``வெற்றிதான் மகிழ்ச்சியைத் தரும்னு சொல்வாங்க. ஆனா, மகிழ்ச்சியா இருந்தால்தான் வெற்றியடைய முடியும்'' என்கிறார் தொழில்முனைவோர் நஸ்ரின். ஒரு பிசினஸை நடத்தவே திக்குமுக்காடுவோர் மத்தியில் பல பிசினஸ்களை வெற்றிகரமாக இவர் நடத்துவதற்குக் காரணம், திட்டமிட்டு நேரத்தைப் பயன்படுத்துவதுதான்!

``11 வருஷப் பயணம் இது. லண்டன்ல டிப்ளோமா இன் எஜூகேஷனல் சைக்காலஜி படிச்சேன். மான்ஃபோர்டு ஸ்கூல்ல கவுன்சிலரா சேர்ந்தேன். விளையாட்டு முறையில் கற்பிக்கும் முறை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, அதை நிறைய ஸ்கூல்ஸ் விரும்பல. அதனால நானே `வின்டர் கேம்ப்' பயிற்சி முகாம்கள் நடத்த ஆரம்பிச்சேன். 40 மாணவர்கள் சேர்ந்தாங்க. என் பிசினஸ் கேரியர் இப்படித்தான் தொடங்குச்சு.

அதன் பிறகு ஸ்கூல், காலேஜஸ், இண்டஸ்ட்ரி, கார்ப்பரேட்ஸ்... இப்படி பலருக்கும் பயிற்சிக் கொடுத்தேன். இப்போ என் நிறுவனத்தில் 72 பயிற்சியாளர்கள் செயல்படறாங்க.

எனக்கு கலர் தெரபி தெரியும்கிறதால நிறுவனங்களுக்கான யூனிஃபார்ம் தேர்வு செய்து கொடுத்தேன். அதுவும் ஒரு பிசினஸா ஒன்பது ஆண்டுகளாகத் தொடருது. இப்போ 136 நிறுவனங்களுக்கு சப்ளை பண்ணிட்டிருக்கோம்.

அடுத்து `லெஷர் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட்'ல ஆர்வம் வந்துச்சு. அதையும் வருமானம் வரக்கூடிய ஒரு பிசினஸா மாத்தியிருக் கேன்'' என்கிறவர் இத்தனை பிசினஸ்களையும் வெற்றிகரமாக நிர்வகிப்பது எப்படி?

``டீம் பில்டிங்தான் என் பலம். எல்லோரையும் என் குடும்பம் மாதிரி பாவிப்பேன். ஒவ்வொருவரும் இதை தன்னோட கம்பெனியா ஃபீல் பண்ணும்படி எங்க செயல்பாடுகள் இருக்கும். என் எல்லா பிசினஸ்களிலும் விஷயம் தெரிஞ்ச ஒருவர் பொது மேலாளரா செயல்படுவார். அவர் பங்குதாரராகவும் இருப்பார்.

ரிலேஷன்ஷிப் பில்டிங், ஹேப்பினஸ் மேனேஜ்மெண்ட் பற்றி என்னோடு வேலை பார்க்கிறவங்களுக்கு பயிற்சி கொடுக்கறேன். என்னோடு பணியாற்றுகிறவர்களில் 80 சதவிகிதம் பெண்கள்தான். அதில் எனக்குப் பெருமைதான்!

`கான்செப்ட் செல்லிங்' என்கிற பார்முலாவை வெச்சு பிசினஸை டெவலப் பண்றோம். எந்த புராடெக்ட் என்றாலும் அது தரமா இருக்கும் என்கிற நம்பிக்கையை கஸ்டமர்கிட்ட ஏற்படுத்தினாலே பாதி வெற்றி உறுதி'' என்கிற நஸ்ரின், சிறந்த பெண் தொழில்முனைவோர், பீனிக்ஸ் விமன், வொண்டர்ஃபுல் டிரெயினர் உட்பட பல விருது களுக்குச் சொந்தக்காரர்!

``பெண்கள் வெற்றியடையணும்னா ஒரே வழிதான்... தங்கள்மீது நம்பிக்கை வெச்சு தைரியமா களத்தில இறங்கணும். முழுமையாகத் திட்டமிடணும். பணத்தைவிட முக்கியமாக நேரத்தை முதலீடு பண்ணணும். நாம பிசினஸ்ல முதலீடு செய்யும் நேரம்தான் நமக்குப் பணமாகத் திருப்பிக் கிடைக்கும்!'' என்று வெற்றி சூத்திரம் சொல்கிறார் நஸ்ரின்.