Published:Updated:

`இனி பிசினஸ் வுமனும் கூட!' - நயன்தாரா தொடங்கிய அழகு சாதன கம்பெனி

நயன்தாரா
News
நயன்தாரா ( Instagram Photo: @thelipbalmcompany )

``ஆரம்பத்தில், மிகவும் மென்மையான உதடுகளைப் பாதுகாக்கும் சிறந்த லிப் பாம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டோம். இது படிப்படியாக வளர்ந்து ஒரு தனித்துவமான தயாரிப்பாக மாறியுள்ளது. லிப் பாம் உதடுகளை மேம்படுத்தி மென்மையாக்குவது மட்டுமல்லாமல், அவற்றை பளபளப்பாகவும் மாற்றும்."

நடிகை நயன்தாரா அழகு சாதனப் பொருளான லிப் பாம் தயாரிப்பில் கால் பதித்துள்ளார். `தி லிப் பாம் கம்பெனி (The Lip Balm Company)' என்ற தன் நிறுவனப் பெயரை அறிவித்துள்ளார்.

தி லிப் பாம் கம்பெனி
தி லிப் பாம் கம்பெனி
Instagram Photo: @thelipbalmcompany

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திரைப்படத் துறையில் `லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, சரும மருத்துவர் ரெனிட்டா ராஜன் என்பவருடன் இணைந்து இந்த லிப் பாம் பிசினெஸை மேற்கொள்ள உள்ளார். அழகு சாதனப் பொருள்களில் முக்கிய அங்கம் வகிக்கும் லிப் பாமை மட்டுமே தயாரிக்க உள்ள இவர்களின் நிறுவனம், அதில் 100-க்கும் மேற்பட்ட வகைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இதுகுறித்து கூறியுள்ள நயன்தாரா, ``சருமப் பராமரிப்பு பொருள்களைப் பொறுத்தவரை நான் காம்ப்ரமைஸ் செய்துகொள்வதே இல்லை. பொதுவாக நான் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருள்களில் நான் எதிர்பார்ப்பது, பாதுகாப்பு மற்றும் ரிசல்ட். `தி லிப் பாம்' நிறுவனத்தின் தயாரிப்புகளிலும் அதே அம்சங்களை உறுதி செய்வோம்" என்கிறார்.

நயன்தாராவுடன் இணைத்து இந்த லிப் பாம் பிசினஸில் கைகோத்துள்ள ரெனிட்டா ராஜன் கூறுகையில், ``ஆரம்பத்தில், மிகவும் மென்மையான உதடுகளைப் பாதுகாக்கும் சிறந்த லிப் பாம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டோம். இது படிப்படியாக வளர்ந்து ஒரு தனித்துவமான தயாரிப்பாக மாறியுள்ளது. லிப் பாம் உதடுகளை மேம்படுத்தி மென்மையாக்குவது மட்டுமல்லாமல், அவற்றை பளபளப்பாகவும் மாற்றும். அந்தக் கூறுகளை மனதில்கொண்டு எங்கள் லிப் பாமை தயாரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவிருக்கிறோம்" என்கிறார்.

நயன்தாரா - ரெனிட்டா ராஜன்
நயன்தாரா - ரெனிட்டா ராஜன்

தங்களது லிப் பாமை நவீனமாகவும், முற்றிலும் இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்க உள்ளதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நடிகை, தயாரிப்பாளர் எனத் தன் அடையாளங்களை அமைத்துக்கொண்ட நயன்தாரா, சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த `Chai Waale' என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தார். இப்போது தொழில்முனைவோராகக் களம் இறங்கியிருக்கிறார்.