Published:Updated:

நயன்தாராவின் வீடும் விக்னேஷ் சிவனின் அட்வைஸும்...

விக்னேஷ் சிவன், நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
விக்னேஷ் சிவன், நயன்தாரா

புரொடக்‌ஷன் டிசைனர் ஸ்வேதா சாபு சிரில் ஷேரிங்ஸ்!

நயன்தாராவின் வீடும் விக்னேஷ் சிவனின் அட்வைஸும்...

புரொடக்‌ஷன் டிசைனர் ஸ்வேதா சாபு சிரில் ஷேரிங்ஸ்!

Published:Updated:
விக்னேஷ் சிவன், நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
விக்னேஷ் சிவன், நயன்தாரா

தமிழ் சினிமா எத்தனையோ வாரிசு நட்சத்திரங்களைப் பார்த்திருக்கிறது. மிக அரிதாகவே வாரிசு டெக்னீஷியன்களைப் பார்க்கிறது. அந்த அரிதானவர்களில் ஒருவர் ஸ்வேதா சாபு சிரில். யெஸ்... பெயரின் பாதியே அவருக்கான அறிமுகம் சொல்லும். தேசிய விருது வென்றவரும் முன்னணி ஆர்ட் டைரக்டருமான சாபு சிரிலின் மகள்.

விக்னேஷ் சிவனின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, த்ரிஷா நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மூலம் புரொடக்‌ஷன் டிசைனராக (ஆர்ட் டைரக்டர்) அறிமுகமாகிறார் ஸ்வேதா. கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு இடம்பெயர்பவர்கள் மத்தியில், ஸ்வேதா, பாலிவுட்டில் அறிமுகமாகி, கோலிவுட்டுக்கு யு டர்ன் எடுத்தவர்.

‘`சென்னைப் பொண்ணுங்க நான். கோடம் பாக்கத்துலதான் குடியிருந்தோம். லயோலா காலேஜ்ல விஸ்காம் படிச்சேன். அப்புறம் ஒரு அட்வர்டைஸ்மென்ட் ஏஜென்சியில வேலை பார்த்தேன். ஸ்கூல் படிச்ச காலத்துலேருந்தே எனக்கு ஃபேஷன் டிசைனர் ஆகணும்னு ஆசை. 2010-ம் வருஷம் நியூயார்க்ல `பார்சன்ஸ் நியூ ஸ்கூல் ஆஃப் டிசை'ன்ல ஃபேஷன் டிசைன் கோர்ஸ் சேர்ந்தேன். ஆனா, அதைப் பாதியில விட்டுட்டு இந்தியா வந்தேன். அப்போ அப்பா என் எதிர்காலம் பத்தி ஒரு முடிவெடுத்தார்.

நயன்தாராவின் வீடும் விக்னேஷ் சிவனின் அட்வைஸும்...

அவர்கிட்ட என்னை அசிஸ்டன்டா சேரச் சொன்னார். டிசைனிங்ல எனக்கிருந்த ஆர்வத்தைக் கவனிச்ச அப்பா, எனக்கு ஆர்ட் டைரக்‌ஷன் பொருத்தமா இருக்கும்னு அட்வைஸ் பண்ணினார். இன்டீரியர் டிசைனிங் உட்பட டிசைன் தொடர்பான எல்லா விஷயங்களும் அதில் இருக்கும்னு அப்பா சொன்னதும் உடனே ஓகே சொல்லிட் டேன்...’’ இன்ட்ரோ கொடுக்கும் ஸ்வேதா, சாயலில் மட்டுமல்ல, வொர்க்கிங் ஸ்டைலிலும் அப்பாவைப் பிரதிபலிக்கிறார்.

