Published:Updated:

'சால்ட் அண்டு பெப்பர் லுக்' பெண்களுக்கும் பேரழகுதான்... எப்படி?

ஆணுக்கு அழகாகவும் கம்பீரமாகவும் தெரிகிற அதே சால்ட் அண்டு பெப்பர் லுக் பெண்களுக்கும் பேரழகுதான் என்பதை நிரூபிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சென்னையின் பிரபல மகப்பேறு மருத்துவர் அவர். ஒருநாளைக்கு 19 மணி நேரம் உழைப்பவர். அதிகாலை 4 மணிக்குச் சந்தித்தாலும் நள்ளிரவு 12 மணிக்குச் சந்தித்தாலும் அவருடைய பளிச் முகமும் பளீர் புன்னகையும் மாறாது. பொட்டு முதல் செல்போன் பவுச் வரை மேட்ச்சிங் பார்ப்பார். அவரது எனிடைம் எனர்ஜியை வியக்காதவர்கள் அரிது.

அப்படிப்பட்டவர் திடீரென ஆறு மாதங்கள் தனிமைக்குள் முடங்கினார். அத்தனை அப்பாயின்ட்மென்ட்டுகளையும் கேன்சல் செய்தார். போன் அழைப்புகளுக்கு நோ ரெஸ்பான்ஸ். எல்லோரிடமிருந்தும் அவர் ஒதுங்கியிருந்ததன் காரணம் தெரிந்தால் சிலர் சிரிக்கலாம்... பலர் வியக்கலாம்.

பல வருடங்களாக டை அடிக்கும் பழக்கமுள்ள அந்த மருத்துவருக்கு திடீரென அது ஏற்படுத்திய ஒவ்வாமையால் முகமெங்கும் கருமை படர்ந்திருக்கிறது. கண்ணாடி மாதிரிக் காட்சியளித்த தன் சருமம், தீயில் சுட்ட கிழங்குபோல் மாறியதில் மருத்துவர் கடுமையான டிப்ரெஷனுக்குள் போய்விட்டார். ஆறுமாத காலப் போராட்டத்துக்குப் பிறகு அமெரிக்காவுக்குப் போய் சிகிச்சை எடுத்துத் திரும்பிய அந்த மருத்துவரின் முகத்தில் இப்போது கருமை இல்லை, பழைய களையும் இல்லை என்பது வேறு கதை.

ஷோபா
ஷோபா

70-களின் லேடி சூப்பர் ஸ்டார் அந்த நடிகை. ஒரு தீபாவளி சிறப்பிதழுக்காக அவரிடம் பேட்டிக்காக அணுகினேன். 'முதல்ல பேட்டி எடுத்துடுங்க. போட்டோ ஷூட் அடுத்த வாரம் வெச்சுக்கலாம். ஹேர் கட்டும் டையும் பண்ணணும்' என்று கேட்டுக் கொண்டதன் பேரில் அவருடன் நீண்டநேரம் உரையாடல் நிகழ்ந்தது. குடும்பம், அந்தரங்கம், அந்தக் கால 'மீ டூ' எனப் பல விஷயங்களையும் மனம் திறந்து பேசியிருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு அவர் கொடுத்த பிரமாதமான பேட்டி அது. போட்டோ ஷூட்டுக்காக அவர் சொன்ன அடுத்த வாரம் தொடர்புகொண்டபோது 'போட்டோஷூட் பண்ண முடியாது. டை அலர்ஜியாகி, முகமெல்லாம் கறுப்பாயிடுச்சு. ட்ரீட்மென்ட்டுல இருக்கேன்... ஸாரி' சொன்னவரின் குரலில் தெரிந்த வலி, அதற்கு மேல் வற்புறுத்த வேண்டாம் என்றது.

'நடிகை .......யின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி' என டீசர் ஓட்டிப்பார்த்த மனதுக்கு இன்றுவரை பிரசுரிக்க முடியாத அந்தப் பேட்டி தந்த ஏமாற்றம் மறக்க முடியாதது.

அஜித்தும் விஜய்யும் சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் திரையில் தோன்றினால் கொண்டாடும் ரசிகர்களால் அதே தோற்றத்தில் ஒரு ஹீரோயினை ஏற்றுக்கொள்ள முடியுமா? நடிகைகளை ஏற்றுக்கொள்வார்களோ இல்லையோ, தம்மை ஏற்றுக்கொள்வார்களா என்ற பயமும் தயக்கமும் அநேகப் பெண்களுக்கு இருக்கிறது. சருமத்துக்கும் உடல் எடைக்கும் கொடுப்பதையெல்லாம்விட கூடுதல் அக்கறையை தலைக்குச் சாயம் அடிப்பதில் செலுத்துவது அதன் வெளிப்பாடுதான். முழுமையாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/37GOrFP

இன்றைய தலைமுறையினருக்கு 15 ப்ளஸ் ஸில் நரைக்கத் தொடங்குகிறது. 80 ப்ளஸ்ஸில் இருப்பவர்களும் டை அடித்துக் கொண்டு கருகரு கூந்தலுடன் வலம் வருகிறார்கள். இரண்டுமே கவலை தரும் விஷயங்கள்தாம்.

வாழ்க்கை முறை மாறினால் 15 வயதில் நரைப்பதை 51 வயதுக்குத் தள்ளிப் போடலாம். ஆனால், 80 ப்ளஸ்ஸிலும் டை அடிப்பவர்களை மனம் மாறச் செய்வது சாத்தியமா? வயதானவர்கள் மாறுகிறார்களோ இல்லையோ, 'நாங்க மாறிட்டோம்' என்கிறார்கள் பிரபலமான சில பெண்கள். ஆணுக்கு அழகாகவும் கம்பீரமாகவும் தெரிகிற அதே சால்ட் அண்டு பெப்பர் லுக் பெண்களுக்கும் பேரழகுதான் என்பதை நிரூபிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

"நரை முடியை அப்படியே விடறதுங்கிற முடிவை எடுக்கிறது சாதாரண விஷயமில்லைதான். எங்க வீட்டுக் குட்டிப் பசங்க எல்லாம் 'இப்படி இருக்காதே... கலர் பண்ணு'னு திட்டினாங்க. எனக்குமே முதல்ல கொஞ்ச நாளைக்கு கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம் 'ஏன் இப்படி இருக்கணும்... நம்மைவிட வயசானவங்க எல்லாம் டை பண்ணும்போது நான் ஏன் இப்படி இருக்கணும்' என்ற கேள்வி அடிக்கடி வந்திருக்கு. அப்பல்லாம் என்னை மோட்டிவேட் பண்ணினவர் என் கணவர்." - ஹரிதா கோபி

"கலரிங் பண்ற கான்செப்ட்டில் சின்ன வயசுலேருந்தே எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. எனக்கு நரைக்க ஆரம்பிச்சபோது, 'கலரிங் பண்றதில்லை'ங்கிற முடிவை எடுத்தேன். டேங்கர் கிட்னி ஃபவுண்டேஷன் ஆரம்பிச்சிருந்த நேரம் அது. ரொம்பச் சின்ன வயசுல இப்படியொரு விஷயத்தை ஆரம்பிச்சிருக்காங்களே என்ற பார்வையை நிறையவே எதிர்கொண்டேன்..." - லதா

ஹரிதா கோபி
ஹரிதா கோபி

"கலரிங்கை விடற முடிவை எடுக்கிறது ரொம்பக் கஷ்டம். ஆனா விட்டுட்டோம்னா அது சுதந்திரமான ஓர் உணர்வு. கொஞ்சூண்டு வெள்ளையாகி, அப்புறம் பாதி வெள்ளையாகிற அந்த ட்ரான்சிஷன் பீரியடைக் கடக்கிறதுதான் கஷ்டம்." - ஷோபா

- சின்னத்திரை பிரபலமும், படவா கோபியின் மனைவியுமான ஹரிதா கோபி, டேங்கர் ஃபவுண்டேஷன் நிறுவனர் லதா மற்றும் தொழிலதிபர் ஷோபா ஆகியோரின் சால்ட் அண்டு பெப்பர் லுக் அனுபவத்துடனான முழுமையான கட்டுரையை அவள் விகடன் இதழில் வாசிக்க > சால்ட் & பெப்பர் லுக்... நேற்று இல்லாத மாற்றம்! https://www.vikatan.com/health/healthy/salt-and-pepper-look

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு