Published:Updated:

` உடைந்து போகும் தருணத்தில், மீண்டு வந்திருக்கிறார்!' - ஸ்மிருதி இரானி பாராட்டிய பெண் ராணுவ அதிகாரி

ராணுவ அதிகாரி
ராணுவ அதிகாரி

கணவரின் மறைவுக்குப் பின் தேசத்துக்காகப் பணியாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த கௌரி பிரசாத் தனது வேலையை விட்டு விலகினார்.

தன் கணவரைப் பின்பற்றி ராணுவத்தில் இணைந்து இருக்கும் கௌரி பிரசாத் மஹதிக் என்ற பெண்மணியைப் பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுதியுள்ளார். "நிறைய பேர் மனம் உடைந்து போகும் தருணத்தில் இவர் மீண்டு வந்துள்ளார். இணையத்தில் நான் கண்ட கதை இது. ஒரு இந்தியப் பெண்ணின் உண்மையான ஆற்றலை எடுத்துக்காட்டுமாறு இவர் வாழ்ந்து காட்டியுள்ளார்" என்று கௌரியைப் பாராட்டி பதிவிட்டுள்ளார் ஸ்மிருதி இரானி.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

2012-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த மேஜர் பிரசாத் பீகார் படை வகுப்பின் ஏழாவது பட்டானியனில் பணியாற்றி வந்தார். 2017-ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று, இந்திய சீன எல்லையில் தவங்க் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் மேஜர் பிரசாத் உயிரிழந்தார். கௌரிக்கும் பிரசாத்துக்கும் 2015-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. கணவரின் மறைவுக்குப் பின் தேசத்துக்காகப் பணியாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த கௌரி பிரசாத்தான் ஏற்கெனவே பார்த்து வந்த வேலையை விட்டு விலகினார்.

வழக்கறிஞரும், ஒரு நிறுவன செயலாளருமான கௌரி, முதல் முறை சர்வீஸ் செலக்சன் போர்டு தேர்வு எழுதியபோது தோல்வியே மிஞ்சியது. அடுத்த தேர்வில் விதவை பிரிவில் அவர் முதலாவதாக வந்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி பள்ளியில் பயின்று முடித்த கௌரி, இந்திய ராணுவத்தில் லெப்டினன்டாகப் பணியில் சேர்ந்துள்ளார்.

` உடைந்து போகும் தருணத்தில், மீண்டு வந்திருக்கிறார்!' - ஸ்மிருதி இரானி பாராட்டிய பெண் ராணுவ அதிகாரி

"நான் ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தேன். என் கணவரின் இறப்புக்குப் பின் அந்த வேலையை விட்டு விலகி ஆயுதப்படை தேர்வுக்காகப் படிக்கத் தொடங்கினேன். என் கணவரின் நினைவாக நான் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முடிவு எடுத்தேன். நான் பணியில் சேர்ந்த பின் அணியப்போகும் சீருடை எங்கள் இருவருக்குமானதாக விளங்கும்" என்று பேட்டி ஒன்றில் கௌரி தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு