Published:Updated:

பஞ்சபூதங்கள்: நெருப்பு... நெருங்குவேன்... விரும்புவேன்!

அனுஷாஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
அனுஷாஸ்ரீ

அனுஷாஸ்ரீ

பஞ்சபூதங்கள்: நெருப்பு... நெருங்குவேன்... விரும்புவேன்!

அனுஷாஸ்ரீ

Published:Updated:
அனுஷாஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
அனுஷாஸ்ரீ

``புறக்கணிப்புகளைத் தாண்டி சாகச நடனத்தை மக்கள் அங்கீகரிக்கும் கலை யாகப் பிரபலப்படுத்துவதுதான் என் இலக்கு. அதுக்காக, என் படிப்பு உட்பட பல்வேறு சந்தோஷங்களை இழந்துட்டேன். ஆனா, அதுக்கெல்லாம் நான் பெரிசா வருத்தப் பட்டதில்லை” - இளம் நாட்டுப்புறக் கலைஞர் அனுஷாஸ்ரீயின் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள், இந்தக் கலை மீதான நேசத்தை அழுத்தமாக உணர்த்துகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் தீத்தீப்பாளையத்தைச் சேர்ந்தவர் இவர்.

பஞ்சபூதங்கள்: நெருப்பு... நெருங்குவேன்... விரும்புவேன்!

``ஸ்கூல் போட்டிகளில் நாட்டுப்புற நடனப் பிரிவுகளில் விளையாட்டா பங்குபெற ஆரம்பிச்சேன். நாமக்கல்ல நடந்த என் முதல் மேடை நிகழ்ச்சியில, பாட்டில்கள் மீது பலகையை வெச்சு கரகமாடும் சாகச நிகழ்ச்சி செய்தேன். அப்போ பாட்டில் கவிழ்ந்து விழுந்துட்டேன். பார்வையாளர்கள் சிரிச்சுட்டாங்க. வைராக்கியத்துடன் பயிற்சி எடுத்து, அதன் பிறகான எல்லா நிகழ்ச்சிகளிலும் பலரும் என்னைப் பாராட்டும்படியாக நடனமாடுறேன். ஏழாவது படிக்கும்போதே கயிறு கட்டாமலேயே தலையில் கரகத்தை வெச்சு ஆட ஆரம்பிச்சேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பத்தாவது வரை ரெகுலர் ஸ்கூல்ல படிச்ச நிலையில, கரஸ்ல ப்ளஸ் டூ முடிச்சேன். இப்போ கிளாஸிக்கல் டான்ஸ் டிப்ளோமா கோர்ஸ் படிக்கிறேன். இதுக்கிடையே, பல்வேறு கிராமியக் கலைகள் மீதும் ஆர்வம் அதிகமாகவே, இந்தக் கலையையே என் படிப்பாகவும் கரியராகவும் மாத்திக்கிட்டேன்.

வெளிநிகழ்ச்சிக்குப் போகும்போது ரெண்டு முறை கார் விபத்துல உயிர்பிழைச்சிருக்கேன். நெருப்பு மற்றும் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி நடனமாடும்போதும், சாகசங்கள் பண்ணும்போதும் பல்வேறு தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கு. தலைமுடி கருகியிருக்கு. ஒருமுறை என் உடல் முழுக்க நெருப்பு பத்திக்க, சுத்தியிருந்தவங்க உடனே காப்பாத்திட்டாங்க” என்று ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் அடுத்தடுத்து அளிக்கிறார்.

அனுஷாஸ்ரீ
அனுஷாஸ்ரீ

``இப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்துதான், மக்களின் பார்வையை நாட்டுப்புறக்கலை மீது திருப்ப முடியுது. நம்ம நாட்டுப்புறக்கலைகளை இந்தியா மட்டுமில்லாம, உலகம் முழுக்கவுள்ள இளைஞர்கள்கிட்ட கொண்டுபோகணும்னு ஆசைப்படறேன். அதுக்கு என் சாகச முயற்சிகள் தவிர்க்க முடியாததா இருக்கு. என் அம்மா ஜெயந்தி என் பாதுகாப்புக்கு எந்நேரமும் உடன் இருப்பாங்க. அதனால நெருப்பு சாகசம் உட்பட எதுக்குமே எனக்கு பயமில்லை.

ஆணிகள், உருளை, தட்டு, பித்தளைக் குடம், பாட்டில் போன்றவற்றின் மீது நின்றபடி சாசகம் செய்வது, கண்ணில் ஊசி எடுப்பது, படுத்து மற்றும் உட்கார்ந்தபடியே புடவை கட்டுதல் போன்றவற்றை, கரகம் ஆடியபடியே செய்வேன். நெருப்பு சாகசங்கள், ரிங் சுற்றுதல் உட்பட பல்வேறு சாகசங்களை பரதம் ஆடியபடியே செய்வேன்” என்கிற அனுஷா, தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். கரகம், பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், சிலம்பம், கட்டைக்கால் ஆட்டம், சாகச நடனம் போன்ற பல்வேறு கலைகளிலும் ஆழ்ந்த அனுபவம் பெற்றிருக்கிறார்.

கரகம் ஆடியபடியே இரண்டு மணிநேரம் ஆணிகள்மீது நிற்பது, கரகம் ஆடியவாறு உடைந்த கண்ணாடித் துண்டுகள்மீது நடந்துகொண்டே 16 நிமிடத்தில் 35 பொருள் களைக் கொண்டு சாகசம் செய்தல், வளை யத்தை மாட்டிக்கொண்டு ஒரு நிமிடத்தில் 225 சுற்றுகள் சுற்றுவது உட்பட ஆறு உலக சாதனைகளை நிகழ்த்தியிருக்கிற அனுஷா, விரைவில் சினிமாவில் நடிக்கவிருக்கிறார்.