்றிய தொண்டு நிறுவன ஊழியர் மாதவிடாய் குறித்த பல விஷயங்களை விளக்கினார்.

``இப்போ இருக்கும் வணிகச் சூழலுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படும் சானிட்டரி நாப்கின்களில் பல்வேறு வேதிப்பொருள்களை கலந்து தயாரிக்கிறாங்க. அந்த சானிட்டரி நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்க விளைவிப்பதா இருக்கு. மேலும் ஒரே சானிட்டரி நாப்கினை நீண்ட நேரம் மாற்றாமல் பயன்படுத்துவதால் உடலுக்குத் தீங்கு வருகிறது" என்றார் அவர்.

``அப்படீன்னா அதுக்கு ஏதாவது மாற்று வழி இருக்குதா?" - ராணிதான் கேட்டாள்.

நாப்கின்
நாப்கின்

``ஆமா, உலகம் முழுக்கவே பல மருத்துவ நிபுணர்கள் இதற்கான மாற்று வழிகளைப் பரிந்துரை செய்கிறாங்க. அதுல சில வகைதான் மென்ஸ்ட்ரூவல் கப், ஹெர்பல் நாப்கின், பின்ன நம்ம பழைய முறையான பருத்தி துணிகள். இதெல்லாம் சுற்றுச் சூழலுக்கு ஏற்றது. உடலுக்கும் கேடு விளைவிக்காது" என்று வகுப்பை முடித்தார் அவர்.

ராணிக்கு இது ஒரு புதிய தெளிவைக் கொடுத்தது, கிராமத்தில் தான் பாரம்பர்ய முறைகளைப் பயன்படுத்தியதும் ஞாபகம் வந்தது. இந்தத் தகவல்களைத் தன் அம்மாவிடம் பகிர்ந்துகொள்ள செல்போனில் பேசத் தொடங்கினாள் ராணி.

அடுத்த நாள்...

புராஜெக்ட் மதிப்பில் 10% குறைந்தது குறித்து அவளின் நிறுவனம் ராணியின் மீது கோபம் கொண்டது.

அதனால் என்ன?

``ஹலோ ராணி, புராஜெக்ட் மேனேஜர் பதவிக்கு நீங்கள் ஓகேவா..?!" என்று க்ளையன்டிடம் இருந்து அழைப்பும் வந்திருந்தது.

- பாண்டி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு