Published:Updated:

“அப்பாவின் குரலில் அப்படியே பாடுவேன்” - செந்தமிழ் தேன்மொழியாள் சாவித்திரி!

சாவித்திரி மகாலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
சாவித்திரி மகாலட்சுமி

வாரிசு

ஏ.எஸ்

சாவித்திரி மகாலட்சுமி... பழம்பெரும் நடிகரும் பாடகருமான டி.ஆர்.மகாலிங்கத்தின் இளைய மகள். கடந்த 42 வருடங்களாக `டி.ஆர்.மகாலிங்கம் இன்னிசைக் குழு’ நடத்தி வருபவர், தற்போது மதுரையில் வசித்து வருகிறார். அப்பா, குடும்பம், பாட ஆரம்பித்த பின்னணி எனப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

 டி.ஆர்.மகாலிங்கம்
டி.ஆர்.மகாலிங்கம்

‘`அண்ணன், அக்கா, நான் என எங்கப்பாவுக்கு நாங்க மூணு பிள்ளைங்க. கடைக்குட்டிங்கிறதால எங்கே ஷூட்டிங் போனாலும் என்னையும் அப்பா கூடவே கூட்டிட்டுப் போயிடுவார். அப்பா கூடவே இருந்ததால, அவரோட பாடல்கள் எல்லாம் எனக்கு மனப்பாடமாயிடுச்சு. அப்பாவோட குரலையும் அப்படியே மிமிக்ரி பண்ணிப் பாடுவேன். நான் பாடுறதை அப்பா சந்தோஷமா கேட்பாரே தவிர, என்னை சினிமாவுல பாட அனுமதிக்கவே இல்லை. ‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை; தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ பாட்டைப் பாட எனக்குத்தான் முதலில் வாய்ப்பு கிடைச்சுது. அப்பாவுக்கு விருப்பமில்லாததால என்னால பாட முடியலை. ஆனா, பிற்காலத்துல அம்மாகிட்ட இதுக்காக வருத்தப்பட்டிருக்கார் அப்பா’’ என்கிற சாவித்திரி, தான் பாடகியான தருணத்தை நினைவுகூர்ந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“அப்பாவின் குரலில் அப்படியே பாடுவேன்” - செந்தமிழ் தேன்மொழியாள் சாவித்திரி!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘சோழவந்தான் தென்கரையில ‘ராமகிருஷ்ண பவனம்’னு பெரிய பங்களாவுல அக்கா குடும்பம், அண்ணன் குடும்பம், அப்பா, அம்மா, நான் எல்லாரும் ஒண்ணா வாழ்ந்துகிட்டிருந்தோம்.

“அப்பாவின் குரலில் அப்படியே பாடுவேன்” - செந்தமிழ் தேன்மொழியாள் சாவித்திரி!

1978, ஏப்ரல் 21-ம் தேதி. காலையில் செல்ஃப் டிரைவிங் பண்ணிட்டு வெளியே போயிட்டு வர்ற அளவுக்கு நார்மலா இருந்த அப்பா, மதியம் 2 மணிக்கு ஹார்ட் அட்டாக்ல தவறிட்டார். அப்போ அவருக்கு வயசு 54. நான் பி.யூ.சி படிச்சிட்டிருந்தேன். அப்பா ஞாபகத்துல காலேஜ் போக மனசில்லாம வீட்லேயே முடங்கின என்னை பிரின்சிபால்தான் சமாதானப்படுத்தி, எக்ஸாம் எழுத வெச்சாங்க. ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் ஆகி, பி.எஸ்ஸி இயற்பியல் சேர்ந்தேன். என் மனநிலையை மாத்த காலேஜ்ல நடந்த பாட்டுப் போட்டியில பிரின்சிபால் பாடச் சொன்னாங்க. அவங்களை மறுத்துப் பேச முடியாம கலந்துகிட்டு அப்பா வோட பாடல்களைப் பாடி முதல் பரிசும் வாங்கினேன்.

அப்பா இறக்கிறதுக்கு முன்னாடி, 72 கச்சேரிகளுக்கு அட்வான்ஸ் வாங்கியிருந்திருக்கிறார். அவங்க எல்லாம் நீங்க வந்து பாடுங்கன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. அம்மா கோமதியும் ஓகே சொல்ல, பாட ஆரம்பிச்சேன். மக்கள் என் குரலை ஏத்துக்கிட்டாங்க. சொத்தும் இல்லை; அண்ணன் சம்பாதிக்கலை; அக்காவுக்கு உடல்நலம் சரியில்லை. நான்தான் குடும்பத்தை நடத்தணும்கிற சூழ்நிலை. பாடுறதையே தொழிலா மாத்தினேன். கூடவே முறைப்படி சங்கீதம் பயில ஆரம்பிச்சேன். டி.ஆர்.மகாலிங்கம் இன்னிசைக்குழு உருவாச்சு. நைட்டெல்லாம் பாட்டுக் கச்சேரி பண்ணிட்டு, பகல்ல காலேஜ் போவேன். 1991-ல கல்யாணமாகுற வரை என் வாழ்க்கை இரவினில் பாட்டு, பகலினில் தூக்கம்னுதான் போச்சு.

கல்யாணத்துக்குப் பிறகு, சென்னையில தனிக்குடித்தனம். கணவர் வைத்தியநாதன் தனியார் கம்பெனியில அக்கவுன்டன்ட்டா இருந்தார். ரெண்டு குழந்தைங்க. சென்னையில இருந்தவரை எம்.எஸ்.வி ட்ரூப்பிலும் தேவா ட்ரூப்பிலும் பாடிட்டிருந்தேன். குழந்தைகள் வளர்ந்ததும் மதுரைக்கே வந்துட்டேன். மறுபடியும் பாட வாய்ப்பு வந்துச்சு. இப்போ வரைக்கும் நல்லபடியா போயிட்டிருக்கு’’ - மகிழ்ச்சியோடு சொல்பவர், டூயட் பாடும் போது, ஆண், பெண் குரல்களில் பாடுகிறார். விடைபெறும்போது அப்பாவின் ஃபேவரைட் ‘செந்தமிழ் தேன்மொழியாளை’ சாவித்திரி பாட, பலமணி நேரம் மனதுக்குள் ஒலித்தது டி.ஆர்.மகாலிங்கத்தின் குரல்.