Published:Updated:

புதிய பகுதி! - 1: சேவைப் பெண்கள்... சேவையே வாழ்க்கை... தேவைப்படவில்லை தனிப்பட்ட வாழ்க்கை!

சுசீலா
பிரீமியம் ஸ்டோரி
சுசீலா

#Motivation

புதிய பகுதி! - 1: சேவைப் பெண்கள்... சேவையே வாழ்க்கை... தேவைப்படவில்லை தனிப்பட்ட வாழ்க்கை!

#Motivation

Published:Updated:
சுசீலா
பிரீமியம் ஸ்டோரி
சுசீலா

ன் வீடு என்றில்லாமல் சமூகமும் என் வீடே என்று வாழும் நம்பிக்கைக்குரிய சேவை மனுஷிகளின் தன்னலமற்ற வாழ்வை அடையாளப்படுத்தும் புதிய தொடர் இது. இந்த இதழில் சென்னை ‘அவ்வை இல்ல’த்தின் தலைவர் சுசீலா.

சென்னை அடையாற்றிலுள்ள புற்றுநோய் நிறுவனமும், அவ்வை இல்லமும் அறம் வளர்க்கும் அடையாளங்கள். புற்றுநோய் மையத்தின் தலைவராக மருத்துவ சேவை அளிக்கிறார் டாக்டர் சாந்தா. அவரின் இளைய சகோதரியான சுசீலா, `அவ்வை இல்ல'த்தில் கல்வி சேவையளிக்கிறார். இருவருமே சேவைப் பணிகளுக்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர்கள். அமைதியின் உருவமான சுசீலா, வெளியுலகம் அறியாத நம்பிக்கை வெளிச்சம்.

பெற்றோர் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டு ஆதரவின்றி இருக்கும் பெண் குழந்தைகளை அரவணைத்து, தங்குமிடம், உணவு, கல்வி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்து அவர்களை நல்ல நிலைக்கு உயர்த்தும் உன்னத நோக்கத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் 1931-ம் ஆண்டு அவ்வை இல்லம் தொடங்கப்பட்டது. முத்துலட்சுமியின் கனவுத் திட்டமான இந்த இல்லத்தைச் செம்மைப்படுத்தியவர் சுசீலா.

சுசீலா
சுசீலா

83 வயதானாலும் இவரது குரலிலும் நடையிலும் தளர்வில்லை.

“மருத்துவ படிப்பில் எனக்கு சீட் கிடைக்க வில்லை. பி.ஏ முடித்ததும் தனியார் நிறுவன வேலையில் சேர்ந்து, 30 ஆண்டுகளில் அந்த நிறுவனத்தில் உயர் பொறுப்புக்கு உயர்ந்தேன். இதற்கிடையே அடையாறு புற்றுநோய் மையத்தில் பணியாற்றும் என் பெருங்கனவு 2000-ம் ஆண்டில்தான் நனவானது. அங்கு நிதிக்குழுச் செயலக உறுப்பினராகப் பணியாற்றிக்கொண்டே, எம்.ஆர்.எஃப் நிறுவனத்தில் பொது மேலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றினேன்.

இந்த நிலையில் அவ்வை இல்லத்தின் அப்போதைய தலைவராக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மருமகள் மந்தா கிருஷ்ணமூர்த்திக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை என்னை ஏற்கச் சொன்னார், முத்துலட்சுமி ரெட்டியின் மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. பாதுகாப்பான கட்டடங்கள் இல்லாதது உட்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அப்போது இல்லை. கட்டடத்துக்குள் மழைநீர் புகுந்து குழந்தைகள் சாப்பிட, படிக்க, தூங்கப் பெரிதும் சிரமப்பட்டனர். மாற்றத்துக்கு வழி தேடினேன். பல்வேறு வழிகளில் நிதி திரட்டி, அனைத்து வசதிகளுடன்கூடிய சிறப்பான கட்டடத்தைக் கட்ட நாங்கள் பெரும்பாடுபட்டோம்” என்று முகம் மலரக் கூறும் சுசீலா, இல்லம் முழுவதையும் சுற்றிக்காட்டியபடி தொடர்ந்தார்.

