Published:Updated:

மன அழுத்தத்தைப் போக்கும் செயற்கை நீரூற்று! - மீரா தேவி

மீரா தேவி
பிரீமியம் ஸ்டோரி
மீரா தேவி

நீங்களும் செய்யலாம்

மன அழுத்தத்தைப் போக்கும் செயற்கை நீரூற்று! - மீரா தேவி

நீங்களும் செய்யலாம்

Published:Updated:
மீரா தேவி
பிரீமியம் ஸ்டோரி
மீரா தேவி

ரொம்பவும் மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? டி.வி பார்ப்பது, புத்தகம் படிப்பது என எதுவும் அதிலிருந்து உங்களை மீட்கவில்லையா? வீட்டுக்கு அருகே இருக்கும் பூங்காவுக்குச் சென்று அங்கே மெல்லிய சத்தத்துடன் சலசலத்துக்கொண்டிருக்கும் செயற்கை நீரூற்றை ரசித்தபடியே சற்றுநேரம் அமர்ந்து பாருங்கள்... சில நிமிடங்களில் மனம் ரிலாக்ஸ் ஆகியிருக்கும். அதுதான் நீரூற்றுகளின் மகிமை!

எல்லா நேரமும் எல்லோரும் இப்படி வெளியிடங்களில் அமைக்கப் பட்டிருக்கும் நீரூற்றுகளைத் தேடிச் செல்ல முடியாதல்லவா? அவற்றின் மினியேச்சரை நாமே உருவாக்கி, வீட்டுக்குள் வைத்து அழகுபார்த்தால்! விதவிதமான செயற்கை நீரூற்றுகளைத் தயாரித்து விற்பனை செய்கிறார் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த மீரா தேவி. வீட்டுக்குள் நீரூற்று வைப்பது வாஸ்துபடி நல்லது என்பது அதில் நம்பிக்கை உள்ளோருக்கான தகவல் என்கிறார்.

``பி.எஸ்ஸி, விலங்கியல் படிச்சிருக்கேன். கைவினைக் கலைகள் செய்வதில் ஆர்வம் அதிகம். கல்யாணத்துக்குப் பிறகு என் மாமியார்கிட்டயிருந்து நிறைய கைவினைக் கலைகளைக் கத்துக்கிட்டேன். ஒருகட்டத்துல எங்கெல்லாம் என்னவெல்லாம் கிராஃப்ட்ஸ் சொல்லித் தர்றாங்கன்னு தேடிப் போய் கத்துக்க ஆரம்பிச்சேன். இப்போ நான் மத்தவங்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கேன். நான் செய்யும் கலைப் பொருள்களில் எனக்கு ரொம்பப் பிடிச்சது செயற்கை நீரூற்று. சலசலக்கும் நீரோடையின் சத்தம் யாருக்குத்தான் பிடிக்காது? அதெல்லாம் பணக்காரங்களுக்குத்தான் சாத்தியம்னு நினைக்க வேண்டாம். வீட்டுக்கு வெளியிலும் வீட்டுக்குள்ளும் நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்தபடி செயற்கை நீரூற்று அமைக்கலாம்'' எனும் மீரா, செயற்கை நீரூற்று தயாரிக்கத் தேவையான அடிப்படைத் தகவல்களோடு, அதையே பிசினஸாகச் செய்ய நினைப்போருக்கு வழிகளையும் காட்டுகிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்னென்ன தேவை... முதலீடு?

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பசை, ஃபேப்ரிக் பெயின்ட், அலங்காரப் பொருள்கள், மோட்டார் போன்ற பொருள்கள் அடிப்படைத் தேவை. மீன்தொட்டிகள் விற்பனை செய்யும் கடைகளில், குறைந்தபட்சம் 300 ரூபாயிலிருந்து மோட்டார் கிடைக்கும். மோட்டார் செலவு உட்பட மற்ற பொருள்களுக்கும் சேர்த்து

700 ரூபாய் முதலீடு போதுமானது. இது சிறிய அளவிலான ஒரு நீரூற்று செய்வதற்கான முதலீடு. அளவு, பயன்படுத்தப்படும் அலங்காரப் பொருள்கள் போன்றவற்றைப் பொறுத்து முதலீடு அதிகமாகும். இதற்குப் பயன்படுத்தப்படும் தண்ணீர் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுவதால், தண்ணீர் குறைவாகத்தான் செலவாகும். அதேபோல குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படும்.

மன அழுத்தத்தைப் போக்கும் செயற்கை நீரூற்று! - மீரா தேவி

எத்தனை மாடல்கள்? ஒரு நாளைக்கு எத்தனை செய்யலாம்?

வீட்டு வரவேற்பறையின் டீப்பாயின் மேல் வைக்கும் சிறிய அளவிலிருந்து தோட்டத்தின் ஒரு பகுதியை அலங்கரிக்கும் பிரமாண்ட அளவு வரை செய்யலாம். கற்பனைத்திறனுக்கேற்ப எத்தனை மாடல்களில் வேண்டுமானாலும் உருவாக்கலாம். அடிப்படையைக் கற்றுக்கொள்வதுதான் முக்கியம். புத்தர் சிலை, சாமி சிலை என ஆர்டருக்கேற்ப சிலைகள் வைத்துச் செய்துகொடுக்கலாம். நட்சத்திர ஹோட்டல்களில் ஆர்டர் பிடித்தால் கூழாங்கற்கள் பதித்து இன்னும் பிரமாண்டமாகச் செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு நீரூற்று செய்ய ஐந்து நாள்கள் தேவைப்படும். படிப்படியாகச் செய்து, ஒவ்வொன்றும் உலர்ந்த பிறகுதான் அடுத்த ஸ்டெப்பை செய்ய முடியும். ஒரே நாளில் நான்கைந்து நீரூற்றுகளுக்கான முதல் ஸ்டெப் வேலைகளை முடித்துவைப்பதன் மூலம் நிறைய எண்ணிக்கையில் செய்யலாம்.

விற்பனை வாய்ப்பு... லாபம்?

நவராத்திரி சீஸன் வரவிருக்கிறது. இப்போதே கொலுவில் வைக்கும் நீரூற்றுகளுக்கான ஆர்டர்களைப் பிடிக்க ஆரம்பிக்கலாம். மேலும், பல வீடுகளிலும் இதை அழகுக்காக வைக்க விரும்புவார்கள். வாஸ்துவின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் ஆர்வத்துடன் வாங்குவார்கள். அலுவலகங்கள், ஆஸ்பத்திரி, துணிக்கடைகள், ஹோட்டல்கள் என எல்லா இடங்களிலும் ஆர்டர் பிடிக்கலாம்.

700 ரூபாய் செலவழித்துச் செய்கிற நீரூற்றை 1,500 ரூபாய் முதல் விற்கலாம்.

பயிற்சி?

இரண்டு முதல் மூன்று நாள்கள் வரை பயிற்சி தேவைப்படும். மோட்டார் தவிர்த்து மற்ற பொருள்களுக்கும் சேர்த்துப் பயிற்சிக் கட்டணம் 2,000 ரூபாய்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism