Published:Updated:

பார்வை இல்லை... பசுமை உண்டு! செல்வராணியின் சாதனைத் தோட்டம்

செல்வராணியின் சாதனைத் தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
செல்வராணியின் சாதனைத் தோட்டம்

#Motivation

பார்வை இல்லை... பசுமை உண்டு! செல்வராணியின் சாதனைத் தோட்டம்

#Motivation

Published:Updated:
செல்வராணியின் சாதனைத் தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
செல்வராணியின் சாதனைத் தோட்டம்

``ரெண்டு கண்ணும் தெரியாது. ஆனாலும் என் மாடித் தோட்டத்தின் பச்சையை என்னால உணர முடியுது. அதுதான் இயற்கையின் கருணை’’ - ரசித்துப் பேசுகிறார் செல்வராணி. இரண்டு கண்களிலும் பார்வையை இழந்த 59 வயது மாற்றுத்திறனாளி. கோவை தீத்திப்பாளையத்தில் உள்ள தன் வீட்டில் இயற்கை விவசாய முறைப்படி மாடித் தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார்.

“நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் திருநெல்வேலி. கல்யாணத்துக்கு அப்புறம் மும்பையில இருந்தோம். என் ரெண்டாவது குழந்தை டெலிவரி நேரத்துல, எனக்கு டைபாய்டு வந்ததுல நரம்பு பாதிப்பு ஏற்பட்டு, ரெண்டு கண்லேயும் பார்வை போயிடுச்சு’’ என்ற செல்வராணியிடம் அதைத் தாண்டி அதில் சொல்ல சுய இரக்க வார்த்தைகள் எதுவும் இல்லை. வாழ்க்கையையும் அவ்வாறே எதிர்கொண்டிருக்கிறார்.

பார்வை இல்லை... பசுமை உண்டு!
செல்வராணியின் சாதனைத் தோட்டம்

‘‘ஏர் இந்தியாவில் வேலைபார்த்த என் வீட்டுக்காரர் ஓய்வுபெற்றதும் ரெண்டு பிள்ளைகளுடன் கோவைக்கு வந்துட்டோம். சின்ன வயசுலயிருந்தே எனக்குச் செடி, கொடிகள் மேல ஆர்வம் அதிகம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை ரேடியோல தொடர்ந்து கேட்பேன். வேளாண் பல்கலைக்கழகத்துக்கும் அப்பப்போ போவேன். அதில் கிடைச்ச ஆர்வம், அனுபவங்கள் மூலம் நண்பர் ஒருவரின் உதவியோட மாடித்தோட்டம் அமைச்சேன். ஒன்பது வருஷமாச்சு. தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய், காலிஃபிளவர், முள்ளங்கி, பச்சை மிளகாய், அவரைக்காய்னு 20 வகையான காய்கள், கீரைகள், கொடிகள் இங்க இருக்கு.

பார்வை இல்லை... பசுமை உண்டு!
செல்வராணியின் சாதனைத் தோட்டம்

மாட்டுச்சாணம், ஆட்டுச்சாணம், வேப்பம் பிண்ணாக்குனு இயற்கை உரங்கள்தான் பயன்படுத்துறேன். நானே பஞ்சகவ்யா தயாரிச்சு அதைப் பயன்படுத்துவேன். அதுக்கான பயிற்சியும் எடுத்திருக்கேன். இயற்கை உரங்களப் பயன்படுத்துறதால எங்க சமையலறையில சுவையும் ஆரோக்கியமும் அதிகமாகுது. அக்கம், பக்கத்துல காய் கேட்கிறவங்களுக்கும் கொடுப்பேன்.

கொரோனா காலகட்டத்துல செல்வபுரம், மாதம்பட்டினு நிறைய இடங்கள்ல இருந்து எங்க வீட்டுக்கு வந்து காய், கீரை வாங்கிட்டுப் போனாங்க. ஆரோக்கியத்துக்காக அவங்க நம்மளை தேடிவந்தப்போ, நல்லவேளையா இங்க விளைச்சலும் அதிகமா இருந்துச்சு. குறைஞ்ச விலைக்கு நிறையவும் நிறைவாவும் வாங்கிட்டுப் போனாங்க. தவிர, விதைகள், பூச்செடிகளையும் லாபம் இல்லாம உற்பத்தி விலைக்கே கொடுப்பேன். இதுல பணம் சம்பாதிக்கிற எண்ணம் எனக்கு இல்ல. மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்க பலரையும் உற்சாகப்படுத்தணும். வருங்கால சந்ததிகள் ஆரோக்கியமா இருக்க, எல்லார் வீட்லயும் தோட்டம் அமைக்கணும்’’ என்றவர், இதில் செலவும் குறைவு என்கிறார்.

