லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

பொண்ணுங்கன்னா அந்த மாதிரி ஜோக்ஸ் சொல்லக்கூடாதா..? - ஸ்யாமா ஹரிணி

ஸ்யாமா ஹரிணி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்யாமா ஹரிணி

#Entertainment

‘பொண்ணுங்க கம்மியா இருக்கிறதாலதான் நீங்க ஸ்டாண்டு அப் காமெடியை செலக்ட் பண்ணீங்களா?'

`இல்ல... அங்க பசங்க நிறையா இருக்காங்கன்றதால தான் சூஸ் பண்ணினேன்' - டெரராக பேசத் தொடங்குகிறார் ஸ்யாமா ஹரிணி.

‘பயங்கர சீரியஸான ஆளு... அநியாயத்துக்கு காமெடி பண்ணினா...’ - அப்படியொரு காம்போதான் ஸ்யாமா ஹரிணி. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாமே சென்னையில்தான். பெரும்பாலான ஸ்டாண்டு அப் காமெடியன்கள் ஒற்றை மொழியில், அதிகபட்சம் இரண்டு மொழிகளில் பெர்ஃபாம் செய்கிறார்கள். ஆனால் ஸ்யாமாவோ ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மூன்று மொழிகளிலும் காமெடியை அள்ளித் தெளிக்கிறார். தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட `காமிக்ஸ்டான்' காமெடி நிகழ்ச்சியில் முதல் ரன்னர் அப் டைட்டில்தான் இவர்மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சியது.

பொண்ணுங்கன்னா அந்த மாதிரி ஜோக்ஸ் சொல்லக்கூடாதா..? - ஸ்யாமா ஹரிணி

“ஹோட்டல்ல தங்கவெச்சு, சாப்பாடு போட்டு காமெடி கத்துக்கோங்கன்னு சொன்னாங்க. போட்டிங்கிறதவிட காமிக்ஸ்டான் எங்களுக்கு ஸ்கூல் மாதிரிதான் இருந்துச்சு.ஸ்கூல், காலேஜ்ல நிறைய நாடகங்கள் கல்ச்சுரல்ஸ்னு ஒண்ணையும் விடமாட்டேன். பெரும்பாலும் காமெடி நாடகங்கள்ல அதிகம் கலந்துப்பேன். கல்ச்சுரல்ஸ்ல என்னைப் பார்க்குறவங்க, நீங்க ரொம்ப ஃபன்னியா பண்றீங்கன்னு சொல்வாங்க. டிகிரி முடிச்சதும் ஒரு வருஷம் வேலை பார்த்துட்டு பி.ஜி படிக்கப் போனேன். அந்த கேப்லதான் ஸ்டாண்டு அப் காமெடி பண்ணலாம்னு தோணுச்சு” என்பவர் எம்.ஏ பொருளாதாரம் படித்தவர். ஸ்டாண்டு அப் காமெடியில் கவனம் செலுத்துவதற்காக, கார்ப்பரேட் வேலைகளைத் தவிர்த்துவிட்டு பேட்மின்டன் கோர்ட் ஒன்றில் மேனேஜராகப் பணியாற்றுகிறார். இவரின் ‘வட போச்சே!’ என்ற முதல் சோலோ ஸ்டாண்டு அப் காமெடி ஷோ விரைவில் அரங்கேறவிருக்கிறது.

பொண்ணுங்கன்னா அந்த மாதிரி ஜோக்ஸ் சொல்லக்கூடாதா..? - ஸ்யாமா ஹரிணி

``நான் ஸ்டாண்டு அப் காமெடிக்கு முயற்சி பண்ண போது சென்னையில் அது அவ்வளவா பிரபலம் இல்ல. ஸ்டாண்டு அப் காமெடியன்களான அரவிந்த் எஸ்.ஏ, கார்த்திக்... இவங்களோட ஸ்டேஜ் ஷோஸ் பார்த்துதான், இதை ஏன் நாம ட்ரை பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு. அப்படித் தொடங்குனதுதான் இன்னிக்கு இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு” - ஸ்டாண்டு அப் பயோடேட்டா பகிர்ந்தார்.

“சுத்தி நடக்கிற விஷயங்கள், என்னோட லைஃப், லாக்டௌன் மாதிரி பெரிய தாக்கத்தை ஏற்படுத்துற விஷயங்களை வெச்சுதான் காமெடி ஸ்கிரிப்டை எழுதுவேன்” என்றவரின் நிகழ்ச்சிகளில் 18 ப்ளஸ் காமெடி சற்று தூக்கலாக இருக்கும்.

“பிரவீன்குமார், அலெக்ஸ்சாண்டர் பாபு மாதிரி நான் க்ளீன் காமிக் இல்ல. அதுக்காக ரொம்ப டர்ட்டி ஜோக்ஸும் எழுதுறதில்ல. 15, 16 வயசுலேயிருந்து என்னோட ஷோக்களுக்கு வரலாம். பீரியட்ஸ் பத்தின ஜோக்ஸ நான் சொல்லும்போது என் அம்மாவே அதைப்பத்தி எல்லாம் ஸ்டேஜ்ல பேசாதேன்னு சொன்னாங்க. ஆனா, அந்த சப்ஜெக்டைப் பத்தி பேசுனது ரொம்ப நல்லாயிருந்ததுன்னு நிறைய ஆடியன்ஸ் சொல்லியிருக்காங்க.

பொண்ணுங்கன்னா அந்த மாதிரி ஜோக்ஸ் சொல்லக்கூடாதா..? - ஸ்யாமா ஹரிணி

ஒரு இன்ஜினீயர், இன்ஜினீயரிங் பத்தி ஜோக் சொன்னா ரசிக் கிறாங்க. ஏன்னா, அதை அவர் அனுபவிச்சிருக்காரு சொல்றாரு. அதே மாதிரிதான் பீரியட்ஸ நான் அனுபவச்சிருக்கேன். அதை வெச்சி ஜோக் சொல்றேன். அதைப் பத்தி நானே பேசத் தயங்குனா அப்புறம் யார்தான் பேசுவாங்க... நான் சொல்ற காமெடி நல்லா இருக்கா இல்லையான்னு விமர்சனம் பண்ற உரிமை ஆடியன்ஸுக்கு இருக்கு. ஆனா, நீ ஒரு பொண்ணு அதனால இது மாதிரி ஜோக்ஸ் எல்லாம் சொல்லக் கூடாதுன்றதை நான் ஏத்துக்க மாட்டேன். இது மாதிரியான தடைகளையெல்லாம் உடைச்சு தான் இங்க வந்திருக்கேன்” - தன்னம் பிக்கை தெறிக்கிறது பேச்சில்.

`` `நேருக்கு நேர் பார்த்தாகூட சிரிக்க மாட்டாளே. இவளா காமெடி பண்றான்'னு என் ஃபிரெண்ட்ஸ், சொந்தக்காரங்க எல்லாம் கேட்டிருக் காங்க. சின்ன வயசுல இருந்தே நான் இன்ட்ரோவெர்ட்தான். காலம்தான் என்னைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்தியிருக்கு” என்கிறார் இந்த மொரட்டு சிங்கிள்.