இந்த இல்லத்தில் 185 பெண் குழந்தைகள் வளர்கிறார்கள். இவர்களுடன் சேர்த்து, 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசின் நிதியுதவியில் இயங்கும் அவ்வை இல்லம் ஆரம்பப் பள்ளி மற்றும் டி.வி.ஆர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள். இந்த இல்லத்துக்கு அருகிலிருக்கும் இவ்விரண்டு பள்ளிகளையும் சுசீலாதான் நிர்வகிக்கிறார். 1 முதல் 5-ம் வகுப்புவரை இரு பாலரும் படிக்கின்றனர். தமிழ், ஆங்கில வழியில் செயல்படும்

6 முதல் 12-ம் வகுப்புவரை பெண் குழந்தைகள் மட்டுமே படிக்கிறார்கள். மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு 1,000 ரூபாய் சேவைக் கட்டணம், ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் சேவைக் கட்டணம். இருவழிக் கல்வியிலும் 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற ஏழை மாணவி களுக்கு வெறும் 200 ரூபாய் மட்டுமே சேவைக் கட்டணம் பெறுகின்றனர். ஸ்மார்ட் போர்டு, டிஜிட்டல் வகுப்பறைகள், நூலகம், ஆய்வகங்கள், கணினிப் பயிற்சி வசதிகளுடன் இரண்டு பள்ளிகளும் சிறப்பான கட்டமைப்புடன் இயங்குகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“படிப்பு தவிர, இசை, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், தற்காப்பு உட்பட பலவற்றிலும் இங்குள்ள மாணவிகள் சாதிக்கவும் ஊக்கப்படுத்துகிறோம். பள்ளிப் படிப்பை முடித்ததும் பெண் குழந்தைகளை உயர் கல்வியில் சேர்க்கிறோம். வேலை வாய்ப்புக்கும் உதவுவதுடன், திருமண வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்கிறோம். அவர்களின் எதிர்காலத்துக்கான ஆசைகளை அறிந்து நிறைவேற்றவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

புதிய பகுதி! - 1: சேவைப் பெண்கள்... சேவையே வாழ்க்கை... தேவைப்படவில்லை தனிப்பட்ட வாழ்க்கை!

இங்குள்ள குழந்தைகளின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியிலும் நிறைய மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான, ஆச்சர்யமான மாற்றங்களைப் பார்க்கிறேன். தினமும் மதியம் உணவு சாப்பிடும்போது அக்கா சாந்தாவிடம் அவற்றையெல்லாம் கதையாகச் சொல்வேன்.''

- அவ்வை இல்லத்தைப் பற்றிப் பேசப் பேச சுசீலாவுக்கு உற்சாகம் கூடுகிறது. தனக்கென தனிப்பட்ட ஆசைகள் எதையும் கொண்டிருக்காத சுசீலாவை, அவ்வை இல்லத்தின் பணிகள் சோர்வின்றி இயங்கச் செய் கின்றன. தமிழக அரசின் நிதியுதவி மற்றும் தன்னார்வலர்களின் நிதியுதவி யுடன் இந்த இல்லம் செயல்படுகிறது.

“இங்கு வளரும் பெண் குழந்தை களுக்கு எல்லா வகையிலும் உதவத் தயாராக இருக்கிறோம். குழந்தைப் பருவத்தில் இங்கு சேரும்போது அவர்களுக்கு அடையாளம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு உயர்ந்து தங்களுக்கான சுய அடையாளத்துடனும் நல்ல வாழ்க்கையுடனும் அவர்கள் இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும். அது ஒன்று மட்டுமே இங்குள்ள பெண் குழந்தைகளிடம் நான் எதிர்பார்க்கும் கைம்மாறு. குடும்பச் சூழலால் பெண் குழந்தையை வளர்க்க முடியாதவர்கள் அவ்வை இல்லத்தில் சேர்த்துவிடுங்கள். அந்தக் குழந்தைகளை என் சொந்தக் குழந்தையைப்போல வளர்க்கிறேன். பெண் கல்வி நாட்டுக்கும் வீட்டுக்கும் மிகவும் அவசியம். எனவே, ஏழ்மையானவர்கள் தங்கள் பெண் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்த்துவிடுங்கள். தரமான கல்வியை இலவசமாகவே நாங்கள் தருகிறோம்.

என் எஞ்சிய வாழ்நாளையும் இங்கு வளரும் குழந்தைகளின் நலனுக்காகச் செலவிடவே விரும்புகிறேன். எனக்கென தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை நான் விரும்பவில்லை.

அவ்வை இல்லக் குழந்தைகள், அடையாறு புற்றுநோய் மையம், அக்கா, வீட்டுத்தோட்டம் ஆகியவைதாம் எனக்கான உலகம்.

இவற்றிலேயே அளவற்ற மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன்”

- சுசீலாவின் முகத்தில் பிரகாசிக்கும் புன்னகை அவரின் நிறைவான வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism