சில்க் த்ரெட் எனப்படும் பட்டு நூல் நகைகள் பெண்களின் விருப்பப்பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. சில்க் த்ரெட்டில் சிம்பிளான, டிரெண்டியான நெக்பீஸ் செய்யக் கற்றுத்தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஷோபனா.

தேவையானவை: சில்க் த்ரெட் - 3 (விரும்பும் நிறங்களில்), பாசி மணி - 1, கனமான அட்டை (அட்டை கிடைக்காதவர்கள், சார்ட் பேப்பரை ஒன்றன்மீது ஒன்றாக ஒட்டிக்கொள்ளலாம்), ஃபேப்ரிக் க்ளூ, கத்தரிக்கோல், பிரெஷ், ஸ்கேல், பென்சில்.

ஸ்டெப்-1: அட்டையை 6 செ.மீ நீள அகலம், 3 செ.மீ நீள அகலம் என இரண்டு சதுர அட்டைகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஸ்டெப்-2: 6 செ.மீ அளவுள்ள அட்டையில் ஃபேப்ரிக் க்ளூ தடவி, படத்தில் காட்டியுள்ளபடி ரோஸ் நிற சில்க் த்ரெட்டைச் சுற்றவும்.

ஸ்டெப்-3: 3 செ.மீ அளவுள்ள அட்டையில் ஃபேப்ரிக் க்ளூ தடவி கறுப்பு நிற சில்க் த்ரெட்டைச் சுற்றவும்.

ஸ்டெப்-4: இப்போது பெரிய அட்டையின் மீது சிறிய அட்டையை டைமண்டு வடிவத்தில் ஒட்டி சிறிது நேரம் காயவிடவும். பென்டெண்ட்டின் பேஸ் தயார்.

ஸ்டெப்-5: கறுப்பு நிற நூலை 40 செ.மீ அளவுக்கு அளந்து, அதே அளவில் 20 நூல்கள் வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டெப்-6: பென்டெண்ட்டின் பின்பக்கத்தைத் திருப்பி, சுற்றப்பட்டிருக்கும் நூலைக் கொஞ்சம் தளர்வாக்கி, கறுப்பு நிற நூலை, படத்தில் காட்டியுள்ள படி பென்டெண்ட்டுடன் கோத்துக் கொள்ளவும்.நெக் பீஸ்க்கான இரண்டு பக்க சைடு ரோப் தயார்.

ஸ்டெப்-7: நெக் பீஸின் சைடு ரோப் இரண்டையும் ஒன்றாக வைத்து பாசி மணியில் கோக்கவும். அது நெக்பீஸின் உயரத்தைக் கூட்ட, குறைக்க உதவும்.

ஸ்டெப்-8: நெக்பீஸின் இரண்டு சைடு ரோப்களையும் ஒன்றாகச் சேர்த்து முடிச்சிட்டுக்கொள்ளவும்.

ஸ்டெப்-9: உங்களின் விரல்களில் அல்லது மொபைலில் படத்தில் காட்டியுள்ளபடி நூலை 50 முறை சுற்றவும்.

ஸ்டெப்-10: மொபைலிலிருந்து நூலை எடுத்து, பாதியாக மடித்து, படத்தில் காட்டியுள்ளபடி மேல் பகுதியில் முடிச்சிட்டுக்கொள்ளவும்.

ஸ்டெப்-11: கீழ்ப்பகுதியில் நீளமாக இருக்கும் நூலை ஒரே அளவில் கட் செய்து குஞ்சம் தயார் செய்து கொள்ளவும்.

ஸ்டெப்-12: குஞ்சத்தை பென் டெண்ட்டுடன் சேர்த்து ஒட்டவும்.

ஸ்டெப்-13: பென்டெண்ட்டின் நடுப் பகுதியை உங்கள் விருப்பத்துக்கேற்ப ஸ்டோன் அல்லது நூல் கொண்டு அலங்கரித்துக்கொண்டால். டிரெண்டியான நெக்பீஸ் தயார். இதற்கு மேட்ச்சாக கம்மலும் தயார் செய்யலாம்.

50 ரூபாய் செலவில் ரெடிசெய்த இந்த நெக்பீஸை 250 ரூபாய் வரை விலை வைத்து விற்க முடியும்.