Published:Updated:

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!
பிரீமியம் ஸ்டோரி
டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

சமைத்த உணவுகளை கணவர் டைனிங் டேபிளுக்கு எடுத்துச் சென்று, தட்டுகள் போட்டுப் பரிமாறிக்கொண்டிருக்கும் நேரத்தில் மகன் ரசத்துக்குத் தக்காளி கரைத்துக்கொடுப்பார்.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

சமைத்த உணவுகளை கணவர் டைனிங் டேபிளுக்கு எடுத்துச் சென்று, தட்டுகள் போட்டுப் பரிமாறிக்கொண்டிருக்கும் நேரத்தில் மகன் ரசத்துக்குத் தக்காளி கரைத்துக்கொடுப்பார்.

Published:Updated:
டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!
பிரீமியம் ஸ்டோரி
டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

அவர், மருத்துவமனையில் பணியாற்றும் பெண். ஞாயிற்றுக் கிழமைகளில்கூட அரை நாள் டியூட்டி இருக்கும். மதியம் அவர் வீட்டுக்கு வரும்போதே கையோடு மீன் வாங்கி வந்துவிடுவார். வீட்டுக்கு வந்தவுடன், காஸ் ஸ்டவ்வின் இரண்டு பர்னர்களையும் பற்ற வைப்பார். ஒரு பர்னரில் சாதத்துக்கான உலை வைப்பார். இன்னொரு பர்னரை சிம்மில் எரியவிட்டு, அதில் கனமான இரும்பு தோசைக்கல்லை வைப்பார்.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

இன்னொருபக்கம், அரிசியை எடுத்து ஊறப்போடுவார். சிறிய கிண்ணத்தில் புளியை ஊறப்போடுவார். அப்படியே சிங்க்கில் வறுவலுக் கான பெரிய மீன் துண்டுகளை மட்டும் வேக வேகமாகச் சுத்தம்செய்து, காலையிலேயே தயாரித்து வைத்துவிட்டுப்போன மசாலாவில் புரட்டி வைப்பார். இதற்குள் தோசைக்கல் சூடாகியிருக்கும். எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டுகளைப் பொரிக்க ஆரம்பிப்பார். மறுபக்கம் உலை கொதிக்க ஆரம்பித்திருக்கும். ஊறவைத்த அரிசியை அதில் போடுவார். மீனும் அரிசியும் வேகும் நேரத்தில் குழம்புக்கான மீன் துண்டுகளைச் சுத்தம் செய்வார். புளிக்கரைசலை ரெடியாக்குவார். மீன் வறுவல் வேலை முடிந்ததும், குழம்புக்கான பாத்திரம் அடுப்பில் ஏறும். நின்ற வாக்கிலேயே வெங்காயம், தக்காளியை நறுக்கி பாத்திரத்தில் போடுவார். வதங்கியதும், புளிக்கரைசலை ஊற்றுவார். கொதித்ததும் மீன் துண்டுகளைப் போடுவார். குழம்பு ரெடியாவதற்குள் சாதம் வெந்திருக்கும்.

சமைத்த உணவுகளை கணவர் டைனிங் டேபிளுக்கு எடுத்துச் சென்று, தட்டுகள் போட்டுப் பரிமாறிக்கொண்டிருக்கும் நேரத்தில் மகன் ரசத்துக்குத் தக்காளி கரைத்துக்கொடுப்பார். ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள ரசப்பொடியை அதில் கலந்து வைத்துவிட்டு டைனிங் டேபிளுக்குச் சென்று ரிலாக்ஸ்டாக உட்காருவார் அந்தப் பெண். கணவர் கிச்சனுக்குச் சென்று ரசத்தைத் தாளித்து எடுத்து வருவார். ஒரு மணி நேரத்துக்குள் மீன் குழம்பு, மீன் வறுவலுடன் சமைத்து திருப்தியாகச் சாப்பிடுவார்கள்.

‘அட, இதை என்ன பெருசா சொல்லிட்டு இருக்கீங்க? இப்படித்தானே ஒரே நேரத்துல நாலு வேலையைச் செஞ்சு நாங்களும் சமைக்கிறோம்...’ என்று சொல்லும் தோழிகளே... நீங்கள் எத்துணை பாராட்டுக்குரியவர்கள் தெரியுமா?! அன்றாடம் என்று நினைத்து நீங்கள் செய்துகொண்டிருக்கும் இந்த வேலைகள், எத்துணை சிறந்த நேர மேலாண்மை தெரியுமா?

அடுப்பில் ஒன்று வெந்துகொண்டிருக்கும்போது இன்னொரு வேலையைச் செய்கிற டைம் மேனேஜ்மென்ட், குடும்பத்தினரை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்திய இயல்பு, மசாலாக்களை முன்கூட்டியே அரைத்துவைத்த திட்டமிடல் ஆகிய மூன்றும்தான் அந்தக் குடும்பத்தின் ஞாயிற்றுக்கிழமைகளும், உங்கள் குடும்பத்தின் தினசரிகளும் சுவையாக இருப்பதற்குக் காரணங்கள். ஆனால், இவை எல்லா பெண்களுக்கும் கைவருவதில்லை. பலர் அதில் திணறுவதையும் தவறுவதையும் பார்க்கிறோம்.

ஜெக ஜனனி, மல்லிகா பத்ரிநாத்
ஜெக ஜனனி, மல்லிகா பத்ரிநாத்

வேலைக்கும் சென்றுகொண்டு, குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, குழந்தைகளையும் பராமரித்துக்கொண்டு 360 டிகிரியில் சுழன்று கொண்டிருக்கிற பெண்களுக்கு, டைம் மேனேஜ்மென்ட்டும் வொர்க் - லைஃப் பேலன்ஸும் அவசியமோ அவசியம். அவற்றுக்கான ஆலோசனை களை இந்த இணைப்புப் புத்தகத்தில் வழங்குகிறார்கள், சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டாளர் ஜெக ஜனனியும், சமையற்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்தும்.

உங்கள் கடிகார முள்கள் இனி பதற்றமில்லாமல் சுழல்வதற்கான படிகளில் ஏறுவோமா?!

நேர மேலாண்மை என்றால் என்ன?

‘‘நேர மேலாண்மை என்பது செல்போனிலோ, சுவர் கடிகாரத்திலோ அடிக்கடி நேரத்தைப் பார்த்துக்கொண்டு வேலைசெய்வது இல்லை. நம்முடைய நேரத்தை நாம் எப்படி மேலாண்மை செய்கிறோம் என்பதே நேர மேலாண்மை’’ என்று அறிமுகம் தரும் மனிதவள மேம்பாட்டாளர் ஜெக ஜனனி, பெண்களை நான்கு வகையாகப் பிரித்து, ஒவ்வொரு வருக்குமான டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகளை வழங்குகிறார் விரிவாக.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

பெண்கள் நான்கு வகை!

பெண்களுக்கான நேர மேலாண்மையை குடும்பத் தலைவிகளுக்கு, வேலைபார்க்கும் பெண்களுக்கு என்று இரண்டாகப் பிரிக்கலாம். இவர்களையும் வீட்டு வேலைகளில் உதவி செய்வதற்கு ஒரு நபரை வேலைக்கு அமர்த்துகிற அளவுக்குப் பொருளாதார வசதியுடன் இருப்பவர்கள், அந்த அளவுக்குப் பொருளாதார வசதி இல்லாதவர்கள்

என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இந்த நான்கு வகையினரும் தங்களுடைய நேரத்தை எப்படி மேலாண்மை செய்வது என்று முதலில் சொல்கிறேன்.

குடும்பத் தலைவிகளுக்கு..!

குடும்பத் தலைவிகள், தாங்கள் தியாக உருவாகி தங்கள் வீடுகளில் பின்பற்றிவரும் சில வழக்கங்களை மாற்றுவது, நேர மேலாண்மைக்கு முக்கியம். அந்தப் பழக்கங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

ஆளுக்கொரு பிரேக்ஃபாஸ்ட்டுக்கு நோ!

பல குடும்பங்களில் கணவர் அலுவலகத்துக்கும், பிள்ளைகள் பள்ளி, கல்லூரிக்கும் கிளம்பி காலில் செருப்பு அணிகிற நேரத்தில், அவசர அவசரமாக டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு ஓடி வருவார், அந்த வீட்டின் குடும்பத் தலைவி. ‘தினமும் லேட்டா சமைக்கிறேம்மா’ என்று பிள்ளைகளிடமும், ‘காலையில கொஞ்சம் சீக்கிரம் எழுந்து சமைச்சா என்ன’ என்று கணவரிடமும் திட்டு வாங்கிக்கொண்டே டிபன் பாக்ஸை குடும்பத்தினரின் கையில் கொடுத்துவிட்டு, சோர்வாக வீட்டுக்குள் நுழைவார்.

இந்தக் குடும்பத் தலைவிகளைச் சற்று நிறுத்தி விசாரித்துப் பார்த்தீர்கள் என்றால், அவர்களுடைய குடும்பத்தினர் சொன்னதுபோல இவர்கள் லேட்டாகச் சமைப்பதுமில்லை, காலையில் தாமதமாக கண்விழிப்பதுமில்லை என்கிற உண்மை தெரியவரும். அப்புறம் என்னதான் பிரச்னை என்கிறீர்களா?

கணவருக்கு இடியாப்பம், மகளுக்கு பூரி, மகனுக்கு சாண்ட்விச் என்று ஆளுக்கொரு பிரேக்ஃபாஸ்ட்டை தயாரித்துக்கொண்டிருந்தால், கையில் கட்டித்தர வேண்டிய மதிய உணவைச் சமைப்பதற்குத் தாமதமாகத்தான் செய்யும். கொசுறாக, குடும்பத்தாரின் கோபத்தையும் எதிர்கொள்ள வேண்டும். ‘நான் வீட்ல சும்மாதானே இருக்கேன்’ என்று நினைத்துக்கொண்டு, காலையில் எக்கச்சக்க வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யாமல், ‘வாரத்துக்கு ஐந்து நாள்கள் சத்தான சமையல் மட்டுமே செய்வேன். அதையும் ஆளாளுக்கு ஒன்றாகச் செய்ய மாட்டேன்’ என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். ஆளுக்கொரு சமையலை வார இறுதியில் மட்டும் செய்யுங்கள். குடும்பத்தினரும் ஆரோக்கியமாக இருப்பார்கள்; நீங்களும் காலை நேர டென்ஷனில்லாமல் இருக்கலாம்.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

மும்முனை தாக்குதலைத் தவிருங்கள்!

பெரும்பான்மைக்கும் அதிகமான குடும்பங்களில் அம்மா கிச்சனிலும் இருக்க வேண்டும், குளித்துக்கொண்டிருக்கிற கணவருக்கு டவலும் எடுத்துத் தர வேண்டும், குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கும் தயார் செய்ய வேண்டும். இந்த நியூ நார்மலுக்கு ஏற்றபடி சொல்ல வேண்டுமென்றால், ஆன்லைன் கிளாஸுக்கும் தயார் செய்ய வேண்டும். ஒரு மனுஷி ஒரே நேரத்தில் மூன்று வேலை களை எப்படிச் செய்ய முடியும்? அப்படியே செய்தாலும், அது சரியாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. சமையல் தீய்ந்துபோகலாம். குளியலறைக்குள் இருந்து, ‘இன்னும் என் டவல் வரலே’ என்று குரல் வரலாம். கூடவே, ‘நேத்திக்கு நான் எழுதுன ஹோம்வொர்க் நோட்டை காணோம். வந்து கொஞ்சம் எடுத்துக்கொடும்மா’ என்று பிள்ளை சத்தம் போடும்.

என்ன செய்யலாம்? ‘காலையில சமைப்பது என் வேலை. குளிக்கப் போகும்போதே டவலையும் கையோடு எடுத்துச் செல்ல வேண்டியது உங்களுடைய பொறுப்பு. நோட்டு புத்தகத்தைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டியது உன் கடமை’ என்பதில் தீர்மானமாக இருங்கள். இந்த வழக்கத்தைக் குடும்பத்தினரிடையே ஏற்படுத்துங்கள்.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

பெருமை அவசியமில்லை!

சில குடும்பத் தலைவிகள், ‘என் வீட்ல எல்லா வேலையும் நான்தான் செய்வேன். நான் ஒருநாள் வீட்ல இல்லைன்னா ஒரு வேலையும் நடக்காது. வீடே ஸ்தம்பிச்சிடும்’ என்று பெருமையாகச் சொல்வார்கள். இந்தப் பெருமை உங்களை எந்நேரமும் வேலை, வேலை என்று விரட்டிக் கொண்டிருப்பதோடு, உங்கள் குடும்பத்தினரையும், ‘வீடு சுத்தமா இல்ல, அம்மா பெருக்கி விடு’, ‘துணி அழுக்கா இருக்கு, அம்மா துவைச்சுக் கொடு’, ‘பசிக்குதும்மா, சாப்பாடு போட்டுக் கொடு’ என்று எல்லாவற்றுக்கும் உங்களையே சார்ந்து இயங்கும்படி செய்துவிடும்.

சிலர், `என் கிச்சன் என் உரிமை. அதில் நுழைய வீட்டில் யாருக்கும் அதிகாரம் இல்லை. அந்த வேலையை நானே பார்த்துக்கொள்கிறேன். வேறு யாரும் மூக்கை நுழைக்கக் கூடாது' என்று கறாராக வேறு சொல்லி விட்டு, பரிதாபமாகச் சிக்கித் தவிப்பார்கள். விளைவு, இந்த இரண்டு வகையினருமே எந்நேரமும் வீட்டுவேலை மட்டுமே செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கென்று நேரம் ஒதுக்கி நடைப்பயிற்சி, யோகா என்று எதுவுமே செய்ய முடியாது.

இது அவர்கள் ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல; அவர்கள் குடும்பத்தினரின் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. ‘ஸ்தம்பிச்சிடும்’ என்கிற பெருமையும் வேண்டாம்; `என் கிச்சன் என் உரிமை’ என்கிற அதிகாரமும் வேண்டாம். இரண்டையும் சற்றுத் தள்ளி வைத்துவிட்டு, சின்னச் சின்ன வேலைகளிலாவது குடும்பத்தினரை ஈடுபடுத்த வேண்டும். அதன் மூலம் கிடைக்கிற நேரத்தை அவர்களுக்கான ‘மீ டைம்’ ஆக செலவழிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த நாள் வேலை செய்வதற்கான எனர்ஜி கிடைக்கும்.

ஸ்பெஷலாக சமைக்கிறீர்களா?

சில வீடுகளில் ஜிம்முக்குச் செல்கிற மகனுக்கு ஒரு சமையல், டயட்டில் இருக்கிற கணவருக்கு ஒரு சமையல், நீரிழிவும் ரத்த அழுத்தமும் இருக்கிற வீட்டுப் பெரியவர்களுக்கு ஒரு சமையல் என்று அல்லாடிக்கொண்டிருப்பார்கள் பெண்கள்.

ஜிம்முக்குச் செல்கிற மகனுக்கு முட்டை அல்லது சிக்கனை வேக வைத்துத் தருவீர்கள் அல்லவா? கொஞ்சம் சிக்கன் துண்டுகளுடன் சிக்கன் வெந்த தண்ணீரில் வெங்காயம், தக்காளி நறுக்கிப்போட்டு கிரேவிபோல செய்து அன்றைய சமையலுக்குக் குழம்பாக்கிவிடலாம். இந்தக் குழம்பில் உப்பு போடாமல் எடுத்து வைத்துவிட்டால், ரத்த அழுத்தம் இருக்கிற வீட்டுப் பெரியவர்களுக்கு மருத்துவர் சொன்னபடி கொடுத்துவிடலாம்.

டயட் இருக்கிற கணவருக்கு கொடுக்கிற காய்கறி சாலட்டில் தேவையான அளவை எண்ணெயில் வதக்கினால் வீட்டுக்குத் தேவையான பொரியல் ரெடி. இப்படி யோசித்து ஒரு வாரத்துக்கான மெனுவை தயாரித்துவிட்டீர்களென்றால், எத்தனை வகை சமையல் என்றாலும் சமாளித்துவிடலாம்.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

தயங்காதீர்கள்!

குடும்பத் தலைவிகளிடம் தயக்கமொன்று இருக்கிறது. அதாவது, ‘நாம ஹோம் மேக்கர். நம்ம வேலைகளுக்கு வீட்ல இருக்கிறவங்கள செய்யச் சொல்லிக் கேட்கலாமா... இல்ல வேண்டாம்’ என்பதுதான் அது. இதன் காரணமாகவே பல குடும்பத் தலைவிகள் உடம்புக்கு முடியவில்லை என்றாலும் ‘வீட்டு வேலைகள் எல்லாம் என் பொறுப்பு’ என்கிற மனநிலையுடன் ஓய்வில்லாமல் வேலை செய்துகொண்டே இருப்பார்கள். இப்படியிருக்க வேண்டிய அவசியமே இல்லை.

குடும்பமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதால் தான் மனிதர்கள் நாம் ஒன்றாக இருக்கிறோம். அந்தக் குடும்பத்துக்குள் ஒருவர் மட்டுமே 24x7 வேலை செய்ய வேண்டும், மற்றவர்கள் குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டும் வேலை செய்துவிட்டு, மற்ற நேரங்களில் பிடித்ததைச் செய்துகொண்டிருக்கலாம் என்பதில்லை.

அதனால், வீட்டு வேலைகளில் குடும்பத்தினரையும் ஈடுபடுத்தத் தயங்க வேண்டாம். தயங்கினால் ஓய்வு, நேர மேலாண்மை, மகிழ்ச்சி ஆகிய மூன்றுமே உங்களுக்குக் கிடைக்காது.

வேலைபார்க்கும் பெண்களுக்கு..!

பணிபுரியும் பெண்கள், தங்களை அதிகம் வருத்திக்கொள்வதுதான் பெரும்பாலும் நடைமுறையாக இருக்கிறது. இவர்கள் நிச்சயமாக வீட்டுவேலைகளில் குடும்பத்தினரின் பங்களிப்பை நூறு சதவிகிதம் பெற்றுக்கொண்டு வேலைகளைக் கையாள வேண்டும். அதாவது, அனைத்து வேலைகளிலும் கணவன் உள்ளிட்டோருக்கு சமபங்கை பிரித்துக் கொடுக்க வேண்டும். அதைச் செயல்படுத்தும் வழிமுறை களைப் பார்ப்போம்.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

அது உதவியல்ல..!

பணிபுரியும் பெண்களில் சிலர் வீட்டு வேலைகளுக்கு ஆள் வைத்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பார்கள். எனவே, காலையில் எழுந்து காஸ் ஸ்டவ் முன் கண் விழிப்பதில் ஆரம்பித்து இரவு படுக்கப்போகும் வரைக்கும் சேர்ந்தாற்போல கால்மணி நேரம்கூட ஓய்வெடுக்க முடியாமல் வேலை செய்வார்கள். இவர்களுக்கு, வீட்டு வேலைகளைப் பொறுத்தவரைக்கும் வீட்டில் இருப்பவர்கள்தாம் இவர்களுடைய வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் (அதை, ‘வீட்டிலிருப்பவர்கள் உதவி செய்கிறார்கள்’ என்று சொல்லாமல், பங்கெடுக்கிறார்கள் என்றே சொல்வோம். ஏனெனில், வீட்டு வேலைகளில் அனைவரின் பங்கும் உள்ளது. அதை அவரவர்கள் பகிர்ந்துகொள்வது, அவ்வீட்டுப் பெண்களுக்கு உதவி செய்வது ஆகாது). அரிதாக சில வீடுகளில் மட்டுமே, இந்தப் ‘பங்கெடுப்பு’ கேட்காமலே நடக்கும். அவரவர் வேலை அவரவர் பொறுப்புதான் என்பதில் நீங்கள்தான் உறுதியாக இருக்க வேண்டும்.

காலையில் நீங்கள் சமைத்து வைத்தால், அவரவர் டிபன் பாக்ஸில் லஞ்ச்சை பேக் செய்துகொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பு. காலை டிபன் தோசை என்றால், வளர்ந்த பிள்ளைகள் அவர்களுக்கான தோசையை அவர்களே வார்த்துக்கொள்ளட்டும். கணவருக்கும் இது பொருந்தும். முக்கியமாக, ஈர டவல்களை படுக்கை மீது விட்டெறியாமல் கொடியில் காயப்போடுவதும் அவர்களுடைய வேலைதான் என்று பழக்குங்கள். இப்படிச்செய்தால் மட்டுமே, காலை வேளைகளில் நீங்கள் நிம்மதியாகக் குளித்து, சாப்பிட்டு வேலைக்குக் கிளம்புகிற அளவுக்கு நேரம் கிடைக்கும்.

எவ்வளவு தூரம்?

வீட்டு வேலைகளுக்கு ஆள் வைத்துக்கொள்ள முடியாதவர்கள் என்றாலும் சரி, முடிந்தவர்கள் என்றாலும் சரி, வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் தூரம் அதிகமில்லாமல் இருப்பது நல்லது. டிராஃபிக்குடன் சேர்த்து அரைமணி நேரத்துக்குள் அலுவலகம் செல்லும்படி இருந்தால், காலை நேரத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என்று உங்கள் ஆரோக்கியத்துக்கு நேரம் செலவிட முடியும். எனவே, அலுவலகம் - வீடு தொலைவை குறைப்பதற்கான சாத்தியங்களை பரிசீலிக்கலாம்.

மூன்று விஷயங்களுக்கு... நோ!

இது வீட்டு வேலைகளுக்கு ஆட்களை வைத்துக்கொள்ள முடிந்தவர் களுக்கான பரிந்துரை. நீங்கள் குடும்பத் தலைவி என்றாலும் சரி, வேலைபார்க்கும் பெண் என்றாலும் சரி, உங்கள் வீட்டில் வேலை செய்பவர்களின் வேலைகளில், ‘நீ துலக்கி வெச்ச பாத்திரங்களை நான் மறுபடியும் அலச வேண்டியதா இருக்கு’ என்பதுபோல எப்போதும் குற்றம், குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். ‘தண்ணி செலவானாலும் பரவாயில்ல, சோப்பு நல்லா போற மாதிரி துலக்கு’ என்பதுபோல சொல்லுங்கள். அவர்களுடன் அவசியமில்லாமல் ஒரு டென்ஷனை உருவாக்கிக்கொண்டு, உங்கள் நேரம், அவர்களின் நேரம் என இரண்டையும் பதற்றமாக்காதீர்கள். அவர்கள் வீட்டு வேலைகள் செய்து கொண்டிருக்கும்போது, பின்னாடியே நின்றுகொண்டு, ‘அப்படி செய்யுங்க’, ‘இப்படி செய்யுங்க’ என்று சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். அது வேலையை சீக்கிரம் முடிக்க உதவாது.

`நான் சம்பளம் கொடுக்கிறேன்’ என்பதுபோல உங்கள் வீட்டில் வேலை செய்பவர்களை அளவுக்கு அதிகமாக வேலை வாங்காதீர்கள். அவர்களை மரியாதையாக, மனிதாபிமானத்துடன் நடத்துங்கள். அவர்களைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான், உங்களுடைய மற்ற வேலைகளைச் செய்வதற்கு நேரம் கிடைக்கும்.

வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யும் பெண்களுக்கு..!

இந்த லாக்டௌனிலும், லாக்டௌனுக்குப் பிறகான காலத்திலும் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்பது பெண்களுக்குப் புதிதாகச் சேர்ந்திருக்கும் சவால். அதை எப்படி சாதுரியமாகக் கையாளலாம் என்று பார்க்கலாம்.

ஒரு நாளை நான்காகப் பிரியுங்கள்!

ஒரு வருடத்துக்கு முன்பு அலுவலக வேலை முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டால், அலுவலகத்திலிருந்து புதிதாக ஒரு வேலையைச் செய்யச் சொல்லி உங்களுக்கு போன் வராது. ஆனால், கொரோனா கொண்டு வந்திருக்கும் நியூ நார்மலில் வீடே அலுவலகமாகிவிட்டதால், நேரம், காலம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது வேலை. அதற்கு ஒரு வரையறையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

காலையில் லேப்டாப்பை லாகின் செய்வதற்கு முன் குடும்பத்தினருடன் சேர்ந்து வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிடுங்கள். மாலை 6 மணிக்குள் அலுவலக வேலைகள் அனைத்தையும் முடித்துவிடுங்கள். இதற்கு மேலும் உங்களுக்கு அலுவலக வேலையிருக்கிறது என்றால், அதை இரவுக்குள் முடிக்க வேண்டுமா அல்லது மறுநாள் வரைக்கும் நேரமிருக்கிறதா என்பதை நீங்களே முடிவெடுங்கள். வீட்டுக்கான நேரம், அலுவலக நேரம், உங்களுக்கான நேரம், தூக்கத்துக்கான நேரம் என்று ஒரு நாளை நான்காகப் பிரித்துக்கொண்டு செயல்பட்டீர்கள் என்றால், உங்களுடைய நேர மேலாண்மை சிறப்பாக இருக்கும்.

மைக்ரோ மேனேஜ்மென்ட் வேண்டாம்!

வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கும்போது, உங்கள் பிள்ளைகளும் ஆன்லைன் வகுப்பில் இருப்பார்கள். அவர்கள் ஆன்லைன் வகுப்பை சரியாக கவனிக்கிறார்களா என்று அவ்வப்போது கண்காணிப்பது ஓகேதான். அதற்காக, அவர்களுக்கு ஆன்லைன் கிளாஸ் முடிகிற வரைக்கும் அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை மைக்ரோ மேனேஜ்மென்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய ஆன்லைன் வகுப்புகள் முடிந்த பிறகு, அன்றைக்கு என்னென்ன பாடங்கள் நடத்தினார்கள் என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அப்படியில்லாமல் மைக்ரோ மேனேஜ்மென்ட் செய்துகொண்டிருந்தீர்கள் என்றால், உங்களுடைய அலுவலக வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க முடியாது.

ஹவுஸ் கீப்பிங்கில் நேரம் கரையாமல் இருக்க!

பெண்களின் விடுமுறை நாள்களை விழுங்கும் பெரிய வேலை, ஹவுஸ் கீப்பிங். அதை எப்படி எளிமையாகக் கையாளலாம் என்று பார்ப்போம்.

வார்ட்ரோப் க்ளீனிங்!

ஒரு வாரம், அலுவலகத்துக்கு அணிகிற உடைகள் இருக்கிற ஷெல்ஃபை சுத்தம் செய்யுங்கள். அடுத்த வாரம், வீட்டில் அணிகிற உடைகள் இருக்கிற ஷெல்ஃபை சுத்தம் செய்யலாம். மூன்றாவது வாரம், குழந்தைகளின் ஷெல்ஃபை சுத்தம் செய்யுங்கள். வளர்ந்த பிள்ளைகள் என்றால், அவர்களே செய்துகொள்ளட்டும். நான்காவது வாரம்... நோ ஷெல்ஃப் சுத்தம். கணவருடைய ஷெல்ஃபை அவரே சுத்தம் செய்துகொள்ளட்டும்!

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

வீடு சுத்தம்!

நீங்கள் மட்டும் தனியாகத்தான் உங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டுமென்றால், ஒரே நாளில் மொத்த வீட்டையும் சுத்தம் செய்யாதீர்கள். குடும்பத் தலைவி என்றால், நேரம் கிடைக்கும்போது ஒவ்வோர் அறையாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுத்தம் செய்யலாம். வேலைபார்க்கும் பெண் என்றால், சனியும் ஞாயிறும் சேர்த்து விடுமுறை கிடைக்கிற இரண்டாவது மற்றும் நான்காவது வார இறுதிகளில், குடும்பத்தினருடன் ஆளுக்கு ஒரு வேலையாகப் பிரித்துக்கொண்டு செய்யலாம். உங்களால் செலவழிக்க முடியும் என்றால், வேலைக்கு ஓர் ஆள் வைத்தும் வீட்டைச் சுத்தம் செய்யலாம்.

அயர்னிங் டிப்!

உங்களுடைய உடைகள் என்றாலும் சரி, குடும்பத்தினரின் உடைகள் என்றாலும் சரி, நேரமும் உங்கள் உடம்பும் ஒத்துழைத்தால் முந்தைய நாள் இரவே அயர்ன் செய்து வைத்துவிடுங்கள். முடியவில்லையென்றால், அயர்னிங் வேலையைக் கணவரிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவரும் தினமும் லேட் நைட் வருவார் என்றால், தெருமுனையில் இருக்கிற அயர்ன்காரரிடம் கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள். அதற்கு செலவழிக்கிற தொகை, அயர்ன் பாக்ஸில் நீங்கள் கழிக்கும் நேரத்துக்கான நியாயமான விலையா என்று பாருங்கள்.

அலுவலகத்தில் நேர மேலாண்மை!

பணி செய்யும் இடத்தில், டைம் மேனெஜ்மென்ட்டில் நாம் தவிர்க்க வேண்டிய பேட் ப்ராக்டீஸ்கள், பின்பற்றிய வேண்டிய குட் ப்ராக்டீஸ்கள் என்னவென்று பார்ப்போமா...

டெட்லைன் டென்ஷன் வேண்டாமே..!

தேர்வுக்குக் கடைசி நேரத்தில் படிப்பதுபோல டெட்லைன் நெருங்கிற நேரத்தில் மட்டுமே வேலைகள் செய்வதைத் தவிர்க்கலாம். ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நியாயமான நேரத்தைக் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த நேரத்தைக் கொடுக்க வேண்டுமென்றால், அந்த வேலையை டெட்லைன் வரைக்கும் பெண்டிங்கில் வைத்துக்கொண்டிருக்கக் கூடாது. இதனால், ஒரே நேரத்தில் டெட்லைனில் இருக்கிற வேலையைச் செய்வதோடு, அன்றைக்குச் செய்ய வேண்டிய வேலையையும் முடிக்க வேண்டி வரும். இதனால் ஏற்படுகிற இரட்டைச் சுமையோடு, அன்றைய தினம் நாள் முழுவதும் படபடப்பாகவே இருக்க வேண்டி வரும்.

பயனளிக்கும் வேலைகளைச் செய்யுங்கள்!

அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மற்றும் செய்ய வேண்டிய வேலை களைத் தாண்டி, கூடுதல் வேலைகள் செய்து `பெஸ்ட் எம்பிளாயி' என்று பெயரெடுப்பது நல்ல விஷயம்தான். ஆனால், அவை உங்களுக்கும் உங்கள் அலுவலகத்துக்கும் கட்டாயம் பலனளிப்பவையாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, ‘மற்றவர்களைவிட நான் பெஸ்ட்டாக இருக்க வேண்டும்’ என்பதற்காகக் கூடுதல் வேலைகள் செய்வதைத் தவிர்க்கலாம். இந்த நேரத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மற்ற வேலைகளைச் செய்யலாம்.

காபி, டீ பிரேக்ஸ்... அளவுடன்!

அலுவலக நேரத்தில் அடிக்கடி காபி குடிக்க வெளியே செல்கிற பழக்கம் சிலருக்கு இருக்கும். இவர்கள், தங்களுக்கு ‘கம்பெனி’ வேண்டுமென்பதற்காகப் பக்கத்திலிருக்கிற இன்னும் இரண்டு பேரின் வேலையையும் கெடுத்து வெளியே அழைத்துச் செல்வார்கள். சத்தமே இல்லாமல் உங்கள் நேரத்தைச் சாப்பிடுகிற விஷயம் இது. உங்களுக்கு இந்தப் பழக்கமிருக்கிறது என்றால், உங்கள் ஆரோக்கியம், நேர மேலாண்மை இரண்டுக்கும் இது நல்லதில்லை. ஒருவேளை உங்கள் அலுவலக நண்பருக்கு இந்தப் பழக்கம் இருந்து உங்களையும் தன்னுடன் அடிக்கடி வெளியே அழைத்துச் செல்கிறார் என்றால், உங்கள் அலுவலக நேரம் வீணாகிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இதனால், 6 மணிக்கு மேல், அதாவது உங்கள் பர்சனல் நேரத்தில் வேலை செய்ய வேண்டி வரும். இது மிகவும் புவர் டைம் மேனேஜ்மென்ட்.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

கைக்குழந்தை வைத்திருக்கும் அம்மாக்கள்... டைம் மேனேஜ்மென்ட் டிப்ஸ்!

குழந்தை பிறந்த புதிதில் அம்மாக்களுக்கு இரவில் தூக்கம் குறையும் என்பதால், பகலில் குழந்தைகள் தூங்கும்போது அவர்களும் தூங்கிக் கொள்ளலாம். அம்மா வீடு மட்டுமல்ல, புகுந்த வீட்டிலும் இதைக் குறையாகச் சொல்ல மாட்டார்கள். இந்த நேரத்தில் உங்களுக்குத் தேவைப்படும் முக்கியமான டைம் மேனேஜ்மென்ட் என்பது, இந்த ஸ்லீப் டைம் மேனேஜ்மென்ட்தான்.

கைக்குழந்தையை வைத்துக்கொண்டு, திருமணம், திருவிழா என்று கூட்டம் கூடும் இடங்களில் அட்டெண்டன்ஸ் போட முற்படாதீர்கள். அதுவும் இந்தக் கொரோனா காலத்தில் அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. பயணம், பால் பாட்டில் பேக்கிங், டயப்பர் சேஞ்சிங் என்று பரபரப்புக்கு உங்களை உள்ளாக்கிக்கொள்ளாமல் முடிந்தவரை இந்த மாதங்களில் வீட்டிலேயே இருப்பது நல்லது. ‘சீக்கிரம் கிளம்பணும்’, போயிட்டு திரும்ப நைட் ஆகிடுமே’ என்றெல்லாம் நேரம் குறித்த பதற்றத்தை உங்களுக்குத் தராமல் இருக்கும்.

குழந்தை பெற்ற சில மாதங்களில் வேலைக்குச் செல்ல வேண்டு மென்றால், பிள்ளை வளர்கிற வரைக்கும் வீட்டை அலுவலகத்துக்கு மிக அருகில் மாற்றிக்கொள்ளலாம். குழந்தையுடனும் நிறைய நேரம் செலவழிக்க முடியும். வேலையையும் சரியாகச் செய்ய முடியும்.

வொர்க் - லைஃப் பேலன்ஸ்!

நேர நிர்வாகம் பற்றிப் பார்த்தோம். பணிபுரியும் பெண்கள் தன் வேலையிலும் வீட்டிலும் எவ்வாறு அதை அப்ளை செய்து?! இதோ ஆலோசனைகள்...

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

வொர்க் - லைஃப் பேலன்ஸ் என்றால் என்ன?

சொந்த வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை இரண்டுக்கும் தேவையான நேரத்தைக் கொடுத்து வெற்றிகரமாக இயங்குவதே வொர்க் - லைஃப் பேலன்ஸ். உங்கள் வேலையையும் குடும்பத்தையும் பேலன்ஸ் செய்வது உண்மையில் மிகவும் சவாலான விஷயம். ஆனால், அதை உங்களுக்குச் செய்யத் தெரிந்தால் மட்டுமே குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில் நீங்கள் சக்சஸ்ஃபுல்லாக இயங்க முடியும்.

வொர்க் - லைஃப் பேலன்ஸ் ஏன் அவசியம்?

இது தெரிந்தால் மட்டுமே உங்களால் அலுவலகத்திலும் வீட்டிலும் மனஅழுத்தம் இல்லாமல் உங்கள் வேலைகளைச் செய்ய முடியும். மனஅழுத்தம் இல்லையென்றால் நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். இது வேலைபார்க்கும் கடைநிலை ஊழியர்கள்வரை வேலைவாங்கும் உயரதிகாரிகள்வரை அவசியமானது.

