Published:Updated:

காலத்துக்கேற்ற பிசினஸ் வேண்டும்!

shanmuga priya
பிரீமியம் ஸ்டோரி
shanmuga priya

வாட்ஸ்அப் வெற்றிக்கதை

காலத்துக்கேற்ற பிசினஸ் வேண்டும்!

வாட்ஸ்அப் வெற்றிக்கதை

Published:Updated:
shanmuga priya
பிரீமியம் ஸ்டோரி
shanmuga priya

25 வாட்ஸ்அப் குரூப்கள் மூலம் புடவை பிசினஸ் செய்து மாதம் 25 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சண்முகப்பிரியா. அதோடு, 3,000 பெண்களுக்கு ஆன்லைன் மூலம் பிசினஸ் வாய்ப்பும் வழங்கியிருக்கிறார்.

``ஹெச்.ஆர் வேலையில் நல்ல சம்பளத்தில் இருந்த நான், குழந்தை பிறப்பு, கணவரோட பணி மாறுதல் காரணமா முழுநேர குடும்ப நிர்வாகியானேன். தனிமையைப் போக்க பிசினஸ் செய்யலாம்னு தோணினப்பதான் என் மாமியார் செய்துவந்த புடவை பிசினஸ் நினைவுக்கு வந்தது.

25,000 ரூபாய் முதலீட்டுல பிசினஸ் ஆரம்பிச்சப்ப அந்தச் சேலைகளுக்கு எவ்வளவு லாபம் வைக்கணும்னுகூட தெரியலை. நிறைய நஷ்டத்தையும் கஷ்டத்தையும் சந்தித்தேன். என் ஃபிரெண்டுகிட்ட பேசினப்ப, வாட்ஸ்அப்ல புடவை போட்டோ அனுப்ப சொன்னா. தானும் தேர்வு பண்ணி தன்னோட ஃபிரெண்ட்ஸையும் வாங்க வெச்சா.

அவங்க கேட்ட புடவைகளை கொரியர் அனுப்பினப்ப, `இந்த ஐடியா நல்லா இருக்கேன்'னு தோணிச்சு. இதைத் தொடர்ந்து செய்யலாம்னு முடிவு எடுத்தேன். நிறைய இடங்களுக்குப் பயணம் செய்து புகழ்பெற்ற புடவைகளை வாங்கி வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்பி ஆர்டர் பிடிக்கிறேன்'' என்கிறவர், 3,000 பெண்களுக்கு ஆன்லைன் மூலம் ரீசேல் பிசினஸ் வாய்ப்பும் வழங்கியிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சண்முகப்பிரியா
சண்முகப்பிரியா

``நிறைய பேர் என்கிட்ட வாங்கி வெளியே விற்க வாய்ப்பு கேட்க ஆரம்பிச்சாங்க. இப்படிதான் சக்சஸாக ஆரம்பிச்சுது என்னுடைய பிசினஸ். சில நேரம், ‘நாங்க போனில் பார்த்த நிறத்தில் புடவை இல்லை’னு சில வாடிக்கையாளர்கள் புகார் சொல்லுவாங்க. அப்படி வரும் புகார்களை உடனே பரிசீலனை செய்து அவங்க கேட்கும் டிசைனில் வேறு புடவைகள் அனுப்பி வெச்சுருவேன்.

நிறைய தடைகளுக்குப் பின் இன்னிக்கு என்னோட மாத வருவாய் 25 லட்சம் ரூபாய். எட்டுப் பெண்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கேன். அடுத்தடுத்த அப்டேட்களுடன் வெற்றி தொடரும்” என்று தம்ஸ்அப் காட்டுகிறார் சண்முகப்பிரியா.

அவருடைய வாட்ஸ்அப்பில் அடுத்த ஆர்டர் மெசேஜ் அடிக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism