இளம் வயதில் ஹாக்கியில் கலக்கிய பெண்கள் அணியினர் இருபது வருடங்கள் கழித்து என்னவாக இருப்பார்கள்? திருமணம், குழந்தை, விளையாட்டு சார்ந்த பணி என்றுதானே!

மிகச் சரி. ஆனால், அவர்கள் மீண்டும் விளையாட ஆரம்பித்தால்... பட்டையைக் கிளப்பி பதக்கம் வென்று வருவார்கள் என்பதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் முன்னாள் தமிழக ஹாக்கி மகளிர் அணியினர். 35 வயதைக் கடந்த வீரர்களுக்காக நடத்தப்படும் ‘Veteran Sports’ பிரிவில் ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த ‘ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் ஹாக்கி’ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று வந்திருக்கிறார்கள் தமிழகப் பெண்கள். ‘ஆட்டோகிராப்’ பட பாணியில் இருபது வருடங்கள் கழித்து இணைந்தவர் களுடன் பேசினோம்.

‘‘90-கள்ல தமிழக அணிக்காக விளையாடி னோம். அப்போ இந்திய அணிக்காக விளையாட மாட்டோமான்னு ஏங்கினோம். அந்த ஆசை நிறைவேறலை. 99-ம் வருஷம், தனிப்பட்ட காரணங்களுக்காக நாங்க ஒவ்வொருத்தரா ஹாக்கி அணியிலிருந்து விலகினோம்’’ என்று இன்ட்ரோ கொடுக்கிறார் வழக்கறிஞர் சாருலதா.

சரி, இவர்கள் எல்லாம் எப்படி ஒன்றிணைந் தார்கள் என்கிற நம் கேள்விக்கான பதிலைச் சொல்கிறார்கள் கேப்டன் ரேகாவும் பிளேயர் எலினாவும். ‘‘ஹாக்கி அணியில விளையாடுறவங்க, சப்ஸ்டிடீயூட்டுன்னு எல்லாரையும் சேர்த்து டீம்ல 17 பேர் இருப்போம். 15 வருஷத்துக்குப் பிறகு ஒரு நாள், நம் பழைய டீமை ஒருங்கிணைச்சா என்னன்னு தோணுச்சு. சிலரோட நம்பர் இருந்தது. அவங்களை வெச்சு ஒவ்வொருத்தரையா கண்டுபிடிச்சோம். சொன்னா நம்பமாட்டீங்க, திருமணமாகி புகுந்த வீட்டுக்குப் போனப்ப ஹாக்கி ஸ்டிக்கை எடுத்துட்டுப்போன கேங் நாங்க. ஸோ, ஒண்ணு சேர்த்ததும், ‘மறுபடியும் விளையாடினா என்ன?’ன்னு கேட்டப்ப எல்லாரும் செம உற்சாகமாகிட்டாங்க. அப்ப தொடங்கவிருந்த ‘சென்னை லீக்’ போட்டிக்குப் பதிவு செஞ்சோம்’’ என உற்்சாக மாக விவரிக்கிறார்கள் இருவரும்.

அடுத்ததாகப் பேசினார் சாருலதா, “வார்ம் அப், பிராக்டீஸ்னு எதுவும் செய்யாம நேரடியா `சென்னை லீக்’ போட்டிக்குப் போனோம். வயசு காரணமா ஓடியாடுறதுல கொஞ்சம் பின்தங்கினோம். அதை, எங்களின் சரியான வியூகத்தால சமன் செய்து போட்டியில ஜெயிச்சோம். 20 வருஷங்கள் கழிச்சு கிடைச்ச அந்த வெற்றிதான் எங்களை மேற்கொண்டு பயணிக்கத் தூண்டியது’’ என்கிறார்.

சென்னை லீக் தொடரைத் தொடர்ந்து, டேராடூனில் நடந்த தேசிய அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் இந்த அணியினர். அடுத்ததாக, ‘ஐரோப்பிய மாஸ்டர்ஸ்’ தொடரில் வெண்கலப் பதக்கம் பெற்று, ‘ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் ஹாக்கி’ போட்டிக்கும் தேர்வாகியிருக்கிறார்கள். மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்க, சொந்தமாகத்தான் செலவு செய்ய வேண்டும். அது மட்டுமல்ல... சாஃப்ட் திசு சர்கோமா (Soft Tissue Sarcoma) புற்றுநோயில் இருந்து மீண்ட பெண், தொடர்ந்து நிற்க வேண்டிய வேலையில் இருக்கும் பெண், கையில் அறுவை சிகிச்சை செய்தவர் என டீமில் ஒவ்வொரு வருக்கும் உடல், மனப் பிரச்னைகள் ஏராளம் இருந்திருக்கின்றன.

யாருக்குத்தான் பிரச்னைகள் இல்லை? பாசிட்டிவிட்டி இருந்தால் போதும் பட்டையைக் கிளப்பலாம்!

குடும்ப நிர்வாகி அனிதா, ``எங்க அணிக்குன்னு கோச், பிசியோதெரபிஸ்ட்னு யாரும் இல்லை. நாங்களே பொறுப்புகளை யெல்லாம் பிரிச்சுகிட்டோம். எங்க குடும்பங் களும் இதுக்கு ஒத்துழைப்புத் தந்ததுதான் உற்சாகமா இருந்தது’’ என்கிறார் கண்கள் பனிக்க...

தலைமைக் காவலராகப் பணிபுரியும் தேன்மொழி, “இந்தப் போட்டிக்கான செலவுதான் கண்ணைக் கட்டுச்சு. ஒரு கட்டத்துல விசா எடுக்க சிரமப்பட்டப்போ, எங்க கேப்டன் ரேகா எனக்கு உதவுனாங்க. பொதுவா, பொண்ணுங்க ஒண்ணு கூடினாலே பிரச்னைகள் அதிகமா இருக்கும்னு சொல்வாங்க. ஆனா, எங்க டீம்ல அன்பு, விளையாட்டு, வெற்றி... இதைப் பத்தி மட்டும்தான் பேசியிருக்கோம். இப்ப, ஒரு குடும்பமாவே மாறிட்டோம்’’ என்கிறார் நெகிழ்வாக.

ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப்போட்டி 2-2 என டிராவில் முடிய, பெனால்டி ஷூட்-அவுட் முறையில் தெற்கு ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றிருக்கிறது.

“வெள்ளிப்பதக்கம் ஜெயிச்சுட்டு வந்துட் டோம். இதுவே கடைசி போட்டியா இருந்திடக் கூடாதுன்னு நம்புறோம். யாருக்குத்தான் பிரச்னைகள் இல்லை... பாசிட்டிவிட்டி இருந்தால் போதும் பட்டையைக் கிளப்பலாம்’’ என்று பன்ச் சொல்லி முடிக்கிறார் மென்திறன் பயிற்சியாளர் லக்ஷ்மி.