லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவள் வாசகி: இப்போது நேஹாவின் வயது ஒன்று!

ஜெயலட்சுமி ரஞ்சித்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயலட்சுமி ரஞ்சித்

குரு வணக்கம்

நாங்கள் அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் இருக்கிறோம்.
அவள் வாசகி: இப்போது நேஹாவின் வயது ஒன்று!

இங்குள்ள மாண்டிசோரி பள்ளியில் என் குழந்தைகள் (சஞ்சய், நேஹா யாழினி) இருவரும் படித்தார்கள். நேஹாவின் பிறந்தநாளுக்கு அவள் வகுப்பில் உள்ள குழந்தைகளுக்கு கேக் எடுத்துக்கொண்டு போனேன். இங்கே ஆசிரியர்களும் குழந்தைகளோடு சரிசமமாகக் கீழே அமர்ந்துதான் சொல்லிக் கொடுப்பார்கள். வகுப்பின் நடுவில் சூரியனின் படம் வைத்திருந்தார்கள். நேஹா கையில் ஒரு பூமி உருண்டையைத் தந்து மெள்ள மெள்ள சூரியனை சுற்றி வரச் சொன்னார்கள். அவள் ஒருமுறை சுற்றி வந்ததும், ‘இப்போது நேஹாவின் வயது ஒன்று’ என்று ஆசிரியர் சொல்ல குழந்தைகள் கைதட்டினார்கள். நான்கு சுற்று முடிந்த பிறகு, பிறந்தநாள் வாழ்த்து பாடினார்கள். அறிவியல் செய்தியை மிக அருமையாகக் குழந்தைகளுக்கு உணர வைத்ததைப் பார்த்து மகிழ்ந்தேன்.

ஜெயலட்சுமி ரஞ்சித்
ஜெயலட்சுமி ரஞ்சித்
அவள் வாசகி: இப்போது நேஹாவின் வயது ஒன்று!

இங்கே மே முதல் வாரத்தை ஆசிரியர்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் கொண்டாடுகின்றனர். முதல் நாள் குழந்தைகள் அவர்களுக்குப் பிடித்த காலை உணவை எடுத்துக்கொண்டுபோய் ஆசிரியருடனும் நண்பர்களோடும் பங்கிட்டுச் சாப்பிடுவார்கள். அடுத்த நாள் விதவிதமான பூக்களைச் சேகரித்து பொக்கே செய்து பரிசளிப்பார்கள். அடுத்த நாள் பிடித்த இனிப்பை எடுத்துச் செல்வார்கள். நான்காம் நாள் தாங்களே வாழ்த்து அட்டை தயாரித்து வகுப்பில் உள்ள போர்டில் ஒட்டிவைத்துப் பெருமைப்படுத்துவார்கள். கடைசி நாள் அனைத்து பெற்றோர்களும் சேர்ந்து பரிசளித்து ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துவார்கள். முடிவில் ஆசிரியர்கள் ஒவ்வொரு குழந்தையின் திறமையையும் அந்தந்த பெற்றோரிடம் கூறி ஆசீர்வதித்து அனுப்புவார்கள். மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும். இப்படி மாண்டிசோரி பருவத்தில் என் குழந்தைகள் அடைந்த மகிழ்ச்சிக்கு இணையாக நானும் மகிழ்ச்சி அடைந்தேன்!

ஜெயலட்சுமி ரஞ்சித், அமெரிக்கா