பார்வை இல்லை... பசுமை உண்டு!
செல்வராணியின் சாதனைத் தோட்டம்

‘`சின்ன இடம் இருந்தாலும் போதும். நான் 12,000 ரூபாய்தான் மாடித்தோட்டத்துக்குச் செலவு பண்ணினேன். தினமும் ரெண்டு வேளை தண்ணியும், ஒருநாள் விட்டு ஒருநாள் பஞ்சகவ்யமும் செடிகளுக்கு விடுவேன். அப்பப்ப உரத்துக்குச் செலவு பண்ணினா போதும். கற்பூரவள்ளி போன்ற மருத்துவ குணங்கள் இருக்குற செடிகளையும் வெச்சுருக்கேன். அதுங்க புண்ணியத்துல நானும் வீட்டுக்காரரும் சளி, தும்மல், வயிற்றுப் பிரச்னைக்கு எல்லாம் ஆஸ்பத்திரிக்கே போனதில்ல’’ என்றவர், இதுவரை பல பெண்களுக்கு மாடித்தோட்டம் அமைக்கப் பயிற்சியும் கொடுத் திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘பார்வையற்ற மாற்றுத் திறனாளி பெண்கள்கிட்ட, மாடித்தோட்டம் போடுங்கனு சொன்னா, ‘இதெல்லாம் நடக்குற காரியமா?’னு கேட்பாங்க. ஆனா, அவங்களைப் போலவே பார்வையிழந்த நான், ‘என்னை மாதிரி நீங்களும் மாடித்தோட்டம் போடலாமே...’னு சொல்லும்போது, அவங்களுக்குப் பெரிய நம்பிக்கை கிடைக்குது. அந்த வகையில, இதுவரை நான் 15 விழிச்சவால் பெண்களுக்கு மாடித்தோட்டம் அமைக்கப் பயிற்சி கொடுத்திருக்கேன். அவங்களோட மாடித்தோட்டங்கள் எல்லாம் இப்போது பச்சையா வளர்ந்து நிக்குது’’ என்ற செல்வராணி, தோட்டத்தில் செடிகளைத் தொட்டுப்பார்த்தே அவற்றின் நோய்த்தாக்கம் பற்றி கண்டறிகிறார். செடிகளிடம் பேசுகிறார். கத்திரிக்குத் தண்ணீர் அடித்துவிட்டு, அதில் காய்த்திருந்த கத்திரிப் பிஞ்சை தொட்டுப்பார்த்து உற்சாகமாகிறார். இவற்றையெல்லாம் பார்க்கும் நமக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொள்வதுடன், ஆச்சர் யமும் பரவுகிறது.

பார்வை இல்லை... பசுமை உண்டு!
செல்வராணியின் சாதனைத் தோட்டம்

‘‘உங்களுக்கு ஆச்சர்யமா இருக் குறது, எனக்கு தினசரி. என் வீட்ல எல்லா வேலைகளையும் நான்தான் செய்யுறேன். வீட்டுலகூட, வேலைக்கு ஆள் வெச்சுக்கலாம்னு சொல்லுவாங்க. நான்தான் மறுத்துட்டேன். என் தோட்டத்து காய்களை என் கையால சமைச்சாதானே எனக்கு நிறைவா இருக்கும்? வழக்கமானதையே செய்யாம, வெண்டைக்காய் பஜ்ஜி, கத்திரிக்காய் பஜ்ஜினு புதுசா செஞ்சு பார்ப்பேன். பலரும், கண்ணு தெரியாம எப்படிச் சமைக்கறீங்கனு கேட்பாங்க. பதில் சிம்ப்பிள்... எனக்குப் பழகிடுச்சு. ஒவ்வொரு உணவையும் தாளிக்கும்போது, வேகும்போது, வறுக்கும்போது வரும் வாசனைய வெச்சே அது எந்தளவுக்கு வெந்திருக்கு, வேகலைன்னு தெரிஞ்சுக்குவேன். தொலைக்காட்சிகள்ல சமையல் நிகழ்ச்சிகள்கூட பண்ணியிருக்கேன்’’ என்றார் மேலும் ஆச்சர்யம் கொடுத்து.

‘‘கண்ணு தெரியலைன்னா ரூம்ல அடைஞ்சு கிடக்கணும்னு எதுவும் இல்ல. என்னால என்னவெல்லாம் முடியுமோ அதெல்லாம் செய் யணும்னு நினைப்பேன். வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் பார்க்கிறதோட, மதியம் நேரம் கிடைச்சாலும் தூங்க மாட்டேன். கூடை பின்னுவேன். என்னால எவ்வளவு தூரம் ஓட முடியுதோ அவ்ளோ தூரம் ஓடிக்கிட்டே இருக்கணும் கடைசிவரை’’ என்பவரிடம் அடுத்த பிளானும் ரெடி.

‘‘இப்ப மாடியில ரூம் எடுக்க முடிவு பண்ணிருக்கோம். அதனால, மாடித்தோட்டத்தை வேற இடத்துக்கு மாற்றப்போறேன். விளைச்சல், ஆடு, மாடு, கோழி வளர்ப்புனு சீக்கிரமே நான் முழு நேர விவசாயி ஆகப்போறேன். இடம் பார்த்துட்டு இருக்கோம்” என்றார் ஆர்வமும் நம்பிக்கையுமாக.

நல்லன நிச்சயம் நிறைவேறும்!