Published:Updated:

தெருக்குப்பையே உரம்... பூத்துக்குலுங்குது தினம்! - ப்ரீத்தியின் அசத்தல் மாடித்தோட்டம்

மாடித்தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
மாடித்தோட்டம்

பசுமை இல்லம்

பெங்களூரு வாழ் தமிழரான ப்ரீத்தி, தனது வீட்டு மொட்டைமாடியிலும் தனக்குச் சொந்தமான விளைநிலத்திலும் வீட்டுத் தேவைக்கான அனைத்து உணவுப் பொருள்களையும் உற்பத்தி செய்துகொள்கிறார். உருளைக்கிழங்கு தவிர, மற்ற எந்தக் காய்கறிகளையும் பழங்களையும் விலைகொடுத்து வாங்குவதில்லை. விவசாய ஆர்வத்தால் வங்கி உயர் பொறுப்பிலிருந்தும் விலகியிருக்கிறார். வாட்ஸ்அப் மூலம் மதிப்புக்கூட்டல் விற்பனையிலும் அசத்துகிறார். சாலைகளில் உதிரும் இலை தழைகளை உரமாகப் பயன்படுத்துகிறார். இன்னும் ஏராளமான ஆச்சர்யங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் ப்ரீத்தியே உற்சாகமாக விவரிக்கிறார்.

தெருக்குப்பையே உரம்... பூத்துக்குலுங்குது தினம்! - ப்ரீத்தியின் அசத்தல் மாடித்தோட்டம்

“வளர்ந்ததெல்லாம் பெங்களூரில்தான். ‘ஸ்கூல் ஃபிரெண்டுக்கு கேன்சர்’னு ஒருநாள் என்கிட்ட சொல்லி என் பையன் அழுதான். தெரிந்தவர்கள் பலரும் அடுத்தடுத்து கேன்சரால் பாதிக்கப்பட்ட செய்திகள் என் மனதைப் பாதிச்சது. ரசாயன விவசாய முறையால் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதைத் தெரிஞ்சுகிட்டதும், ‘இதுபோன்ற உணவுப் பொருள்களைக் காசு கொடுத்து வாங்கி உடல்நலனைக் கெடுத்துக்கிறது நியாயம்தானா?’னு எனக்குள் நிறைய கேள்விகள் எழுந்துச்சு. வீட்டுத் தேவைக்கான காய்கறிகளை மொட்டைமாடியில் விளைவிச்சுக்க முடிவெடுத்தேன். பாட்டி வீட்டிலிருந்து சில கீரைச் செடிகளைக் கொண்டுவந்து வளர்த்தேன். படிப்படியா செடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன். விடுமுறை தினங்கள்ல இயற்கை விவசாயப் பயிற்சிகளுக்குப் போனேன். ஓய்வுநேரத்துல செடிகளோடும் பூச்சிகளோடும் அதிக நேரம் செலவிட்டேன். மாடித்தோட்ட அனுபவத்தில் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விஷயங்களைக் கத்துக்கிட்டேன். செலவுகளைக் குறைக்க, பழைய பெயின்ட் பக்கெட், பிளாஸ்டிக் கவர் வாங்கி செடிகள் வளர்த்தேன். தினமும் காலையில் ஒரு மணிநேரம் தோட்டத்தைப் பராமரிச்சுட்டுத்தான் வேலைக்குப் போவேன். ஏராளமான காய்கறிச் செடிகள், பழ வகை மரங்களை வளர்த்தேன். பெங்களூரின் பருவநிலையும் சாதகமா அமைஞ்சது. மொட்டை மாடியில் நிறைய மஞ்சள் செடிகளை வளர்க்கறேன். அறுவடை செய்ற மஞ்சள் கிழங்குகள்ல இருந்து, வருஷந்தோறும் ரெண்டு கிலோ மஞ்சள்தூள் கிடைக்கும். இதை நானே தயாரிப்பேன். என் வீடு தவிர, சொந்தக்காரங்க வீடுகள்லயும் பல வருஷமா மஞ்சள்தூளை கடையில் வாங்கறதில்லை” - அசத்தலாகச் சொல்பவர், மொட்டை மாடியில் நர்சரி முறையில் பலவகையான செடிகளை வளர்த்து நண்பர்களிடம் பரிமாறிக்கொள்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தெருக்குப்பையே உரம்... பூத்துக்குலுங்குது தினம்! - ப்ரீத்தியின் அசத்தல் மாடித்தோட்டம்

நான்கு தொட்டிகளில் ஆரம்பித்த ப்ரீத்தியின் மாடித்தோட்டம், சில ஆண்டுகளில் 500 தொட்டிகளுக்கும் மேல் அதிகரித்திருக்கிறது. 1,300 சதுர அடி கொண்ட இவரது மாடித் தோட்டம் பசுமையால் பூத்துக்குலுங்க, ப்ரீத்திக்கு இயற்கை விவசாயத்தின்மீதும் ஆர்வம் திரும்பியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
தெருக்குப்பையே உரம்... பூத்துக்குலுங்குது தினம்! - ப்ரீத்தியின் அசத்தல் மாடித்தோட்டம்

“அஞ்சு வருஷத்துல நிறைய அனுபவங்கள் கிடைச்சதுடன், மொட்டைமாடியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுச்சு. இயற்கை விவசாய ஆர்வத்துல, மூணு வருஷத்துக்கு முன்பு ரெண்டு ஏக்கர் நிலத்தை வாங்கினேன். அந்த நிலம், வீட்டிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கு. அந்த நிலத்தை வளப்படுத்தி, அதில் படிப்படியா பல்வேறு பயிர்களை வளர்த்தேன். பூசணி, புடலை, பீர்க்கன் உள்ளிட்ட பல்வேறு கொடி வகைகள், கேரட், பீட்ரூட், தக்காளி, கத்திரி உள்ளிட்ட ஏராளமான காய்கறிகளும் நிலத்தில் விளையுது. கொய்யா, அத்தி, சப்போட்டா, செர்ரி, அவகோடா, மா, நெல்லி, எலுமிச்சை, ஆரஞ்சு, நாவல், அன்னாசி, திராட்சை, பல வகை வாழை உள்ளிட்ட நிறைய பழ மரங்களுடன், பல வகை ரோஜா, மல்லினு ஏராளமான பூக்களும் சூப்பரா விளையுது. மரவள்ளி, சேப்பை, சர்க்கரைவள்ளினு நிறைய கிழங்குகளும் நல்ல மகசூல் கொடுக்குது. தென்னை, மூலிகைச் செடிகளும் அதிகமிருக்கு. நாட்டு மாடுகள் நாலு இருக்கு. அதுங்களுக்கான தீவனம் கால் ஏக்கர்லயும், அரை ஏக்கர்ல கேழ்வரகும், கால் ஏக்கர்ல கரும்பும் விளையுது. தோட்டத்துல மட்டும் பலநூறு வகையில் 2,000-க்கும் அதிகமான செடிகளும் மரங்களும் இருக்கு.

தெருக்குப்பையே உரம்... பூத்துக்குலுங்குது தினம்! - ப்ரீத்தியின் அசத்தல் மாடித்தோட்டம்

தவிர, வீட்டு மாடித்தோட்டத்துல முள்ளங்கி, தக்காளி, பீன்ஸ், வெண்டை, கத்திரி, முட்டைகோஸ், காலிஃபிளவர், அவரை, காராமணி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், டிராகன் ஃப்ரூட், பேஷன் ஃப்ரூட் உட்பட பலநூறு செடிகளை வளர்க்கிறேன். எங்க இடத்துல சரியா வளராத உருளைக்கிழங்கை மட்டும்தான் கடையில் வாங்குறேன். வீட்டுத்தேவைக்குப் போக மற்ற காய்கறிகள், பழங்களின் இருப்புக் குறித்து வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவிப்பேன். பலரும் வீட்டுக்கே வந்து வாங்கிட்டுப் போயிடுவாங்க. இந்த விவசாயப் பணிகளையெல்லாம் முன்னணி வங்கி ஒண்ணுல சீனியர் மேனேஜராக வேலை செய்துகிட்டேதான் செஞ்சேன்” என்பவர், விவசாய ஆர்வத்தாலேயே ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து விலகியிருக்கிறார்.

தெருக்குப்பையே உரம்... பூத்துக்குலுங்குது தினம்! - ப்ரீத்தியின் அசத்தல் மாடித்தோட்டம்

“கணவர் ஸ்ரீகாந்த் சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட். ஒரு பையன் எம்.பி.பி.எஸ், இன்னொரு பையன் ஸ்கூல் படிக்கிறாங்க. நான் மட்டும்தான் விவசாய வேலைகளைக் கவனிச்சுக்கிறேன். ஒருநாள்விட்டு ஒருநாள் நிலத்துக்குப் போய் விவசாய வேலை களைச் செய்வேன். வெள்ளிக்கிழமை சாயந்திரம் குடும்பத்துடன் தோட்டத்துக்குப் போய் அங்குள்ள பண்ணை வீட்டுல தங்கிடுவோம். மாடித்தோட்டம், விவசாய வேலையில் தினமும் புதுப்புது விஷயங்களைக் கத்துக்கிறதால, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்குது. கெடுதல் இல்லா உணவுகளை உற்பத்தி செய்யும் மனநிறைவுக்கு எதுவுமே இணையாகாது...”

தெருக்குப்பையே உரம்... பூத்துக்குலுங்குது தினம்! - ப்ரீத்தியின் அசத்தல் மாடித்தோட்டம்
தெருக்குப்பையே உரம்... பூத்துக்குலுங்குது தினம்! - ப்ரீத்தியின் அசத்தல் மாடித்தோட்டம்

– மாடித்தோட்டத்தில் நிலவும் மலர்ச்சி, ப்ரீத்தியின் முகத்திலும் பிரதிபலிக்கிறது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உரமாகும் இலை தழைகள்!

“நாங்க வசிக்கும் ராஜராஜேஸ்வரி நகர்ல சாலையோரம் நிறைய மரங்கள் இருக்கு. கீழே உதிரும் இலை தழைகள் குப்பையில் கொட்டப்படுவதுக்கு மாற்றாக, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தலா ஒரு கோணிப்பை கொடுத்தேன். அவங்கவங்க வீட்டு வாசல்ல சேகரமாகும் இலை தழைகளைச் சேகரிச்சு வெச்சிருப்பாங்க. அதைச் சுழற்சி முறையில் எல்லா வீடுகளுக்கும் போய் சேகரிச்சு, எங்க நிலத்துல கொண்டுவந்து கொட்டுவேன். அதனுடன், கரும்புச் சக்கை, உலர்ந்த பூக்களையும் கொட்டி அதன்மீது ஜீவாமிர்தம் தெளிச்சு நிலத்தை வளப்படுத்துவேன். தோட்டத்தில் வளரும் மாடுகள் மூலம் கிடைக்கும் பால், வீட்டுத் தேவைக்கு உதவுது. பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் தயாரிச்சு பயன்படுத்தறேன். மாடித்தோட்டத்தில் 15 நாள்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தம் அல்லது புளிச்சமோரை தண்ணீர்ல கலந்து தெளிக்கிறதால பூச்சித் தொந்தரவுகள் இருப்பதில்லை. மழைநீரை முறையா சேகரிக்கிறதால தண்ணீருக்கும் பிரச்னை யில்லை. முடிஞ்சவரை ஜீரோ பட்ஜெட்ல விவசாயம் செய்றதுதான் என் நோக்கம்” என்கிறார் ப்ரீத்தி.

மதிப்புக்கூட்டலில் ‘அடடே’ ஆச்சர்யம்!

ய்வுநேரத்தில் மதிப்புக்கூட்டல் யுக்திகளில் கவனம் செலுத்தி வாட்ஸ்அப் மூலம் விற்பனை செய்யும் ப்ரீத்தி, “மணத்தக்காளி காய்களை வத்தலாக மாற்றி விற்பனை செய்றேன். இதில் வத்தக்குழம்பும் செய்யலாம்; எண்ணெயில் பொரிச்சும் சாப்பிடலாம். கொய்யா, பப்பாளி, செர்ரி பழங்கள்ல ஜாமும் அன்னாசிப்பழத்திலும் வாழைப்பழத்திலும் அல்வாவும் கேக்கும் தயாரிப்பேன். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஜோனி பெல்லா (Joni bella) கர்நாடகாவுல பிரபலம். இதை டீ முதல் உணவுவரை பலவற்றிலும் பயன்படுத்துவோம். இதை எங்க தோட்டத்துலயே தயாரிப்பேன். கேழ்வரகு மாவுடன், அதில் பிரெட்டும் செய்து விற்கிறேன். தக்காளி சாஸ், மஞ்சள்தூள் விற்பனையும் உண்டு. இவற்றில் குறிப்பிடத்தக்க வருமானமும் கிடைக்குது” என்கிறார் மகிழ்ச்சியுடன்.