22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஆரோக்கியமான பால்யத்தை அளிக்க வேண்டும்!

பிரியா கோபாலன், சந்தியா ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியா கோபாலன், சந்தியா ராஜன்

இணைந்த கைகள்

கனடா, அமெரிக்கா என ஆளுக்கொரு திசையில் வாழ்ந்துவந்த இந்த இரண்டு அம்மாக்களும் இணைந்தது, அவரவர்களின் பிள்ளைகளின் விளையாட்டுத்தனத்தால்! சந்தியா ராஜன், பிரியா கோபாலன் ஆகிய அம்மாக்களின் முயற்சியில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி!

குழந்தைகளுக்காக இயங்கும் ஸ்போர்ட்ஸ் அகாடமிகளில் முக்கியமானது, சென்னையின் `கிரேட் கோல்ஸ்’. ஆறு கிளைகளைக்கொண்ட இந்த அகாடமி, சந்தியா ராஜன், பிரியா கோபாலன் ஆகியோரின் தோழமையில் உருவானது. பிரியா, அடிப்படையில் இன்ஜினீயர். சந்தியா, குழந்தைகளுக்கான அறிவியல் ஆசிரியர். சில வருடங்களுக்கு முன் ஒருவரை ஒருவர் அறிந்திராத இவர்கள், இன்று இவ்வளவு பெரிய அகாடமியை இணைந்து நடத்துவதன் பின்னணியில் சுவாரஸ்யமான ஒரு ஃப்ளாஷ்பேக் உண்டு.

பிரியா கோபாலன், சந்தியா ராஜன்
பிரியா கோபாலன், சந்தியா ராஜன்

சென்னையின் முக்கியமான பள்ளியொன்றில், இருவரின் குழந்தைகளும் ஒன்றாகப் படித்து வந்துள்ளனர். ஒரே வயதையொட்டிய இருவரும், ஸ்போர்ட்ஸ் ஃபிரெண்ட்ஸ். தங்கள் குழந்தைகளின் விளையாட்டுத் திறனை மெருகேற்ற என்ன செய்யலாம் எனக் கலந்து ஆலோசித்துள்ளார்கள் இந்த அம்மாக்கள்.

“விளையாட்டில் ஃபிட்னெஸ் மட்டுமில்லாம மன ஆரோக்கியம், ஒழுக்கம், குழுச் செயல்பாடு, தன்னம்பிக்கை, மல்ட்டி டாஸ்கிங்னு எல்லாம் கிடைக்கும். எங்க ரெண்டு பேரோட பசங்களுக்கும் பிடிச்ச கால்பந்து விளையாட்டுக்கு, கோச்சிங் சென்டர் தேடினப்போ, ஒருகட்டத்துல, ஏன் அதை நாமே தொடங்கக் கூடாதுன்னு தோணுச்சு. ‘கிரேட் கோல்ஸ்’ ஆரம்பமானது’’ என்கிறார் சந்தியா ராஜன்.

“தொடக்கத்துல, நாற்பது பசங்க - நான்கு கோச்சுகளோடு கால்பந்துக்கான பயிற்சியை மட்டும் தொடங்கினோம். இப்போ, கூடைப்பந்துக்கும் பயிற்சி கொடுக்கிறோம். ஐந்நூறுக்கும் மேற்பட்ட பசங்களும் 18 கோச்சுகளும் இருக்காங்க. நான்கு முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எங்ககிட்ட பயிற்சி எடுத்திட்டிருக்காங்க. 13 வயதுக்குப் பிறகு, டோர்னமென்டுக்கு தயார் செய்வோம்’’ என்கிறார் பிரியா.

‘`எங்களுடைய ‘டேக் லைன்’, `Where skill meets fun’. விளையாட்டை விளையாட்டா சொல்லிக் கொடுத்து திறனை மெருகேற்றணும். ‘கிரேட் கோல்ஸ்’ ஆரம்பிச்சு, ஏழு வருஷம் நிறைவடையப் போகுது. நிறைய புது விஷயங்களை முயன்று, நாங்க நினைச்சதைவிட ஒருபடி அதிகமா வெற்றி பெற்றிருக்கிறோம் என்ற திருப்தி எங்களுக்கு இருக்கு. போன வருஷம், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் (AIFF) அங்கீகாரம் பெற்றோம். எட்டு, ஒன்பது வயசுல எங்ககிட்ட சேர்ந்த ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் இப்போ பதின்பருவத்துல இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் உடலுக்கும் மனசுக்கும் ஆரோக்கியமான ஒரு பால்யத்தை நாங்க உருவாக்கிக்கொடுத்திருக்கோம். இதைவிட வேறு என்ன வேணும் பிசினஸ் சாட்டிஸ்ஃபேக்‌ஷனுக்கு?” - மனம் நிறைந்து சொல்கிறார்கள் தோழிகள்!