லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவள் வாசகி: விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!

விஸ்வரூப வெற்றி
பிரீமியம் ஸ்டோரி
News
விஸ்வரூப வெற்றி

அம்மாதானே எல்லாம்...

துரையில் வசிக்கிறேன். கல்யாணமாகி எட்டு மாசம் ஆகுது. என் அம்மா ஜெயந்தி சந்திரன்... பள்ளிப் படிப்பே முடிக்காத கலையரசி. ரங்கோலி, பென்சில் டிராயிங், வாட்டர் கலர் பெயின்டிங், ஃபேப்ரிக் பெயின்டிங், டைல் பிரின்டிங் எல்லாம் சூப்பரா பண்ணுவாங்க. என் தம்பி ராம் முகிலன், அம்மாவின் வாரிசு. அவனும் எல்லாவிதமான பெயின்டிங்ஸும் வரைவான். நான், அவனுக்கு நேரெதிர். கோடுகூட நேரா போட வராது. என் அம்மா, `என் பொண்ணுன்னு வெளியே சொல்லாதே'ன்னு கலாய்ப்பாங்க!

அவள் வாசகி: விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!

என் கணவர் மோகன் வங்கி ஊழியர். கொரோனா காலத்திலும் அத்தியாவசியப் பணி என்பதால் அவர் வேலைக்குப் போய்விடுகிறார். அதனால் இந்த லாக் டௌன் நாள்கள் மிகவும் கொடுமையாகத் தனிமையில் கழிந்தது. அதுபற்றி அம்மாவிடம் புலம்பினேன். அவர், ``ஏதாச்சும் வரைஞ்சு பாரு... பொழுதுபோகும். தனிமை உண‌ர்வையும் தவிர்க்கலாம்'' என்றார். ``காமெடி பண்ணாதீங்கம்மா... நானாவது வரையறதாவது''ன்னு சொன்னேன். அம்மா, ``அப்படியெல்லாம் சொல்லாதே `சித்திரமும் கைப்பழக்கம்`னு சொல்வாங்க. முயற்சி செஞ்சு பாரு''ன்னு ஊக்கப்படுத்தினாங்க.

அவள் வாசகி: விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!

ஒரு நொடி யோசிச்சுப் பார்த்தேன். ``முயற்சி பண்றேன்மா'' என்றேன். அடுத்த நாள் பென்சில், பேப்பர் எல்லாம் தேடி எடுத்து வரைய ஆரம்பிச்சேன். `விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியாயிடுச்சு. இந்த கொரோனா லாக் டௌன் நாள்களில் கிடைச்ச நேரத்தில் எல்லாம் வரைந்து வரைந்து பழகி, சொன்னா நம்ப மாட்டீங்க... நான் இப்ப, டூடுல் ஆர்ட், வொர்லி ஆர்ட்னு எல்லாத்திலேயும் ஓரளவுக்கு எக்ஸ்பர்ட் ஆகிட்டேன். என் கணவரும் ஆஹா ஹோன்னு பாராட்டுகிறார்.

இதற்கெல்லாம் காரணம் என் அம்மா... நம்ம மேல அலாதி அன்பும் அதிக நம்பிக்கையும் வைக்கிற ஒரே மனுஷி அம்மாதானே... லவ் யூ அம்மா!

யாழினி சந்திரன், மதுரை