‘`அப்பாவுடன் அக்னிபீத், ஹிமத்வாலா, க்ருஷ் உட்பட சில படங்களுக்கு அசிஸ்டன்டா வொர்க் பண்ணேன். அப்புறம் ரூபின் சுசாக்னு பிரபல புரொடக்‌ஷன் டிசைனர்கூட ஹேப்பி எண்டிங், கி அண்ட் கா, டியர் ஜிந்தகி படங்கள்ல வொர்க் பண்ணேன். ரூபின்கூட நான் வொர்க் பண்ண கடைசிப் படம் `டியர் ஜிந்தகி'. அதை முடிச்சபோது பாலிவுட் டைரக்டர் இம்தியாஸ் அலியின் ‘ஜப் ஹாரி மெட் சேஜல்’ பட வாய்ப்பு வந்தது. ஷாருக்கான், அனுஷ்கா ஷர்மா நடிச்ச அந்தப் படம்தான் புரொடக்‌ஷன் டிசைனரா எனக்கு முதல் படம். அப்புறம் மறுபடி அப்பாகூட ‘சாஹோ’ படத்துல சில ஷெட்யூலும், பாகுபலி நெட்ஃபிளிக்ஸ் ப்ரீக்வெல்லயும் வொர்க் பண்ணேன். அப்பதான் கரண் ஜோஹர் டைரக்‌ஷன்ல, ஆலியாபட், ரன்வீர் சிங் நடிக்கிறதா இருந்த ‘தக்த்’ படத்துல கமிட் ஆனேன். ப்ரீ புரொடக்‌ஷன் எல்லாம் முடிஞ்சநிலையில ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி கோவிட் பரவல் காரணமா படம் நின்னு போச்சு’’ - வருத்தத்தில் இருந்தவருக்கு அப்போது வந்ததுதான் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட வாய்ப்பு.

நயன்தாராவின் வீடும் விக்னேஷ் சிவனின் அட்வைஸும்...

‘`ஷாருக் நடிச்ச படத் துல என் வொர்க்கை பார்த்துட்டு, விக்னேஷ் சிவன் எங்கப்பாகிட்ட பேசியிருக் கார். ‘காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துல உங்க பொண்ணு வொர்க் பண்ணுவாங்களா’னு கேட்டிருக்கார். அப்பா என்கிட்ட கேட்டார். நான் ஓகே சொல்லிட்டேன். விக்னேஷ் சிவன் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். ‘உங்க க்ரியேட்டிவிட்டியை யூஸ் பண்ணுங்க. படம் பார்த்தவங்க, ஆர்ட் டைரக்டர் யாருனு கேட்கற மாதிரி இருக்கணும்னு சொன்னார். படத்துல நயன்தாராவோட வீடு நிச்சயம் பேசப்படும். விக்கி சொன்ன மாதிரி யார் ஆர்ட் டைரக்டர்னு நிச்சயம் கேட்பாங்க’’ - ஆவல் கூட்டுகிறார்.

“அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவரைப்பொறுத்தவரை ஷூட்டிங் ஸ்பாட்ல நானும் அவருக்கு ஒரு அசிஸ்டன்ட். அவ்வளவுதான். மகள் என்ற சலுகையெல்லாம் கிடைக்காது. சினிமா ஆர்வம் பெருசா இல்லாததால சின்ன வயசுல அப்பாகூட ஷூட்டிங் போனதில்லை. ஸ்கூல்ல, காலேஜ்ல சாபு சார் பொண்ணுன்னு மரி யாதையா பார்ப்பாங்க. ஆனா, நான் சினிமாவுக்குள்ள வந்தபிறகு தான் அப்பா எவ்வளவு பெரிய ஆளுங்கிறது புரிஞ்சது. புராப்பர்ட்டீஸுக்கான கடைகளோ, ரெஃபரென்ஸோ, இன்டர்நெட் வசதியோ இல்லாத அந்தக் காலத்துல அப்பா எப்படி அவ்வளவு பிரமாதமா வொர்க் பண்ணியிருப்பார்னு நினைச்சு அடிக்கடி வியந்து போவேன்.

