அம்மா கன்னியாகுமரியில் ஸ்டாஃப் நர்ஸ், கணவர் நர்ஸிங் படித்துவிட்டு அதே துறையில் ஆசிரியர். நம்மிடம் பேசிய பெர்லின் ஷோபனா சென்னையில் ஸ்டாஃப் நர்ஸ்.

‘`சொந்த ஊர் கன்னியாகுமரி பக்கத்துல ஐக்கியபுரம். அம்மா நர்ஸா இருக்கிறதால அவங்க மத்தவங்களுக்கு செஞ்ச நல்ல விஷயங்கள், எங்க கிராமத்துல அம்மாவுக்குக் கிடைச்ச மரியாதை... இதெல்லாம் சின்ன வயசுல என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணுச்சு. நாமளும் வளர்ந்தப்புறம் நர்ஸ் வேலைக்குத்தான் போகணும்னு தீர்மானம் பண்ணிட்டேன். மொதல்ல டிப்ளோமா இன் நர்ஸிங் படிச்சேன். அப்புறமா பி.எஸ்ஸி நர்சிங் முடிச்சேன். இஷ்டப்பட்டு படிச்சதாலே ரெண்டுத்துலேயுமே டாப்பர்.

அந்தக் காலத்துல நர்ஸா வேலை பார்க்கிறவங்க வீடு வீடா போயி யாருக்காவது உடம்பு சரியில்லையான்னு விசாரிப்பாங்க. எங்கம்மாவும் அப்படித்தான். அப்படி வீடு வீடா போய் உடல் பிரச்னைகளுக்கு மருந்து தர்றதோட நிறுத்திக்காம, அவங்களோட குடும்பப் பிரச்னைகளையும் நிதானமா கேட்டு அட்வைஸ் பண்ணிட்டு வருவாங்க. அதனால, பல குடும்பங்கள் ஒண்ணு சேர்ந்து ஒத்துமையாக வாழ ஆரம்பிச்சிருக்காங்க. அம்மா கூடிய சீக்கிரம் ரிட்டயர்டு ஆகப் போறாங்க'' என்கிறவர் தொடர்கிறார்...

``எனக்கு ரெண்டு குழந்தைங்க. மூத்தப்பிள்ளைக்கு மூன்று வயசாகுது. இளையவனுக்கு ஒண்ணேகால். சென்னையில் வேலை கிடைச்சதும், குழந்தைகளை ஊர்ல அம்மாகிட்ட விட்டுட்டு, வேலைபார்க்க வந்துட்டேன். குழந்தைங்ககிட்ட தினமும் வீடியோ கால்ல பேசுவேன். பெரியவன் ஓரளவுக்குப் பேசுவான். சின்னவனுக்கு `ம்மா... வாம்மா’ தவிர வேற ஒண்ணும் பேசத் தெரியாது. எங்க போன் ரிங் கேட்டாலும் நான்தான் போன் பண்றேன்னு நினைச்சுக்கிட்டு ‘ம்மா... வாம்மா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சிடுறானாம். அம்மா இதை என்கிட்ட சொன்னப்போ அப்படியே உடைஞ்சுட்டேன். என் கணவர், ‘மனசுக்குப் பிடிச்ச வேலை செய்யணும்னா சில தியாகங்களுக்கும் தயாரா இருக்கணும்’னு ஆறுதல் சொன்னார்” என்கிறார்.

“கொரோனாவுக்கு முன்னாடியும் எத்தனையோ தொற்றுநோய் வந்த நோயாளிகளுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கத்தான் செஞ்சிட்டிருந்தோம். அதெல்லாம் உயிர்க்கொல்லி நோய் கிடையாதுங்கிற தைரியம் இருந்துச்சு. இப்போ அது மட்டும்தான் மாறியிருக்கு. மத்தபடி அதே வேலைதான். சிலர் எங்ககிட்ட குடும்பப் பிரச்னையைச் சொல்லி அழக்கூட செய்வாங்க. முன்னாடியெல்லாம் இந்த மாதிரி சம்பவங்களை கேட்கிறப்போ நர்ஸுங்க கண் கலங்குறது நோயாளிகளுக்குத் தெரியும். இப்போ பிபிஈ கிட் போட்டு மொத்த உடம்பு, முகம் எல்லாத்தையும் மறைச்சுடறதால நாங்க அழறது யாருக்கும் தெரியறதில்ல.

கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்காங்க. மத்த நோயாளிகிட்ட பேசறதைவிட இவங்ககிட்ட நிறைய பேச வேண்டியிருக்கு. சின்னக் குழந்தைகளை வெச்சிட்டு இருக்கிறவங்க மரண பயத்துல அழுதுடுறாங்க. `எல்லாம் சரியாகிடும், உங்களை மாதிரி நிறைய பேர் வந்திருக்காங்க’ன்னு ஆறுதல் சொல்லி தேத்துவேன்.

பிபிஈ போட்டுக்கிறதால பயங்கரமா வியர்த்து வழிஞ்சு, மூச்சு விடறதுக்குக்கூட சிரமமா இருக்கும். இன்னும் சில நேரத்துல என் குழந்தைகளைப் பார்க்க முடியலையேன்னு நானே சோர்வா இருப்பேன். ஆனா, அதையெல்லாம் வெளிக் காட்டிக்காமத்தான் வேலை பார்க்கணும்” என்கிறவரிடம், `கொரோனா வார்டில் பணிபுரிகிற நீங்கள் வீட்டில் தனியறையில்தானே இருக்கிறீர்கள்' என்றோம்.

“நாங்க குடியிருக்கிற வீட்ல ஹால், பெட்ரூம், கிச்சன் எல்லாம் சேர்த்து ஒரேயொரு ரூம்தான். அதுல எப்படி தனியா இருக்கிறது” என்று சிரிக்கிற ஷோபனா, “கொரோனா எனக்கும் வரலாம். ஆனா, அதுக்கு பயந்து என் சேவையை நிறுத்திக்க மாட்டேன். இது வேலை மட்டுமல்லீங்க, நான் நம்புற கடவுள்” - சிலிர்ப்புடன் முடிக்கிறார் பெர்லின் ஷோபனா.

சின்னக் குழந்தைகளை வெச்சிட்டு இருக்கிறவங்க மரண பயத்துல அழுதுடுறாங்க. `எல்லாம் சரியாகிடும், உங்களை மாதிரி நிறைய பேர் வந்திருக்காங்க’ன்னு ஆறுதல் சொல்லி தேத்துவேன்.