என் கணவருக்குச் சமைக்கத் தெரியாது என்றெல்லாம் சொல்ல மாட்டேன். `நான் தனியாக இருந்து வெளியூரில் வேலை பார்த்தபோது அதை செய்வேன், இதை செய்வேன்... நண்பர்கள் வந்தால் எனக்கு காலி பாத்திரத்தைத்தான் வைப்பார்கள்' என்றெல்லாம் கல்யாணமான புதிதில் சொல்வார். கல்யாணமான சில வருடங்கள் அவரின் ஊரிலேயே பணி. கூட்டுக்குடும்பமாக அப்போது இருந்ததால் அவர் கிச்சன் பக்கமே வரமாட்டார். பிறகு டிரான்ஸ்ஃபரில் வேறு ஊர்களில் இருந்தபோதும், ஆபீஸே கதி என்றிருந்ததால், அவரின் உணவுப் பக்குவங்களை நான் சாப்பிட்டதில்லை. ஆனால், ரசித்து ருசித்து, (நிறை)குறைகள் சொல்லி சாப்பிடுவார்.

நடுநடுவில், ``நான் அதை செய்வேன், இதை செய்வேன் என்பீங்க. இப்ப எந்த சத்தத்தையும் காணுமே. சத்தம் வாயில்தான் வருது, கிச்சனில் பாத்திரத்தில் எந்த சத்தத்தையும் கேட்க முடியலை'' என்றேன்.

ஊரடங்கு காலத்தில் ஏராளமான வேலைகளை நான் மட்டும் செய்வதைப் பார்த்து, அவருக்கே பரிதாபம் சுரந்து, வீட்டு வேலைகளில் பங்கெடுக்க ஆரம்பித்தார். ``எடுபிடி வேலை செய்வது கஷ்டம். கரண்டியைப் பிடித்தால்தான் உங்க நளபாகத்தை நானும் சுவைக்க முடியும்'' என்றேன்.

``ஓகே. ஆனால், நான் கேட்பதை மறுபேச்சு பேசாமல் கொடுக்கணும், நாளை ப்ரேக்ஃபாஸ்ட் செய்துடறேன். வெண்கலப் பானை வேண்டும்'' என்றார். பொங்கல் பண்டிகைக்காக வைத்திருந்த வெண்கலப் பானையை எடுத்து, புளி போட்டுத் தேய்த்துக்கொடுத்தேன். ``கிச்சனுக்குள் யாரும் வரக்கூடாது. நான் ரெடின்னு சொல்கிறவரை, எதுவும் சாப்பிடாமல் காத்திருக்கணும்'' என்று சமையலறைக்குள் நுழைந்தார். எனக்குப் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. `எப்படா கூப்பிடுவார்' என்ற நினைப்பில் அப்படியே கண் அசந்துவிட்டேன்.

`ரெடி' என்ற குரல் கேட்டு விழித்தால் மணி 9:30. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக, கண்களுக்கு அற்புதம், ஆஹா, நாசிக்கு கமகம வாசனை, உடம்புக்கு உன்னதம், ஊட்டச்சத்துமிக்க எளிய உணவு. ஔஷதமாம் அஃதே உணவு (உணவே மருந்து) என சுத்தத்துடனும் சுவையுடனும் பரிமாறினார் பாருங்கள்... அசந்தே விட்டேன். என்ன என்கிறீர்களா... வெண்கலப்பானையில் செய்த மல்டி நியூட்ரி வெஜ் மிக்ஸ் வடிகஞ்சி... பாரம்பர்ய ருசி!

ரமா ஜெயராமன், திருச்சி