Published:Updated:

`பாட்டியுடன் வாழப் பழகிக்கலாம்!' - சென்னை பி.ஜி வாழ்க்கை தந்த அனுபவங்கள்! #MyVikatan

பாட்டி

மொத்தமா 5 அப்பார்ட்மென்ட்கள் சேர்ந்தது PG. எல்லாருக்கும் சேர்த்து நான் தங்கி இருந்த அப்பார்ட்மென்ட்லதான் சமைப்பாங்க. சமையல் ஓகே ரகம். சாப்பிடற மாதிரிதான் இருக்கும்.

`பாட்டியுடன் வாழப் பழகிக்கலாம்!' - சென்னை பி.ஜி வாழ்க்கை தந்த அனுபவங்கள்! #MyVikatan

மொத்தமா 5 அப்பார்ட்மென்ட்கள் சேர்ந்தது PG. எல்லாருக்கும் சேர்த்து நான் தங்கி இருந்த அப்பார்ட்மென்ட்லதான் சமைப்பாங்க. சமையல் ஓகே ரகம். சாப்பிடற மாதிரிதான் இருக்கும்.

Published:Updated:
பாட்டி

என் சென்னை வாழ்க்கையும் உங்களைப்போல காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்கூடதான் ஆரம்பிச்சது. ஹாஸ்டல் லைஃப் கொஞ்ச காலம், அப்புறம் ரூம் எடுத்து சமைக்கத் தெரியாம சமைச்சுச் சாப்பிட்டு ஒரே ஃபேமிலியா நிறைய காலம்னு போய்ட்டு இருந்தது.

ஒரு ஸ்டேஜ்ல ஃப்ரெண்ட்ஸ்லாம் கல்யாணம், ஆன்சைட்னு கிளம்பிட்டாங்க. நான் ஹாஸ்டல் லைஃப்-க்கே திரும்ப வேண்டிய சூழல். ஒரு PG(Paying Guest) அப்பார்ட்மென்ட்ல சேர்ந்தேன். என்னைத் தவிர அங்க எல்லாரும் ஸ்டூடன்ட்ஸ். தெலுங்கு, ஹிந்தி ஆள்கள்தான் அதிகம் அங்க.

மொத்தமா 5 அப்பார்ட்மென்ட்கள் சேர்ந்தது PG. எல்லாருக்கும் சேர்த்து நான் தங்கி இருந்த அப்பார்ட்மென்ட்லதான் சமைப்பாங்க. சமையல் ஓகே ரகம். சாப்பிடற மாதிரிதான் இருக்கும். ஆனா, ஆபிஸ் லன்ச்ல யாரும் சீண்ட மாட்டாங்க(அது ஒருவகையான தீண்டாமை!).

Apartment
Apartment

குக் பாட்டியும் எங்ககூடதான் தங்கியிருப்பாங்க. அந்தந்த நேரத்துக்கு சமைப்பாங்க. சீரியல் பாப்பாங்க. நான் ஆபிஸ் முடிஞ்சு போற நேரத்துல தூங்கியிருப்பாங்க. பெருசா யார்கிட்டயும் பேச மாட்டாங்க. கம்ப்ளைன்ட்ஸ் எதுவும் இல்லாம போயிட்டு இருந்தது. சம்பளம் சேர்த்து கேட்டாங்கனு திடீர்னு ஒருநாள் ஆள மாத்திட்டாங்க.

இப்ப புதுசா வந்த பாட்டி அப்படியே ஆப்போஸிட். ஆள் பார்க்கவே மிரட்டலா இருப்பாங்க. கனீர் குரல். சாதாரணமா பேசுனாலே சண்டை போடற மாதிரிதான் இருக்கும். சண்டையும் நிறைய போடுவாங்க. அவங்களுக்கு யார் கூடவும் செட் ஆகல. என் டைமிங் சொல்லவே வேணாம். PGல எல்லாரும் 7 - 8 மணிக்குள் சாப்பிட்டு முடிச்சுடுவாங்க.

நான் 9 மணிக்குத்தான் ரூம்க்கே போவேன். பாட்டி அப்பதான் எல்லா வேலையும் முடிச்சுட்டு ஹால்ல டிவி பாக்குற பொண்ணுங்ககிட்ட சண்டை போட்டு டிவி, லைட்லாம் ஆஃப் பண்ணுட்டு தூங்க ஆரம்பிப்பாங்க. நான் கரெக்ட்டா அந்த டைம்க்குதான் என்ட்ரீ. `ஹால்ல நடக்காத... கிச்சன் லைட் போடாத'னு அடுத்த சண்டை ஆரம்பிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாட்டி வந்த கொஞ்ச நாள்லயே கம்ப்ளைன்ட்ஸ் பறந்துச்சு. ஆனா, பெருசா ஓனர் கண்டுக்கல. நாங்களும் பலவழிகள்ல யோசிச்சு கடைசில `பாட்டியுடன் வாழப் பழகிக்கொள்ளலாம்'னு முடிவு எடுத்தோம். மொழி தெரியலைன்னாலும் எல்லாப் பொண்ணுங்ககிட்டயும் ஏதாவது பேசிட்டு இருப்பாங்க. நாங்க ஒரு 3 பேர் பாட்டிக்கு ஃபுல்டைம் ட்ரான்ஸ்லேட்டரா மாறிட்டோம்.

நாங்க பாட்டி பத்தி புலம்பிட்டு இருந்த காலம் போய், பாட்டி எங்ககிட்ட புலம்புற காலம் வந்துச்சு. அதுலயும் நான் ரொம்ப பொறுமையா அவங்க சொல்ற கதையெல்லாம் கேட்டுட்டு இருப்பேன். `9 மணிக்கு கிச்சன் லைட் போடாத'னு சண்டை போட்டவங்க, இப்போ நான் எவ்ளோ லேட்டா வந்தாலும் முழிச்சு இருந்து நான் சாப்பிடற வரைக்கும் கூடவே இருந்து பேசுற அளவுக்கு நெருக்கமாகிட்டாங்க. அந்த கனீர் குரல்ல அவங்க சிரிக்குறதும் நல்லா சத்தமா இருக்கும். எங்கள் PG-ல் எல்லா நாளும் கார்த்திகை ரேஞ்சுக்கு மாறிடுச்சு.

Apartment
Apartment

நான் ஆபீஸ் கிளம்புறதுக்கு முன்னாடி எப்பவும் சாமி கும்பிட்டுதான் கிளம்புவேன். பாட்டி எல்லாத்தையும் பாத்துட்டு இருப்பாங்க. ஏதோ ஒருநாள் கோவில் போறப்ப பாட்டிய கூப்பிட்டேன். அவங்க வரல. அன்னைக்குத்தான் சொன்னாங்க. அவங்களுக்குக் குழந்தை இல்லை‌. அவங்க வீட்டுக்காரர் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டாங்க. பாட்டி 40 வருஷமா தனியாதான் இருக்காங்க. "நான் போகாத கோயில் இல்ல, வேண்டாத தெய்வம் இல்ல. எந்த தெய்வமும் என் வயித்துல ஒரு புள்ளைய தரல. அதனால நான் சாமி கும்பிடறது இல்ல"னு சொன்னாங்க. அப்பவே கண் கலங்கிடுச்சு.

அவங்க 40 வருஷமா நிறைய காலேஜ் ஹாஸ்டல்ல குக்கா (அம்மாவா) இருந்திருக்காங்க. இப்பவும் அப்பப்போ எனக்கு அவங்க நினைப்பு வந்துடும்.

பாட்டி... உங்க குரலும், சிரிப்பும், எதிர்பார்ப்பு இல்லாத அன்பும், நான் PG விட்டு வரும்போது கலங்கிய உங்க கண்களும் என்னைக்கும் என் நினைவில் இருக்கும். லவ் யூ பாட்டி!

- மலர்விழி