Published:Updated:

நீங்களும் செய்யலாம்: ஸும்பா... டான்ஸ் பயிற்சி

காஷிஃபா
பிரீமியம் ஸ்டோரி
காஷிஃபா

காஷிஃபா

நீங்களும் செய்யலாம்: ஸும்பா... டான்ஸ் பயிற்சி

காஷிஃபா

Published:Updated:
காஷிஃபா
பிரீமியம் ஸ்டோரி
காஷிஃபா

`கல்யாணத்துக்கு முன்னாடி பாடறது, ஆடறதுன்னு ஏகப்பட்ட விஷயங்களைப் பண்ணிட்டிருந்தேன். கல்யாணத்துக்குப் பிறகு எல்லாத்தையும் நிறுத்தியாச்சு. வேலைக்கும் போகாம, வெட்டியா பொழுதைக் கழிக்க வேண்டியிருக்கு. சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பு பெருத்துப் போனதுதான் மிச்சம்' - பல வீடுகளிலும் இந்தக் குரல்களைக் கேட்கலாம். திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் ஏற்கெனவே இருக்கும் திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவும், பயன்படுத்திக் கொள்ளவும் பலருக்கும் குடும்பச் சூழல் வாய்ப்பளிப்பதில்லை. சென்னை, போரூரைச் சேர்ந்த காஷிஃபாவும் அப்படிக் குடும்பச் சூழல்களில் சிக்கி, திறமைகளோடு காணாமல்போயிருக்க வேண்டியவர்தான். ஆனால், சரியான நேரத்தில் அவர் எடுத்த சரியான முடிவு இன்று அவரை உடலளவிலும் மனத்தளவிலும் ஆரோக்கியமான மனுஷியாக மாற்றியிருக்கிறது. ஸும்பா டிரெயினர் என்ற அடையாளத்துடன் அழகாக வலம்வருகிற காஷிஃபாவின் கதை, பலருக்கும் நம்பிக்கையளிக்கும்.

காஷிஃபா
காஷிஃபா

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஸும்பா பயிற்சியாளராவதன் மூலம் கணிசமான தொகையைச் சம்பாதிக்க முடியும்!

``சின்ன வயசுலேருந்தே டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். முறைப்படி கத்துக்கவோ, அதையே முழுநேரமா பண்ணவோ வீட்டுச் சூழல் அனுமதிக்கலை. எம்.ஏ ஆங்கில இலக்கியம் முடிச்சேன். படிப்பையெல்லாம் முடிச்சபிறகுதான் என் டான்ஸ் கனவு நிறைவேறியது. உண்மையைச் சொல்லணும்னா அந்த நேரத்துல நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்தேன். அதுலேருந்து வெளியில வர்றதுக்கு என்ன வழிகள்னு தேடிட்டிருந்தபோது ஸும்பா பற்றித் தெரியவந்தது.

காஷிஃபா
காஷிஃபா

ஸும்பாவை வெறும் டான்ஸா மட்டும் பார்க்க முடியாது. எடைக்குறைப்புக்கு உதவும். மன அழுத்தத்திலிருந்து மீள நினைக்கிறவங்களுக்கும் உதவும். சிலர் தவறான டயட் முறைகளைப் பின்பற்றி எடையைக் குறைச்சிடுவாங்க. ஆனா, அவங்களுடைய தசைகள் தளர்ந்து தொங்கும். ஸும்பா பண்ணும்போது அந்தத் தசைகள் இறுகும். உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். `எனக்கு டான்ஸ் ஆடத் தெரியாதே'ன்னெல்லாம் நினைக்க வேண்டாம். கர்ப்பிணிகள்கூட ஸும்பா பிராக்டிஸ் பண்ணலாம்'' - ஸும்பாவின் நன்மைகளை அடுக்குபவர், பெண்களுக்கான பிரத்யேக ஸும்பா பயிற்சி மையம் ஆரம்பித்த கதையையும் சொல்கிறார்.

