மாடல்: விக்னேஷ்வரி

கொரோனா கோரதாண்டவம் ஆடிய நாள்களில் பல பெண்களும் ஐப்ரோ திரெடிங் முதல் ஹேர்கட் வரை செய்யக் கற்றுக் கொண்டார்கள். அந்த வரிசையில் ஃபேஷியலும் இடம்பெற்றது. செல்ஃப் ஃபேஷியல் தவறில்லை. ஆனால், அதை முறையாகச் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் ரதி ராதிகா. வீட்டிலேயே எளிமையான முறையில் ஃபேஷியல் செய்துகொள்ளக் கற்றுத் தருகிறார் அவர்.

தேவையானவை: ரவை - 3 டீஸ்பூன், பால் - 4 டீஸ்பூன், மைதா - 4 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ - 2 இதழ், ரோஸ் வாட்டர் - சில துளிகள், தேன் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைப் பழச்சாறு - ஒரு டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - சில துண்டுகள்.

ஸ்டெப் 1: ஒரு கிண்ணத்தில் ரவை யுடன் பால் கலந்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். தண்ணீரில் முகத்தைக் கழுவி சுத்தம் செய்யவும். ஊறவைத்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.

ஸ்டெப் 2: 20 நிமிடங்களுக்குப் பிறகு கீழிருந்து மேலாக, முகத்தின் உள்புறத்திலிருந்து வெளிப்புறமாக மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் சரும துவாரங்கள் திறந்து சருமத்தின் அடியில் தேங்கியிருக்கும் அழுக்குகள், பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் போன்றவை நீங்கி விடும்.

ஸ்டெப் 3: சில துண்டு ஐஸ் கட்டி களை ஒரு துணியில் வைத்துக் கட்டிக்கொள்ளவும்.

ஸ்டெப் 4: ஐஸ்கட்டிகளால் முகம் முழுவதும் ஒத்தடம் கொடுக்கவும்.

ஸ்டெப் 5: ஒரு கிண்ணத்தில் தேங் காய் எண்ணெயுடன் குங்குமப்பூ சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வும்.

ஸ்டெப் 6: குங்குமப்பூ கலந்த தேங்காய் எண்ணெயை முகத்தில் அப்ளை செய்து முகம் முழுவதும் மிருதுவாக மசாஜ் செய்யவும்.

ஸ்டெப் 7: இன்னொரு கிண்ணத்தில் மைதா, தேன், எலுமிச்சைச்சாறு மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

ஸ்டெப் 8: இந்தக் கலவையை முகத் தில் பேக் போல அப்ளை செய்யவும்.

ஸ்டெப் 9: ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சை, மூடிய கண்களின் மேல் வைத்து, 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும்.

ஸ்டெப் 10: பேக் காயந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பளிச்சென மின்னும்.