Published:Updated:

அந்திப்பொழுதில் அலாதி அனுபவம்! - ஹரிணி பத்மநாபன்

ஹரிணி பத்மநாபன்
பிரீமியம் ஸ்டோரி
ஹரிணி பத்மநாபன்

தனியே... தன்னந்தனியே...

அந்திப்பொழுதில் அலாதி அனுபவம்! - ஹரிணி பத்மநாபன்

தனியே... தன்னந்தனியே...

Published:Updated:
ஹரிணி பத்மநாபன்
பிரீமியம் ஸ்டோரி
ஹரிணி பத்மநாபன்

லக வரைபடத்தில் ஐரோப்பிய கண்டம் எங்கிருக்கிறது என்பதே தெரியாது பலருக்கும். சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஹரிணி பத்மநாபனுக்கோ, ஐரோப்பாவின் சந்து பொந்துகள்கூட அத்துப்படி. இவரின் ஐரோப்பிய டூர் அனுபவங்கள், வீட்டைவிட்டுத் தாண்டாத யாரையும் சிறகுகள் விரித்துப் பறக்கச் சொல்லும்.

‘`டிராவல் என்பது ரொம்ப சின்ன வயசுலேயே எனக்கு அறிமுகமான விஷயம். தனியே வெளியே போறது பெரிய விஷயமில்லைனு சொல்லி வளர்த்தாங்க பெற்றோர். வீட்டுலேருந்து ஸ்கூல் அரை கிலோமீட்டர் தூரத்துல இருந்தது. ரோட்டை கிராஸ் பண்ணிப் போகணும். ப்ரீகேஜி படிச்சிட்டிருந்தபோதே, ‘நானே தனியா போறேன். பயமில்லை’னு சொல்லியிருக்கேன். வீட்டிலும் பயப்படாம அனுப்பியிருக்காங்க. அப்பா அம்மா ரெண்டு பேரும் பேங்க் வேலையில் இருந்தாங்க. ஒவ்வொரு வருஷமும் குடும்பத்தோடு டூர் போவோம். அங்கெல்லாம் மியூசியம், பார்க் மாதிரியான இடங்களைத் தனியா சுத்திப் பார்ப்பேன். ‘45 நிமிஷம் டைம். சுத்திப் பார்த்துட்டு பத்திரமா இதே இடத்துக்கு வந்துடணும்’னு அப்பா சொல்லி அனுப்புவார். அக்காவும் நானும் தனித்தனியா சுத்திப் பார்த்துட்டு வந்துடுவோம். அந்தத் தைரியமும் சுதந்திரமும்தான் இன்னிக்கும் எங்கே போனாலும் துணை’’ - தனிமைப் பயணத்துக்குத் தயாரான பின்னணியுடன் தொடர்ந்து பேசுகிறார் ஹரிணி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`2016-ம் வருஷம், அபுதாபிக்குப் போனதுதான் என் முதல் சோலோ ட்ரிப். வெளிநாட்டுக்குப் பயணம் பண்ணினதும் அதுதான் முதன்முறை. அதனால வீட்டுல கொஞ்சம் பயந்தாங்க. ஆனாலும், நான் தைரியமா போயிட்டேன். வானிலை சரியில்லாததால் அன்னிக்கு ஃபிளைட் போய்ச்சேர ஒன்றரை மணி நேரம் தாமதமாயிடுச்சு. வீட்டுல எல்லாரும் பயந்துட்டாங்க. என்கிட்ட அப்போ சிம்கார்டு இல்லாதால வீட்டுக்கும் தகவல் சொல்ல முடியலை. ஏர்போர்ட்லேருந்து ஹோட்டலுக்குப் போனேன். அப்புறம் டிரைவர்கிட்ட போன் வாங்கி, அதுலேருந்து வீட்டுக்குத் தகவல் சொன்னேன். அந்த முதல் ட்ரிப்புல மட்டும் கொஞ்சம் தயக்கம் இருந்தது. அப்புறம் பலமுறை துபாய்க்குப் போயிட்டு வந்துட்டேன். முதன்முறை இருந்த தயக்கமோ, குழப்பமோ இல்லை.

அந்திப்பொழுதில் அலாதி அனுபவம்! - ஹரிணி பத்மநாபன்

அடுத்த சோலோ ட்ரிப் யூரோப்புக்கு. என் அக்கா நெதர்லாந்தில் வேலை பார்க்கறாங்க. அவங்களைப் பார்த்துட்டு அப்படியே ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ் போகலாம்னு யோசிச்சேன். அங்கே ஸ்விட்சர்லாந்துக்கு லோக்கல் பஸ் இருக்கு. அது ஜெர்மனி, பெல்ஜியம் வழியா, ஸ்விட்சர்லாந்துக்குப் போகும். டபுள்டெக்கர் பஸ்ல அப்பர் பெட்டுல முதல் சீட்டுல உட்கார்ந்தபடி ஊரை ரசிச்சுக்கிட்டே டிராவல் பண்ணின அந்த அனுபவம் சிலிர்ப்பானது.

ஜெர்மனியில் எம்.எஸ் படிக்கிற ஸ்டூடன்ட் ஸைச் சந்திச்சேன். பெல்ஜியம்லேருந்து ஒரு குரூப் வந்திருந்தது. எல்லாரும் சேர்ந்து நாலு நாள் டிராவலை என்ஜாய் பண்ணினோம்.

அங்கேயிருந்து பாரிஸ் போகறதா பிளான். ஆனா, தனியா போகணும்னு முடிவு பண்ணினேன். எந்த இடம், எப்படிப் போகணும்னு எல்லாத்தையும் `ஏர்பிஎன்பி' மூலமா நானே பிளான் பண்ணினேன். ஆம்ஸ்டர்டாம்லேருந்து ஒரு டிரெயின் கிளம்பும். அதுல ஏறி, ஈஃபில் டவர், நாட்ரே டாம் போயிட்டு, ஈஃபில் டவர் பக்கத்துலேயே தங்கறதுன்னு முடிவு பண்ணி ரூம் பார்த்தேன். ஏர்பிஎன்பியில் சாட் பண்ணி நான் வரப்போற நேரத்தைச் சொன்னேன். அது ஓர் அப்பார்ட்மென்ட். தொடர்புகொள்ள வேண்டிய நபர்கள் அப்போ அங்கே இல்லை. போன் மூலமா எனக்குத் தகவல்கள் கொடுத்தாங்க. முதல் டோரில் ஒரு கோடு இருக்கும். அதை என்டர் பண்ணி உள்ளே போக அவங்க இன்ஸ்ட்ரக் ஷன்ஸ் கொடுத்தாங்க. அடுத்து ஒரு ஹால், அதுல ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு போஸ்ட் பாக்ஸ் இருக்கும். அதுல உள்ள கோடை என்டர் பண்ணி, சாவியை எடுத்துக்கிட்டு, மூணாவது மாடியில இருந்த என் ரூமுக்குப் போனேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெண்கள் தனியே டிராவல் பண்ணும்போது அவங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்தச் சூழ்நிலையையும் தனியா கையாள முடியும் என்ற நம்பிக்கை வரும். தனியே டிராவல் பண்ணும்போது எது சரி, எது தப்புனு உள்ளுணர்வு நம்மை வழி நடத்திக்கிட்டே இருக்கும். தன் வேலைகளை சுயமா செய்துகொள்ளும் தைரியமும் வரும்.

நைட் 10 மணிக்கு ஈஃபில் டவர்லேருந்து லைட்ஸ் ஒளிரும். அது சம்மர் சீஸன். அங்கே ராத்திரி 10 மணிக்குத்தான் சூரியன் அஸ்தமனமாகும். அதன் பிறகு ஈஃபில் டவர்லேருந்து நாலு நிமிஷங்களுக்கு லைட்ஸை ஆன் பண்ணி ஆஃப் பண்ணுவாங்க. கண்கொள்ளாக் காட்சி அது. ஒரு நதி... அதன் இரண்டு பக்கங்களிலும் நினைவுச்சின்னங்கள்னு பாரிஸ் அவ்வளவு அழகு. சூரியன் மறைஞ்சதும் அந்த இடங்களில் விளக்குகள் ஒளிரும். அந்திப்பொழுதில் அங்கே படகுச் சவாரி செய்வது அலாதியான அனுபவம்’’ - அழகான விவரிப்பில் நம்மையும் அங்கே அழைத்துச்செல்கிறார் ஹரிணி.

அந்திப்பொழுதில் அலாதி அனுபவம்! - ஹரிணி பத்மநாபன்

‘`அவ்வளவு தூரம் வந்துட்டோம்... டிஸ்னிலேண்டையும் பார்த்துடுவோமேன்னு கிளம்பினேன். போன பிறகுதான், அங்கே தனியா வந்த ஒரே நபர் நான்தான்னு தெரிஞ்சது. மற்ற எல்லாரும் பெரிய குழுக்களா வந்திருந்தாங்க. ஆனாலும், நான் என்ஜாய் பண்ணினேன். அங்கேருந்து மறுபடி பாரிஸ் வர்றது கஷ்டம். அதனால அங்கேயே ஒரு ரூம் புக் பண்ணினேன். அது ஒரு வீடுன்னு சொல்லியிருந்தாங்க. அந்த வீட்டுல யாருக்கும் ஆங்கிலம் தெரியலை. எனக்கு பிரெஞ்சு தெரியலை. அந்த வீட்டில் அம்மா, அப்பா, ரெண்டு பசங்க இருந்தாங்க. நான் தங்கறதுக்காக அவங்க கொடுத்தது அவங்க மகளுடைய அறை. பாரிஸ்ல காலேஜ்ல படிச்சிட்டிருக்கிறதா சொல்லி அவங்களுடைய பெட், வாஷ் ரூம் எல்லாத்தையும் யூஸ் பண்ணிக்கச் சொன்னாங்க. காலையில எழுந்ததும் நல்ல பிரேக்ஃபாஸ்ட் கொடுத்தாங்க. மொழி புரியா விட்டாலும் அவங்களுடைய அன்பு புரிஞ்சது.

அதே ட்ரிப்பில் ஆம்ஸ்டர்டாம்ல டிரெயின்ல என்கூட ஓர் அப்பாவும் மகனும் டிராவல் பண்ணினாங்க. என்னைப் பார்த்ததும் ‘நீங்க இந்தியரா’ன்னு கேட்டாங்க. அவங்க ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்தவங்க. முதல்ல அவங்களோடு பேசலாமா கூடாதான்னு ஒரு தயக்கம் இருந்தது. அப்புறம் அவங்களே உரையாடலைத் தொடர்ந்தாங்க. அந்த ஊர்ல எந்தெந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்னு சொன்னாங்க. அந்த ஊர் பாதுகாப்பானதுதான், பயப்பட வேண்டாம்னு சொன்னாங்க. நான் திரும்பிவந்தபோது அதிர்ஷ்டவசமா அவங்களை டிரெயினில் மறுபடியும் சந்திச்சேன். ரொம்ப நாள் பழகின நண்பர்களைச் சந்திச்ச மாதிரி உணர்ந்தேன்’’ - நான்கு நாள்கள் பயணத்தில் நிறைய அன்பையும் அனுபவங்களையும் சம்பாதித்துத் திரும்பியிருக்கிறார் ஹரிணி.

அந்திப்பொழுதில் அலாதி அனுபவம்! - ஹரிணி பத்மநாபன்

பெண்களை வெளியுலகத்துக்கு வரச் சொல்கிற ஹரிணி, அப்படி வருவதால் நிகழக் கூடிய நல்ல மாற்றங்களையும் சொல்கிறார்.

‘`பெண்கள் தனியே டிராவல் பண்ணும்போது அவங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்தச் சூழ்நிலையையும் தனியா கையாள முடியும் என்ற நம்பிக்கை வரும். தனியே டிராவல் பண்ணும்போது எது சரி, எது தப்புன்னு உள்ளுணர்வு நம்மை வழி நடத்திக்கிட்டே இருக்கும். தன் வேலைகளை சுயமா செய்துகொள்ளும் தைரியமும் வரும். உதாரணத்துக்கு உடம்பு சரியில்லைன்னா தனியா டாக்டர்கிட்ட போறதுக்குப் பல பெண்கள் ரொம்ப யோசிப்பாங்க. தனியா டிராவல் பண்ணிப் பழகியவர்களுக்கு அப்படித் தோணாது. ‘தனியா போகாதே... அது பாதுகாப்பானதில்லை... யாராவது பிரச்னை பண்ணுவாங்க...’ - தனியே பயணத்துக்குத் தயாராகும் பெண்களை நோக்கி இந்த வார்த்தைகள் வரும். வீட்டுல உள்ளவங்களுக்கு நம்ம பாதுகாப்பு முக்கியம். அதுக்கேத்தபடி நாம அலர்ட்டா இருக்க வேண்டியதும் அவசியம்தான். ஆனா, நமக்கு அறிமுகம் இல்லாத மனிதர்களைப் பற்றி ஒரு முன்தீர்மானத்துற்கு வருவது சரியா இருக்காது. மனிதர்களின் மேல நம்பிக்கை வைக்கணும். தனியே டிராவல் பண்ணி நிறைய மனிதர்களைச் சந்திக்கும்போதுதான் அந்த நம்பிக்கை வரும்’’ - தனக்கு நேர்ந்த சம்பவத்தையே இதற்கு உதாரணமாகச் சொல்கிறார் ஹரிணி.

‘`நெதர்லாந்தில் 75 வயது டச்சுப் பெண்ணைச் சந்திச்சேன். நான் இந்தியாவி லிருந்து வந்திருக்கேன்னு தெரிஞ்சு என்கிட்ட பேசினாங்க. ‘இந்தியாவைப் பற்றி இன்னிக்கு ஒரு நியூஸ் படிச்சேன்.

18 வயசு பெண்ணுக்குக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணிவெச்சிட்டாங்களாமே... அது பிடிக்காமல் அவ புருஷனையே கொலை பண்ணிட்டாளாமே... இந்தியாவில் ஏன் இப்படி அரேஞ்ஜ்டு மேரேஜ் பண்றீங்க...’ன்னு கேட்டாங்க. ‘என் கணவர் துருக்கியைச் சேர்ந்தவர். அஞ்சு வருஷம் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணத்துக்கு அவரின் ஃபிரெண்ட்ஸ் ரெண்டு பேரும், என் ஃபிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் மட்டும்தான் வந்தாங்க. எனக்கு முடியாத நாள்களில் என் கணவர்தான் சமையல் செய்வார். அரேஞ்ஜ்டு மேரேஜ்ல இதெல்லாம் நடக்காதில்லையா...’ன்னு கேட்டாங்க. என்கூட இன்னும் சில பெண்களும் இருந்தாங்க. ‘நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. நாங்க எல்லாரும் எங்களுடைய வாழ்க்கையை எங்களுக்காக வாழறோம்’னு சொன்னோம்.

‘நீங்க எல்லாரும் உங்களுக்காகக் கல்யாணம் பண்ணிப்பீங்களா... உங்க அம்மா அப்பாவுக்காகப் பண்ணிப்பீங்களா’ன்னு கேட்டாங்க. ‘கண்டிப்பா எங்களுக்காகத்தான் கல்யாணம் பண்ணிப்போம்’னு நாங்க சொன்னதைக் கேட்டு அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அந்த இடத்தில் அப்படி யோர் உரையாடல் நடக்காமல் போயிருந்தா, அந்தப் பெண்ணுக்கு இந்தியாவின் மீதிருந்த அபிப்ராயம் வேறு மாதிரி இருந்திருக்கும். எங்களுடன் பேசிய பிறகு அந்தக் கருத்து மாறினதைப் பார்த்தோம். இதெல்லாம் பயணங்களால் மட்டுமே சாத்தியம்’’ - முக்கியமான மெசேஜ் சொல்பவரின் அடுத்த திட்டம், தனிமையில் ட்ரெக்கிங் செல்வது.

அதையும் அருமையாகச் செய்து முடிக்க வாழ்த்துவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism