ஹரீஷ் ஒரு தகவலும் கொடுக்காம எங்கே போயிட்டார்... யோசனையுடன் ஹேமா, பூட்டியிருக்கும் வீட்டைத் திறக்கும்போதே மருந்து கவருடன் ஹரீஷும், கலங்கிய கண்களும் கையில் ஓர் அட்டைப் பெட்டியுமாக 15 வயது மகள் ஹரிதாவும் பின்னால் நுழைய... ‘மீ’ என மெலிதாக ஒரு குரல் கேட்க, ஹேமாவுக்கு படபடவென எல்லாம் புரிந்தது.

“நில்லு. அட்டைப்பெட்டிக்குள்ள பூனையா?”

“ஆமாம்மா. ஜஸ்ட் இப்ப பொறந்த குட்டிப் பூனைம்மா.”

“மொறைக்காத ஹேமா. ஆறு மாசம் முன்னால கூட, ஸ்கூல்ல அடிபட்டுக் கீழ கிடந்த புறா ஒண்ணு... ஞாபகம் இருக்கா... அதுக்கு மருந்து போட்டு ப்ளூ க்ராஸ்ல கொண்டுவிட்டாளே...”

“லேசுல மறக்குமா... அதோட கஷ்டப்பட்டது நான் தானே...''

“நீயேதான். இப்பவும் அதே மாதிரி புரிஞ்சு நடந்துக்கோ ஹேமா. ப்ளீஸ்...”

“அம்மாப்பூனை பொறந்த குட்டியை இங்கே போட்டுட்டுப் போயிடுச்சு. வாட்ச்மேன் பார்த்திருக்கார். குட்டி செத்துப் போயிடும்போல இருந்துச்சா... அதான் நான் வந்ததும் அப்பாகூட டாக்டர்கிட்ட போனேன். ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை இந்த பவுடர் பாலைக் கரைச்சுக் கொடுக்கணுமாம். இதோ பாரு இங்க் ஃபில்லர், சின்ன பாட்டில்... வேளைக்கு மூணு சொட்டு கொடுத்தா போதும். டாக்டர் சொன்னார்.”

ஹரீஷ் ஒரு ஸ்டூலின் மேல் 60 வாட்ஸ் பல்பை எரியவிட, ஹரிதா பூனை மேல் விளக்கின் சூடு படும்படி பெட்டியை வைக்க ஹேமாவுக்குக் கோபமாக வந்தது.

“இதெல்லாம் சரின்னு படுதா...”

“அம்மா... பாட்டில், இங்க் ஃபில்லர் இதெல்லாம் ஒவ்வொரு தடவையும் வெந்நீர்ல போட்டுக் கழுவி சுத்தம் பண்ணிக்கச் சொன்னார் டாக்டர்.”

“ஏய்... எங்கிட்ட எதுக்கு சொல்ற... எனக்கு வேற வேலை இல்லேன்னு நெனச்சீங்களா...”

“அப்புறம் அது வாயைத் திறக்க அடம் பண்ணுமாம். நீதான் ஹேமா பால் குடுக்க சரியான ஆளு. நம்ம ஹரிதா சின்னக் குழந்தையா இருந்தபோது அவ வாயை அமுக்கிக் குழித்து டபக் டபக்குன்னு சாப்பாட்டை உள்ளே தள்ளுவியே... அதே மாதிரிதான் இது. மூணு நாலு சொட்டு பால்தான் அதுவும். அதனால இன்னும் ஈஸி வேலைதான்.''

அப்பாவும் மகளும் புரிந்து சிரித்துக் கொண்டனர்.

ஹேமாவுக்கு இதுவரையில் இல்லாத பீ.பியின் அறிகுறிகள் திடீரென தோன்றின.

“ஒரு லிஸ்ட்டைக் குடுத்துட்டு, ஈஸி வேலைன்னு சொல்லிட்டா ஆச்சா... ரொம்ப நல்லாயிருக்கு. எனக்கு பூனை நாய்ன்னாலே பிடிக்காதுன்னு தெரியுமில்ல... அதுலயும் அதைத் தொட்டு... ச்சீ... ஏதாவது காப்பகம் கொண்டுபோய் விடக்கூடாதா...”

“ப்ளீஸ்மா.. நாளைக்கு ஒரு நாள் மட்டும் பார்த்துக்கோ. என் பர்த்டேனால என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் நாளைக்கு சாயங்காலம் வீட்டுக்கு வருவாங்க. அவங்களும் ஹெல்ப் பண்ணுவாங்க.”

‘`பாரு, இந்த பூனைனால உன் பிறந்தநாள்கூட மறந்துபோச்சு”

“பரவால்லாம்மா... இது பேபி. இந்தா…”

“ம்... ஹூம்... அய்யோ... நோ...''

“ரொம்ப தப்பு ஹேமா. பக்கத்துல வா. தொட்டு ஃபீல் பண்ணு. எனக்கு மட்டும் பழக்கமா முன்னபின்ன... நான் தூக்கல?”

“நோ.. என்னால அதைத் தொடவே முடியாது.”

“வெரி வெரி பேட் மா யு ஆர்.”

“சரிதான். வெளில தூக்கி எறின்னு சொல்லாம கொழந்தையோட உணர்வுக்கு மதிப்புக் குடுத்து வீட்டுக்குள்ள விட்டேனேன்னு பாராட்டுங்க. அதுவே டூ மச்சு. இங்கே பாருங்க... அப்பறம் நீங்க ரெண்டு பேரும் கையை ஒவ்வொரு தடவையும் சோப்புப் போட்டு கழுவுங்க. அதெல்லாம் செஞ்சாதான் அந்தப் பூனைக்குட்டிக்கு இங்கே இடம்.”

“அம்மா... நீ என்ன சொன்னாலும் ஓகேம்மா. இங்கே வந்து குட்டியைப் பாரும்மா. எத்தனை க்யூட்டா இருக்கு!”

ஹேமா அருகில் போனாள். “என்னடி இது கண்ணையே காணோமே...”

“கண்ணு இருக்குமா. இன்னும் கண்ணே தொறக்கல. பொறந்த குட்டிதானே...”

“எலிக்குட்டி மாதிரி இருக்கு பார்க்க. பூனைதானே?”

“ரொம்ப குட்டி... கறுப்புப் பூனைம்மா”

“ஹேமா, பாரு கையா நல்லா கழுவிட்டேன். அப்புறம் அந்த வெட் டாக்டர் நம்ம ஹரிதாவை நிறைய பாராட்டினார். அம்மா பூனை, தனக்குப் பொறந்த குட்டிகள்ல ஒண்ணு ரெண்டு பொழைக்காதுன்னு தெரிஞ்சா இப்படிதான் பொறந்தவுடனே நிராகரிச்சிடுமாம். அப்படி நிராகரிக்கப்பட்டதை ஹரிதா மாதிரி காப்பாத்த நெனைக்கிறவங்க ரொம்ப கம்மியாம். அவர் பீஸ் வாங்கிக்கலை.''

“ஆஹா... அம்மா பூனையைவிட நமக்கு விஷயம் ரொம்ப தெரியுமா... அது வேணாம்னு தூக்கிப்போட்டதைப் போய் நாம எடுத்து புட்டிப்பால் கொடுத்து காப்பாத்தறது... எங்கேயாவது நடக்கற காரியமா... அது செத்து கித்துப் போச்சுன்னா..?”

ஹேமாவுக்கு பாரம் இறங்கின மாதிரி இருந்தாலும், கூடவே வேறொரு பாரம் ஏறியது. ஒரு வேளை வாட்ச்மேனைக் கூப்பிடாமல், தானே தொட்டுத்தூக்கி மடியில் போட்டு அன்போடு தடவியபடி பாலைக் கொடுத்திருந்தால்... பால் மூக்கில் ஏறாமல் இருந்திருந்தால்... இந்தப் பிறந்த நாளை ஸ்வீட் சிக்ஸ்டீனாகக் கொண்டாடியிருக்கலாமே.

“ஏம்மா இப்படி நெகட்டிவ்வா பேசறே... செத்துப் போகாது இது.”

ஹரிதா அந்த குட்டிப் பூனையை குழந்தை மாதிரி கவனமாக எடுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். அதை அன்பு வார்த்தைகள் சொல்லிக் கொஞ்சினாள். டாக்டர் சரியாத்தான் பாராட்டியிருக்கிறார். ஆஹா... அதன் உடம்பில் வெப்பம் ஏறுகிற மாதிரி அவள் தடவிக் கொடுக்கிற அழகைப் பார்த்தால் ஹேமாவுக்கே ஹரிதா மடியில் படுத்துக்கொள்ள வேண்டும்போல இருந்தது. உலகத்தில் இருக்கிற ஒட்டுமொத்த அம்மாக்களின் வாஞ்சையெல்லாம் ஹரிதாவிடம் பிச்சை எடுக்க வேண்டும்.

ஹரிதா ராத்திரி பூனைக்குப் பாலைக் கொடுத்தாள். தனி ஆளாகப் பூனையின் வாயைத் திறந்து என்ன லாகவமாக பாலைக் கொடுக்கிறாள்... ஹேமா ரசித்தாள்.

“அம்மா, அது தானாகவே பெட்டிக்குள் ளேருந்து வெளியில வந்துடுச்சும்மா. நல்லா கவனிச்சதுல அது ஒடம்பு தேறிடுச்சு பாரு.”

``அப்படீன்னா அதைக் கீழே கொண்டுபோய் விட்டுடலாமே...”

மறுநாள் காலை ஹரீஷும் ஹேமாவும், ஹரிதாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்கள். அவள் ரொம்பவும் குஷியாக பூனைக்குப் பாலைக் கொடுத்துவிட்டு பள்ளிக்கும் போய் விட்டாள். ஹரீஷும் ஆபீஸ் போயாச்சு. அவள் திரும்பி வருவதற்குள் ஹேமாதான் நாலு முறை பால் கொடுத்தாக வேண்டும்.

மணி பத்து. வாட்ச்மேன் சிவாவை அழைத்து, அவனுக்கு மெதுவாகச் சொல்லிக் கொடுத்து, பூனைக்குப் பால் கொடுக்கச் சொன்னாள். நான்கு சொட்டுக்கு மேலேயே கொடுத்து விட்டான்.

“இனிமே அப்படி கொடுக்காதேப்பா. அது குட்டிதானே. அப்புறம் ஜீரணம் ஆகாது. என் பொண்ணு வந்தா கோச்சுக்குவா. அடுத்து 12 மணிக்கு வா.”

சரியாக 12 மணிக்கு சிவா வந்தான். ``என் பையனே சின்னதுல தேவலாம்னு ஆக்கிடுச்சுமா இது. எப்படி படுத்துது பாருங்க” இங்க் ஃபில்லரால் பாலைக் கொடுத்துவிட்டு புலம்பிக்கொண்டே எழுந்தான்.

“ஏம்ப்பா.. திருப்பி எதிர்த்து வருதேப்பா பால்...”

“அது என் கையில இருந்ததுதான். ஒண்ணும் இல்லம்மா விடுங்க” என்றான்

பூனை சிறுநீர் கழிக்க வேண்டி செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு. ஹரிதா சொல்லிக்கொடுத்திருந்தாள். அட்டைப் பெட்டியை எடுத்து, சிவாவை அழைத்து அவனிடம் அதையும் சொல்லிக் கொடுத்து செய்யச் சொன்னாள்.

அடுத்த இரண்டு வேளை அது ஏனோ பால் குடிக்க சுத்தமாக வாயைத் திறக்கவேயில்லை.

“சரி விடுப்பா. ஹரிதா வந்து பார்த்துக்குவா”

நான்கு மணிக்கு ஹரிதா தன் ஃப்ரெண்ட்ஸுடன் வந்து சேர்ந்தாள். பர்த்டேயானதால், ஹேமா அவளிடம் கவலைப்படும்படி எதுவும் சொல்லவில்லை. ஃப்ரெண்ட்ஸ் அதனை பேரும் ஆசையாக பூனைக்குட்டியைப் பார்த்தார்கள். ‘வாவ்’ எனச் சொல்லி போட்டோ எடுத்தார்கள்.

பாலைக் குடுக்கும்போது திடீரென ஹரிதா கத்தினாள். “அம்மா என்னாச்சு இதுக்கு? எப்போதும்போல இல்லம்மா. அசையாம இருக்கே... சரியா பாலைக் குடுத்தியா இல்லையா...''

“கொடுத்தேண்டி. அது எங்கே வாயைத் திறக்குது? ரொம்ப கஷ்டப்பட்டுதான் கொடுத்தோம். இதுக்குதான் வம்பே வேண்டாம்னேன்.''

“ஷ்… பேசாம இரும்மா...” என்றாள். அழுதாள் திடீரென. அதன் உடல் பாகங்களை எல்லாம் நன்றாகத் தொட்டுப் பார்த்தாள்.

“அம்மா அதுக்கு மூக்கு வழியா பால் வந்துச்சா?”

`இவ என்ன டாக்டரா...'

ஆஹா... அதன் உடம்பில் வெப்பம் ஏறுகிற மாதிரி அவள் தடவிக் கொடுக்கிற அழகைப் பார்த்தால் ஹேமாவுக்கே ஹரிதா மடியில் படுத்துக்கொள்ள வேண்டும்போல இருந்தது. உலகத்தில் இருக்கிற ஒட்டுமொத்த அம்மாக்களின் வாஞ்சையெல்லாம் ஹரிதாவிடம் பிச்சை எடுக்க வேண்டும்.

“தெரியலையே. பால் குடுத்தபோது லேசா எதிர்த்து வந்தது. அது மூக்கா... வாயா...'' சமாளித்தாள்.

“மூக்கு வழியாத்தான் வந்திருக்கு. அப்படி வரக் கூடாதுன்னு டாக்டர் சொன்னார். உனக்கே தெரியும்னு நெனச்சேன். எந்த உயிர்னாலும் அப்படித்தானேம்மா? உடனே ஆட்டோ கூப்புடு. டாக்டர்கிட்ட போகணும்.”

அட்டைப்பெட்டி, பூனைக்குட்டி, ஹரிதா, ஹேமா சகிதம் ஆட்டோ கிளம்பியது.

“அம்மா, என் பிறந்தநாள் அன்னிக்கு நான் செத்தாலும் பரவாயில்ல. ஆனா, இந்த கறுப்பு சாமிக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன்” - பெயரை நாள் முழுசும் யோசிச்சிருக்கா போலிருக்கு. ஹேமாவுக்கு ஏனோ பயமாக இருந்தது.

கிளினிக் உள்ளே ஓடினார்கள். ஹேமாவுக்கு நாற்றம் குடலைக் குமட்டியது. டாக்டர் கனிவுடன் அந்தப் பூனையை கவனித்தார். சில கேள்விகளைக் கேட்டார். ஹேமா முழித்தாள். ஹரிதா படபடவென பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்புறம் பாடி டெம்பரேச்சர் சில்லுன்னு இருக்குனுன்னார். ஒரு ஹீட் ட்ரேயில் அதை சிறிது நேரம் வைத்தார். சட்டென அதன் உடலில் சிறு அசைவு தெரிந்தது. அதே ட்ரேயில் இன்னும் அரை மணி நேரம் இருக்க வைத்தார். சொட்டு மருந்து கொடுத்தார்.

அதற்குள் ஹரீஷும் வந்து சேர, ஹேமா அவரை வெளியே அழைத்து விஷயத்தைச் சொன்னாள். ஹரீஷ் கண்களில் சட்டென ஈரம். அடுத்த ஐந்து மணி நேரத்திற்குள் முடிந்த வரை மூன்று முறையாவது சொட்டு மருந்து கொடுக்கச் சொன்னார். கறுப்பு சாமியுடன் வீடு வந்து சேர்ந்தார்கள். ஃப்ரெண்ட்ஸ் நிலைமை புரிந்து சென்று விட்டிருந்தனர்.

ஏதும் சாப்பிடாமல் அதைத் தடவியபடியே உட்கார்ந்திருந்தாள் ஹரிதா. இரவு முழுவதும் ஹரிதா கறுப்பு சாமியை விட்டு நகரவேயில்லை. அவளும் அப்பாவும் ஏதோ பேசி, சொட்டு மருந்து கொடுத்து அதை வேதனைப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தார்கள். அந்தச் சொட்டு மருந்து சாவை அமைதியாக்க கொடுக்கப்பட்டது என்பது லேட்டாகத்தான் புரி்ந்தது ஹேமாவுக்கு. வீட்டில் ஒரே நிசப்தம்.

ஹேமா சாமியை வேண்டிக்கொண்டாள். ஹரிதாவின் பர்த்டேவை மேற்கொண்டு கொண்டாட மனமில்லை யாருக்கும்.

‘அம்மா’ என்ற அழுகுரல் திடீரென.

அசைவற்ற ஜடமாக ஆனது கறுப்பு சாமி.

ஹேமாவுக்கு நேற்றிலிருந்தே எந்த அசைவையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஹரிதாவுக்கு டக்டக்கென சிறு வித்தியாசம்கூட தெரிந்தது. ஹரிதா குழந்தையாக இருக்கும்போது இப்படிதான் ஹேமாவுக்கு எல்லாம் புரியும். ஹரிதா அவள் அப்பாவைத் தேடிப் போய் தோளைக் கட்டிக்கொண்டு விக்கி விக்கி அழுதாள்.

ஹரீஷ் முகம் குழந்தையின் துக்கம் தாங்காமல் வெளிறியிருந்தது. ஹேமாவுக்கு பாரம் இறங்கின மாதிரி இருந்தாலும், கூடவே வேறொரு பாரம் ஏறியது. ஒரு வேளை வாட்ச்மேனைக் கூப்பிடாமல், தானே தொட்டுத்தூக்கி மடியில் போட்டு அன்போடு தடவியபடி பாலைக் கொடுத்திருந்தால்... பால் மூக்கில் ஏறாமல் இருந்திருந்தால்... இந்தப் பிறந்த நாளை ஸ்வீட் சிக்ஸ்டீனாகக் கொண்டாடியிருக்கலாமே.

அப்பாவும் பெண்ணும் அட்டைப் பெட்டியை எடுத்துக்கொண்டு கீழே சென்றனர். சிவாவின் உதவியோடு அதைப் புதைத்துவிட்டு வந்தனர். ஹேமாவுக்கு ஏனோ ஹரிதாவோடு பேச தைரியம் வரவில்லை. பத்து நாள்கள் கழிந்தன.

அதுவும் சிவா சொல்லித் தான் அந்த விவரம் ஹேமாவுக்குத் தெரிய வந்தது. ரொம்ப அழகான கறுப்பு நாய்க்குட்டியாமில்ல... ஃப்ளாட்டுக்குள்ள வந்து டுச்சாம். ஹரிதா கண்ணுல படாம இருக்குமா? தினமும் கீழே போய் அதுக்கு எப்படியோ பால் என்ன... பிஸ்கட் என்ன... தடபுடல் உபசாரமாம். எப்ப இதெல்லாம் எடுத்துட்டுப்போறா... இதுக்கெல்லாம் மேல தினமும் நாய்க்குட்டியோட ஒரு மணி நேரமாவது செலவிடறாளாம்.

“என்னங்க... நம்ம பொண்ணு வீட்டுக்குள்ளேயே கூட்டிட்டு வராம, நம்ம கவனத்துக்கும் கொண்டுவராம, ஏதோ ஒரு நாய்க்குட்டியை அன்பா கவனிச்சுக்கறாளாமே..'

“ஹஹ்.. ஹா.. ஹேமா, உன் கவனத்துக்கு மட்டும் வராம. அது பேரு ‘கமி’ (Kami)” என்றான் ஹரீஷ் ஹேமாவைப் பார்த்துக் கண்ணடித்தபடி.

“கமி-யா?”

“ம்ம்.. கமிதான். கறுப்பு சாமிக்கு சுருக்கம். மறைவு நவம்பர் 2010 - தோற்றம் டிசம்பர் 2010”.

ஹேமாவுக்கு நெஞ்சு கனத்தது, முதன்முறையாக... கமிக்காக.