கலர் சென்ஸ், அழகுணர்ச்சினு எல்லாமே எனக்கு அப்பாகிட்டருந்து வந்ததுதான். கோடம்பாக்கத்துல நாங்க இருந்த வீட்டை, உலகம் முழுக்க டிராவல் பண்ணி, அவர் கலெக்ட் பண்ண பொருள்களை வெச்சு அவ்வளவு அழகா டெகரேட் பண்ணியிருப்பார். அக்கம்பக்கத்துல உள்ளவங்க எல்லாம் எங்க வீட்டை பாராட்டத் தவறினதே இல்லை. அந்த ஸ்டைல் எனக்குள்ளேயும் வந்திருக்கு. என் முதல் பாலிவுட் படத்தைப் பார்த்துட்டு, ‘எது ரியல், எது ஆர்ட் டைரக்‌ஷன்னே தெரியலை. நிஜமா நல்லா பண்ணியிருக்கே... முதல் படம்னு சொல்ல முடியாத அளவுக்கு அனுபவமுள்ள ஒருத்தர் பண்ணின வொர்க் மாதிரி இருக்கு’ன்னு சொன்னார் அப்பா. அப்பாவோட அந்தப் பாராட்டு அவார்டு வாங்கின மாதிரி இருந்தது...’’ சிலிர்க்கும் ஸ்வேதாவுக்கு அப்பாவின் படங்களில் காலாபாணி, எந்திரன், பாகுபலி மூன்றும் ஃபேவரைட்ஸாம்.

‘‘ஏன் நிறைய பெண்கள் இந்தத் துறைக்கு வர்ற தில்லைனு கேட்கறாங்க. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுக்குமே சினிமா இண்டஸ்ட்ரியில தாக்குப் பிடிக்கிறது கொஞ்சம் சவாலான விஷயம்தான். அதுலயும் ஆர்ட் டைரக்‌ஷன் மாதிரியான துறைகள் இன்னும் சவாலானவை. பெண்கள் பெரும்பாலும் கம்ஃபர்ட் ஸோனுக்குள்ளேயே இருந்து பழகினவங்க. அதைவிட்டு வெளியே வந்து ரிஸ்க் எடுக்க யோசிக்கிறாங்க. தவிர பெண்களுக்கு சினிமா இண்டஸ்ட்ரி எந்தளவுக்குப் பொருத்தமானதுங்கிற கேள்வி இன்னும் நிறைய பேருக்கு இருக்கு. டைமிங் பார்த்து வேலை செய்ய முடியாது. விடிய விடிய செட்டுல இருக்க வேண்டியிருக்கும்.

நயன்தாராவின் வீடும் விக்னேஷ் சிவனின் அட்வைஸும்...
நயன்தாராவின் வீடும் விக்னேஷ் சிவனின் அட்வைஸும்...

நடு ராத்திரியில வேலைனு கூப்பிட்டாலும் நான் ஓடியிருக்கேன். தொடர்ச்சியா 36 மணி நேரமெல்லாம் வொர்க் பண்ணியிருக்கேன். என் குடும்பத்துல உள்ளவங்களுக்கு இந்தத் துறையைப் பத்தி தெரியும்ங்கிறதால எனக்கு சப்போர்ட் பண்ணி னாங்க. எல்லாப் பெண்களுக்கும் அந்த சப்போர்ட் கிடைக்கும்னு சொல்ல முடியாது. தவிர ஆர்ட் டைரக்‌ஷன் என்பது சாதாரண வேலையில்லை. பட்ஜெட், டெட்லைன், திடீர் திடீர் மாற்றங்கள், கடைசி நேர கேன்சலேஷன்ஸ்னு எந்நேரமும் டென் ஷன்லயே வெச்சிருக்குற வேலை. அதுக்கு எத்தனை பேர் ரெடியா இருப்பாங்க...’’ காரணம் சொல்பவர், கனவும் வைத்திருக்கிறார்.

‘‘கரண் ஜோஹரின் ‘தக்த்’ படம் என் ட்ரீம் புராஜெக்ட். நிறைய கனவுகளோடும் ஆசைகளோடும் அந்தப் படத்துக்காக ரெடி ஆயிட்டிருந்தேன். மறுபடி எப்போ தொடங்கினாலும் உற்சாகத்தின் உச்சத்துக்கே போயிடுவேன். அந்த நாளுக்காக ஐம் வெயிட்டிங்’’ என்கிறார்.

நயன்தாரா வீட்டைப் பார்க்க நாங்களும் வெயிட்டிங்.