Published:Updated:

மோடியின் சிரிப்பு, தோழியாய் இந்திரா நூயி, குழந்தையாய் விஜய் சேதுபதி!

ஆர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்த்தி

‘மாஸ்டர் செஃப்’ ஆர்த்தியின் வெற்றிக்கதை!

மோடியின் சிரிப்பு, தோழியாய் இந்திரா நூயி, குழந்தையாய் விஜய் சேதுபதி!

‘மாஸ்டர் செஃப்’ ஆர்த்தியின் வெற்றிக்கதை!

Published:Updated:
ஆர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்த்தி

உலக அளவில் ஹிட் டடித்த ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி, சன் டிவி-யின் வாயிலாக முதன்முறையாகத் தமிழில் ஒளிபரப்பாவ தால் எதிர்பார்ப்பு எகிறியது. இதில், ஒரே பெண் நடுவராக கவனம் பெற்றுள்ளார் ஆர்த்தி சம்பத். “வீட்டின் சமையலறை பெண்களுக்கான இடமா இருக்கலாம். ஆனா, வெளியுலகத்துல ஆண்களுக்கான ராஜ்ஜியமா இருக்குற இந்தச் சமையல் துறையில பல அவமானங்களைக் கடந்து சாதிச்சிருக்கேன்” என்று தொடக்க நிகழ்ச்சியில் உணர்ச்சிப் பெருக்குடன் ஆர்த்தி கூற, கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர், இந்தியாவிலும் அமெரிக்கா விலும் முன்னணி நட்சத்திர ஹோட்டல் களில் சமையற்கலைஞராகப் பணியாற்றி யுள்ளார்.

பிரதமர் மோடி, இந்திரா நூயி, ஷாருக் கான், சூர்யா போன்றோரின் பாராட்டுகளைப் பெற்றவர். அமெரிக்காவில் வசிக்கும் ஆர்த்தியுடனான உரையாடலில் தமிழ் மணம் வீசுகிறது.

“சென்னையில பிறந்தாலும், நான் வளர்ந்ததெல்லாம் மும்பையில. ஸ்கூல் படிக்கும்போது சம்மர் லீவுக்கு சென்னையில உறவினர்கள் வீட்டுக்கு வந்திடுவேன்.

மோடியின் சிரிப்பு, தோழியாய் இந்திரா நூயி, குழந்தையாய் விஜய் சேதுபதி!

என் ரெண்டு பாட்டிகளும் பலவிதமான சைவ, அசைவஉணவுகளைப் பாரம்பர்ய கைப்பக்குவத்துல எனக்குச் சமைச்சுக் கொடுப்பாங்க. அந்தச் சுவையும் உபசரிப்பும் மனசுல தங்கினதால, உணவுக்கலைமீது ஆர்வம் ஏற்பட்டுச்சு. ஸ்கூல் முடிச்சதும், ஜெய்ப்பூர்ல உள்ள முன்னணி இன்ஸ்டி டியூட்ல கேட்டரிங் கோர்ஸ் படிச்சேன்”

- அடுத்த ஐந்து ஆண்டுகளில் சென்னை, மும்பை, டெல்லி உட்பட இந்தியாவிலுள்ள தாஜ் குழுமத்தின் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களிலும் சமையற்கலைஞராக வேலை செய்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில், ஷாருக் கான், சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் ஆர்த்தியின் சமையலைப் பாராட்டியுள்ளனர். மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஆர்த்திக்கு எதிர்பாராத ஏமாற்றங்களும், இன்ப அதிர்ச்சிகளும் கிடைத்திருக்கின்றன.

“மேற்படிப்பை முடிச்சதும் நியூயார்க்ல ஸ்டார் ஹோட்டல் ஒண்ணுல வேலைக்குச் சேர்ந்தேன். இந்தியாவுல செஃப்பா வேலை செஞ்சிருந்தாலும்கூட, அந்த நாட்டு வழக்கப்படி ‘குக்’ லெவல்லேருந்து ஃப்ரெஷ்ஷரா என் பயணத்தை ஆரம்பிச்சேன். ஆனா, ஆறே மாசங்கள்ல என் திறமையைப் பார்த்துட்டு, செஃப் பொறுப்பு கொடுத்தாங்க. பிறகு, சில ஹோட்டல்களுக்கு மாறுதலானேன். 2015-ல், அமெரிக்காவுக்கு வந்த பிரதமர் மோடி, டாப் லெவல் சி.இ.ஓ-க்கள் 50 பேருடன் நடத்திய ‘பில்லியனர் கிளப் டின்னர்’ நிகழ்வுக்கு, உணவு சமைக்குற தலைமைப் பொறுப்பு எனக்குக் கிடைச்சது.

மோடியின் சிரிப்பு, தோழியாய் இந்திரா நூயி, குழந்தையாய் விஜய் சேதுபதி!

அந்த ஒரு வேளைக்கான விருந்துல சைவம் மற்றும் அசைவத்துல 50 வகையான உணவுகளைத் தயாரிச்சோம். நானும் என் குழுவினரும் மூணு நாள்கள் தூக்கமின்றி வேலை செஞ்சோம். ‘சாப்பாடு பிடிச்சிருந்துச்சா?’ன்னு பிரதமர்கிட்ட இந்தியில கேட்டேன். என் தோள்ல தட்டிக்கொடுத்தபடியே, ‘ரொம்ப நல்லாயிருந்துச்சு’ன்னு சிரிச்சுகிட்டே சொன்னார். அந்த நிகழ்வுல பங்கேற்ற இந்திரா நூயியைச் சந்திச்சது எனக்குக் கூடுதல் சர்ப்ரைஸ். ‘நீங்கதான் சமைச்சீங்களா? எல்லா டிஷ்ஷூம் சூப்பர்’னு ஒரு தோழியைப்போல அன்போடு என்னைக் கட்டியணைச்சு பாராட்டினார்.”

- மகிழ்ச்சியைப் பகிரும் ஆர்த்தி, சில உணவகங்களுக்கு ஆலோசகராகவும், தனியார் நிகழ்ச்சிகளில் பயிற்சி வழங்கும் பிரைவேட் செஃப்பாகவும் பணியாற்றுவதுடன், ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனம் ஒன்றையும் நடத்துகிறார்.

`மாஸ்டர் செஃப்' வாய்ப்பு குறித்துப் பேசுபவர், “அமெரிக்காவுல பிரபலமான ரெண்டு குக்கரி ரியாலிட்டி நிகழ்ச்சிகள்ல நடுவரா இருந்திருக்கேன். இந்த நிலையில, ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சிக்கு முதல்ல கெஸ்ட்டாதான் கூப்பிட்டாங்க. சில நாள்கள்லயே நடுவரா வர்றீங்களான்னு கேட்டாங்க. இந்த நிகழ்ச்சியில குழந்தை மாதிரி ஒவ்வொரு விஷயத்தையும் ஆர்வமா தெரிஞ்சுக்கும் விஜய் சேதுபதி, போட்டியாளர்களை மட்டுமல்ல, நடுவர்களான எங்களையும் ரொம்பவே உற்சாகப்படுத்துறார். பல வருஷங் களா அமெரிக்காவுல இருந்ததால தமிழ்ல பேச கொஞ்சம் தடுமாறுவேன். அப்பல்லாம் சரியான தமிழ் வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்து விஜய் சேதுபதி ஹெல்ப் பண்ணுவார்.”

மோடியின் சிரிப்பு, தோழியாய் இந்திரா நூயி, குழந்தையாய் விஜய் சேதுபதி!

இந்தத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் அத்தனை சவால்களையும் கடந்தே, நட்சத்திர சமையற்கலைஞராக உயர்ந்திருக்கிறார் ஆர்த்தி.

“வீட்டைப் பொறுத்தவரை சமைக்குறது பெண்களுக்கு நிர்பந்தம் கலந்த பொறுப்பாதான் இருக்கு. இதுவே, பெரிய ஹோட்டல்கள்னு வரும்போது, ‘ஏராளமானோருக்கு சமைக்கணும்; அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்கணும்; நேரங்காலம் பார்க்க முடியாத வேலைச்சூழல்; குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்காது; ஆண்கள் சூழ்ந்த வேலை’ன்னு பெண்களுக்கு இந்தத் துறை சரிப்பட்டு வராதுனு பல காரணங்கள் முன்வைக்கப்படுது. இந்தத் துறையிலிருக்குற ஆண்கள் பலரும், பெண்கள் சமையற்கலைஞரா வருவதை விரும்புறதில்ல. உலக அளவுல இந்தத் துறையில வெறும் ரெண்டு சதவிகிதப் பெண்கள்தான் ஸ்டார் ஹோட்டல்கள்ல வேலை செய்யுறாங்க. நான் இந்த ஃபீல்டுல நுழைஞ்சப்போ, ‘எளிமையான பேக்கிங் துறைக்கு நீ போயிருக்கலாமே’ன்னு சிலர் சொன்னாங்க. அமெரிக்காவுல இந்தப் பாகுபாடுகள் இன்னும் அதிகமாவே இருக்கும். இங்கு ஒரு ஹோட்டல்ல வேலை செஞ்சப்போ, ‘உன் இடம் வீட்டு கிச்சன்தான். இங்க எதுக்குச் சமைக்குறே?’ன்னு ஆண் செஃப் ஒருத்தர் கேட்டார். இப்படி அப்பப்போ வருத்தமான நிகழ்வுகள் தொடர்ந்தாலும், விமர்சனங்கள்லேருந்து பயனுள்ள கருத்துகளை மட்டும் எடுத்துப்பேன்.

மோடியின் சிரிப்பு, தோழியாய் இந்திரா நூயி, குழந்தையாய் விஜய் சேதுபதி!

நான் எந்த உணவைச் சமைச்சாலும், என் ஃபேவரைட்டான நம்ம சவுத் இந்தியன் உணவுகளின் டச் அதுல இருக்கும். இங்குள்ள ஒரு காலேஜ்ல சமையல் துறைக்குப் பாடமும் எடுக்குறேன். சந்தோஷம், வருத்தம்னு எது நடந்தாலும், பிடிச்ச டிஷ்ஷை சமைச்சு சாப்பிட்டு என்னை உற்சாகப்படுத்திப்பேன். சமைக்குறதும் சாப்பிடுறதும், மத்தவங் களுக்குப் பரிமாறி உபசரிக்குறதும் கொண்டாட்டத்துடன் செய்ய வேண்டிய விஷயங்கள். உணவை ரசிச்சு ருசிச்சு சாப்பிடுறவங்க வாழ்க்கையையும் ஹேப்பியா கட்டமைச்சுப்பாங்க” என்று உணவுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தி முடிக்கிறார் ஆர்த்தி.

உணவைக் கொண்டாடுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism