Published:Updated:

பெண்ணின் வெற்றிக்குப் பின் ஆண் வேண்டும்!

nagalakshmi shanmugam
பிரீமியம் ஸ்டோரி
nagalakshmi shanmugam

மொழி வளம்

பெண்ணின் வெற்றிக்குப் பின் ஆண் வேண்டும்!

மொழி வளம்

Published:Updated:
nagalakshmi shanmugam
பிரீமியம் ஸ்டோரி
nagalakshmi shanmugam

``என் படிப்புக்கும் நான் பார்த்துட்டு இருக்கும் மொழிபெயர்ப்புப் பணிக்கும் சம்பந்தமே இல்லை. ஆனா, தமிழ் ஆர்வத்தாலதான் என் பயணம் சிறப்பா போயிட்டிருக்கு'' என்கிற நாகலட்சுமி சண்முகம், குறிப்பிடத்தக்க பல நூல்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்!

யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’, பாலோ கொயலோவின் ‘ரசவாதி’ உள்ளிட்ட முக்கியமான நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் நாகலட்சுமி சண்முகம். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மிகுந்த புலமை இருப்பவர்களால் மட்டுமே நூலின் நடையும் உள்ளடக்கமும் சிதையாத முறையில் மொழிபெயர்க்க முடியும்.

“என் கணவர் குமாரசாமியும் மொழிபெயர்ப்பாளர் தான். ‘ரகசியம்’ என்ற புத்தகத்தை ஆரம்பகட்ட மொழிபெயர்ப்பு பண்ணும்போது நான் படிச்சுப் பார்த்தேன். நான் பார்த்துட்டு இருந்த ஐ.டி வேலையை விட்டுட்டு வீட்ல இருந்ததால நானே எடிட் செஞ்சு கொடுத்தேன். அந்தப் புத்தகத்துக்குப் பெரிய வரவேற்பு கிடைச்சது. நாமளும் மொழிபெயர்ப்பு பண்ணுவோம்னு பண்ண ஆரம்பிச்சேன். டாக்டர் ஜோஸப் மர்ஃபி எழுதின ‘பவர் ஆஃப் சப் கான்சியஸ் மைண்டு’தான் முதன்முதலாக நான் மொழிபெயர்த்த புத்தகம். ‘ஆழ்மனதின் அற்புத சக்தி’ன்னு தமிழில் வெளிவந்த அந்தப் புத்தகம் பலருக்கும் பிடிச்சிருந்தது. அன்னிக்கு ஆரம்பிச்ச பயணம், ஒன்பது வருஷத்துல 85 புத்தகங்களை தாண்டியிருக்கு'' என்கிற நாகலட்சுமி, மொழிபெயர்ப்புக்காகப் பெற்ற அங்கீகாரங்கள் குறித்து பெருமிதத்துடன் பேசுகிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நாகலட்சுமி சண்முகம்
நாகலட்சுமி சண்முகம்

“2011-ல் மொழிபெயர்ப்பை ஆரம்பிச்சேன். 2014-ல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்துல சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது கொடுத்தாங்க. ‘இறுதிச் சொற்பொழிவு’ புத்தகத்துக்காக ‘நல்லி - திசை எட்டும்’ விருது கிடைச்சது. 2016-ல் தமிழ்நாடு அரசு ‘சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது’ கொடுத்து கௌரவிச்சாங்க. இதையெல்லாம்விட முக்கியமான விருது, வாரத்துக்கு ஒரு தடவையாவது வாசகர்கள்கிட்ட இருந்து வர்ற மின்னஞ்சல்களும் கடிதங்களும்தாம். தமிழைத்தவிர வேற எதையும் படிச்சு புரிஞ்சிக்க முடியாத நிலையில் இருக்குறவங்க மொழிபெயர்ப்பு படிச்சிட்டு மெயில் பண்ணும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.

பயனுள்ள ஒரு விஷயம் பண்றோம்னு ஆத்மார்த்தமா உணர்கிற தருணம் அது'' என்று நெகிழ்கிற நாகலட்சுமி, பள்ளிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மோட்டிவேஷனல் ஸ்பீக்கராகவும் பங்கேற்கிறார்.கல்வி நிலையங்கள், மகளிர் குழுக்கள், தன்னார்வ அமைப்புகள்ல மோட்டிவேஷனல் ஸ்பீக்கரா செயல்பட்டிருக்கேன். இனி அதையும் புரொஃபஷனலா பண்ணலாம்னு இருக்கேன்.

என் கணவர்தான் புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் ஆதரவுதான் எல்லாமே. ஆணுடைய வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. பெண்ணுடைய வெற்றிக்குப் பின்னாடியும் ஆண் இருப்பாங்க. அந்த பரஸ்பர துணை இருந்தால்தான் லைஃப் சந்தோஷமா இருக்கும்.”

நாகலட்சுமி சண்முகத்தின் பேச்சில் தன்னம்பிக்கை யும் உற்சாகமும் மேலோங்கியிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism