
லாக் டெளன் திறமைகள்

கும்பகோணத்தில் வசிக்கிறேன். இந்த லாக் டௌன் காலத்தில் நான் கற்றுக்கொண்ட விஷயங்களுள் ஒன்று கைவினைப் பொருள்கள் செய்வது. எனக்குள் இதுவரை இருந்த க்ரியேட்டிவிட்டியை இந்த லாக் டெளன்தான் வெளிக்கொண்டு வந்தது. செய்தித்தாள்கள், ஐஸ்குச்சி, வளையல் போன்றவற்றில் ஊஞ்சல், போன் ஸ்டாண்டு, பூக்கள் போன்ற கைவினைப் பொருட்களைச் செய்து மகிழ்கிறேன்.
காலையில் எழுந்ததுமே எப்போதடா கிராஃப்ட் செய்ய ஆரம்பிப்போம் என்றிருக்கும். அனைவருக்கும் காலை உணவைச் சமைத்துப் பரிமாறி முடித்தவுடனே, என்னுடைய கிராஃப்ட் வேலையை ஆரம்பித்து விடுவேன்.

இப்போது யூடியூபைப் பார்த்து விதவிதமாக சமைத்தும் பார்க்கிறேன். அதையெல்லாம் என் வீட்டினர் சாப்பிட்டுவிட்டு புகழும்போதும் ‘ஆஹா’ என்றிருக்கிறது.
இந்த லாக் டௌன் காலம் என்னுள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வர ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. என் குடும்பத்தினரின் ஆதரவும் கணவரின் ஊக்கமும் என் திறமையை வெளிக்கொண்டு வரச் செய்துள்ளது.
எஸ்.நித்யலக்ஷ்மி கும்பகோணம் - 1