காஷிஃபா
காஷிஃபா
ஸும்பா கத்துக்கிட்ட பிறகு எனக்குள்ளே பர்சனலா நிறைய மாற்றங்களை உணர்ந்தேன். மனசும் உடம்பும் முன்னைவிட ஆரோக்கியமா மாறினதை உணர முடிஞ்சது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``சென்னையில ஒரு தனியார் பள்ளிக்கூடத்துல டீச்சரா வேலை பார்க்கறேன். ஸும்பா கத்துக்கிட்ட பிறகு எனக்குள்ளே பர்சனலா நிறைய மாற்றங்களை உணர்ந்தேன். மனசும் உடம்பும் முன்னைவிட ஆரோக்கியமா மாறினதை உணர முடிஞ்சது. அந்த அனுபவத்தை மத்தவங்களையும் ஃபீல் பண்ணவைக்கணும்னா நான் கத்துக்கொடுக்கலாமேன்னு தோணுச்சு.டீச்சர் வேலைக்கான நேரம் போக ஓய்வு நேரத்துல ஸும்பா கிளாஸ் எடுக்கறேன். ஒரே ஒரு பெண்ணோடு ஆரம்பிச்சது. இன்னிக்கு முப்பதுக்கும் மேலானவங்க வராங்க. ஸும்பா கத்துக்கிறவங்க பெரும்பாலும் கத்துக்கிட்டதும் `போதும்'னு சொல்லிட்டுப் போறவங்க இல்லை. ஜிம்முக்குப் போறவங்களைப் போல தொடர்ந்து வர்றவங்க இருக்காங்க'' எனும் காஷிஃபா, ``ஸும்பா பயிற்சியாளராவதன் மூலம் கணிசமான தொகையைச் சம்பாதிக்க முடியும்'' என்கிறார். அதற்கான வழிகளையும் காட்டுகிறார்.

காஷிஃபா
காஷிஃபா

என்னென்ன தேவை... முதலீடு?

அடிப்படையான பயிற்சிதான் முதலீடு. முழு வீச்சில் கற்றுக்கொள் பவர்கள் மூன்று மாதங்களில் இதில் நிபுணர்களாகலாம். அதிகபட்சமாக ஆறு மாதங்கள் ஆகலாம். வீட்டின் விஸ்தாரமான ஓர் அறையை பயிற்சிக்கான இடமாக மாற்றிக் கொள்ளலாம். கற்றுக்கொள்வதற்கான கட்டணம் மட்டும்தான் செலவு. ஒரு மாதப் பயிற்சிக்கு 1,800 முதல் 2,000 ரூபாய்வரை கட்டணம் வசூலிக்கப்படும். பயிற்சியாளர் தேர்வுக்கான லைசென்ஸ் கட்டணம் தனி.

இதை பிசினஸாகச் செய்ய முடியுமா?

தன்னுடைய உடல், மன ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக் கொள்வதுதான் நோக்கம் என்பவர்கள் கற்றுக்கொண்டு வீட்டிலோ, ஸும்பா சென்டரிலோ தொடர்ந்து பிராக்டிஸ் செய்யலாம். அதையே மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்துக் காசும் பார்க்கலாம். பயிற்சியாளராக விரும்புவோர், `ஸும்பா.காம்' என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் இரண்டு நாள்கள் பயிற்சி நடைபெறும். அந்தப் பயிற்சியில் ஸும்பா என்றால் என்ன என்பதில் தொடங்கி, அதன் ஸ்டைல், வாடிக்கையாளர்களை எப்படிக் கையாள்வது, அவர்களது ஆரோக்கியத்தின் அடிப்படையில் எப்படிப் பயிற்சி அளிக்க வேண்டும் என எல்லாத் தகவல்களும் கற்றுக்கொடுக்கப்படும். இந்தப் பயிற்சியை முடித்ததும் குறைந்தது ஆறு மாதங்கள் பிராக்டிஸ் செய்தால் பயிற்சியாளராவதற்கான முழுத் தகுதிகளையும் பெறலாம். இந்தப் பயிற்சிக்கு 18,000 ரூபாய் கட்டணம். சர்வதேச கம்யூனிட்டி என்பதால் இங்கே இந்தப் பயிற்சியை முடிப்பவர்கள் இந்தியாவில் மட்டுமன்றி எங்கே சென்றாலும் ஸும்பா இன்ஸ்ட்ரக்ட்ராக வேலைசெய்யலாம்.

காஷிஃபா
காஷிஃபா

இதற்கென தனியிடம் வைக்க வசதியிருப்பவர்கள் அப்படிச் செய்யலாம். மற்றவர்கள் ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருக்கும் டான்ஸ் ஸ்கூல் மற்றும் ஸும்பா சென்டர் களில் உதவியாளராகவோ, பயிற்சியாள ராகவோ வேலை பார்க்கலாம்.

எவ்வளவு சம்பாதிக்கலாம்? லாபம்?

நகரங்களில் ஸும்பா பயிற்சி வகுப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மாதத்துக்கு 2,000 முதல் 3,000 ரூபாய்வரை கட்டணம் வாங்கலாம். ஸ்டூடியோ அல்லது ஜிம்மில் பகுதிநேரப் பயிற்சியாளராக கமிஷன் அடிப்படையில் வேலை பார்க்கலாம். ஒரு செஷன் ஒரு மணி நேரம் வரை போகும். முழு நேரமும் இதையே செய்ய நினைப்பவர்கள் காலையில் இரண்டு பேட்ச், மாலையில் இரண்டு பேட்ச்வரை எடுக்கலாம். மாதத்தில் குறைந்தது 10,000 ரூபாய் சம்பாதிக்க முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism