Published:Updated:

லாக்டெளனில் நான்!

லாக்டெளனில் நான்!
பிரீமியம் ஸ்டோரி
News
லாக்டெளனில் நான்!

#Lifestyle

`அவள் வாசகிகளே... இந்த லாக்டெளன் நமக்கு நிறைய சிக்கல்களையும் அதேநேரம் புதிய அனுபவங்களையும் தந்திருக்கிறது. `நீங்கள் எதிர்கொண்ட சவால் என்ன, அதை எப்படிச் சமாளித்தீர்கள், அதிலிருந்து நீங்கள் பெற்ற அனுபவம் என்ன என்பதை கமென்ட்டாக இங்கே பதிவிடுங்கள். அவற்றில் சிறந்ததாக அவள் ஆசிரியர் குழு நினைக்கும் அனுபவங்கள் அவள் விகடன் இதழில் வெளியாகும்' என அவள் விகடனின் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகிகள் பலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். அவற்றில் ஒன்று...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
லாக்டெளனில் நான்!

https://www.facebook.com/nashrindiwaa

இந்த ஊரடங்கின் ஆரம்பத்தை நான் நான்கு மாத கர்ப்பிணியாக எதிர்கொண்டேன். ஒவ்வொரு மாதத்தையும் பரிசோதனையின்றிக் கழிப்பதே மிகப்பெரும் சவாலாக இருந்தது. என் கர்ப்பகாலம் முழுவதும் ஊரடங்கிலேயே கழிந்தது. பிரசவம் எங்கே பார்ப்பது என்பது பற்றி பல்வேறு குழப்பங்கள் இருந்தன. ஏனென்றால், நாம் அன்றாடம் கடந்து வந்த கர்ப்பிணிகள் பற்றிய ஊடகச் செய்திகள் நம்மை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியது என்பது வியப்புக்குரியதல்ல... எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா என்ற கண்ணுக்குப் புலப்படாத அரக்கன்... பிரசவம் சில பல அமளிதுமளியோடு நடைபெற்றது. இப்போது தாயும் சேயும் நலமாக உள்ளோம். இதில் நான் கற்றுக்கொண்ட அனுபவப்பாடம், என் முதல் குழந்தை தரித்தது முதல் பிறக்கும் வரை நான் எடுத்துக்கொண்ட மருந்து மாத்திரைகளுக்கு அளவே இல்லை. நஞ்சுக்கொடி கீழே உள்ளது, ஹீமோகுளோபின் குறைவு, நீர்ச்சத்து குறைவு, நிறை மாதத்தில் ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது என்று ஒவ்வொரு பரிசோதனையிலும் ஒவ்வொன்றைக் கூறினார்கள். அதனால் மிகுந்த பத்தியத்துடன் ஒவ்வொன்றையும் சாப்பிட்டேன். நடந்தேன். ஆனால், என் இரண்டாவது குழந்தைக்கு இந்த ஊரடங்கின் காரணத்தால் வழக்கமான எந்தப் பரிசோதனைக்கும் நான் செல்லவும் இல்லை. மேற்கூறிய எந்தப் பிரச்னையும் இந்தக் கர்ப்பகாலத்தில் எனக்கு ஏற்படவுமில்லை. வழக்கமான ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டேன். எல்லா அளவுகளும் சரியாகவே இருந்தன. ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க விலையுயர்ந்த மருந்து மாத்திரைகள் தேவையில்லை, சத்தான உணவுமுறையே போதும் என்பதைக் கற்றுக் கொண்டேன்.