ஒரு நாளை இரண்டாகப் பிரியுங்கள்!

ஒரு நாளை சொந்த வாழ்க்கைக்கு, அலுவலகத்துக்கு என்று இரண்டாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒரு நாள் அலுவலகத்துக்குக் கூடுதலாக நேரம் செலவிடுகிறீர்கள் என்றால், இந்த நேரத்தை உங்கள் இன்னொரு நாளின் பர்சனல் நேரத்தில் ஈடுகட்டுங்கள். இதேபோல் உங்கள் அலுவலக நேரத்தில் தவிர்க்க முடியாத சொந்த வேலையைச் செய்ய வேண்டி வந்தால், அந்த நேரத்தை உங்கள் சொந்த வாழ்க்கையின் நேரத்தைச் செலவழிப்பதன் மூலம் ஈடுகட்டலாம். இவற்றை, உங்கள் வேலையின் தன்மை, சூழ்நிலையைப் பொறுத்து நீங்களே தீர்மானியுங்கள்.

அதனதன் நேரத்தில்..!

பிள்ளைகளிடம் `படிக்கிற நேரத்தில் படி, விளையாடுகிற நேரத்தில் விளையாடு’ என்று சொல்வோம் இல்லையா? இதே ரூல்தான் நமக்கும் பொருந்தும். வேலை செய்ய வேண்டிய நேரத்தில் வேலை செய்யுங்கள். குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டிய நேரத்தில் அதைச் செய்யுங்கள். வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கிற பெண்கள் முக்கியமாக ஃபாலோ செய்ய வேண்டிய ரூல் இதுதான்.

வொர்க் - லைஃப் பேலன்ஸுக்கு இது உதவும்!

கஷ்டப்பட்டுச் செய்வதைவிட இஷ்டப்பட்டு வேலை செய்கிற இயல்பு வொர்க் - லைஃப் பேலன்ஸுக்கு மிக மிக உதவும். அதனால், உங்களுக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது செய்கிற வேலையில் உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். இதேபோல், குடும்பத்தினருடன் சேர்ந்து ஓர் அன்பான சூழலை வீட்டுக்குள் ஏற்படுத்தி வைக்கலாம். பிடித்த வேலை, அன்பான வீடு இரண்டும் இருந்தால், வொர்க் - லைஃப் பேலன்ஸும் கூடவே நிகழ்ந்துவிடும்.

நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டியது என்ன?

உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை கொடுங்கள். அப்போதுதான் வேலை, வீடு இரண்டிலும் நீங்கள் சக்சஸ்ஃபுல்லாக இயங்க முடியும். வாக்கிங்/யோகா/வொர்க் அவுட் டைம், உங்களுக்கு என ஃப்ரூட் ஜூஸ்/கிரீன் டீ போட்டுக்கொள்ளும் நேரம் இவையெல்லாம் ‘எக்ஸ்ட்ரா’ இல்லை, உங்களுக்கான அத்தியாவசியம் என்பதை உணருங்கள்.

மீ டைம்... முக்கியம்!

வேலைக்கும் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குவதைப்போல, உங்களுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் இசை கேட்கலாம். புத்தகம் வாசிக்கலாம். பயணம் மேற்கொள்ளலாம். முகநூலில் கவிதை எழுதலாம். யோகா, மெடிட்டேஷன் போல ஆரோக்கியத்துக்கான செயல்பாடுகளிலும் ஈடுபடலாம். உங்களுக்கான ரீ-சார்ஜிங் நேரமான

‘மீ டைம்’ இருந்தால் மட்டுமே, உங்களுடைய வொர்க் - லைஃப் பேலன்ஸ் இனிமையான அனுபவமாக இருக்கும்.

பிசினஸ் பெண்களுக்கான வொர்க் - லைஃப் பேலன்ஸ்!

பிசினஸ் செய்கிற பெண்களும் சரி, உயரதிகாரிகளாக இருக்கிற பெண்களும் சரி, வீட்டு வேலைகளில் உதவி செய்வதற்கு ஒரு நபரை வேலைக்கு அமர்த்திக்கொண்டால் மட்டுமே, வொர்க் - லைஃப் பேலன்ஸ் ஸ்மூத்தாக இருக்கும். `அதனை அவன்கண் விடல்’ என்கிற திருக்குறளுக்கு ஏற்ப, வேலையிடத்தில் யாரிடம் எந்த வேலையைக் கொடுத்தால் சரியாகச் செய்து முடிப்பார்களோ அவர்களிடத்தில் அதைக் கொடுத்து வேலை வாங்குகிற தெளிவு இருந்தால் போதும்.

குறைகளிலிருந்து கற்போம்!

100% பர்ஃபெக்ட் என்று உலகில் சிலரையே சொல்லலாம். பெரும்பான்மையானவர்கள் இங்கே இம்பெர்ஃபெக்ட்தான். இது உங்கள் நேர மேலாண்மைக்கும் பொருந்தும், வொர்க் - லைஃப் பேலன்ஸுக்கும் பொருந்தும். அதனால், மேலே கொடுத்திருக்கிற அத்தனை ஆலோசனை களையும் பின்பற்றி நேர மேலாண்மை செய்தாலும், வொர்க் - லைஃபை பேலன்ஸ் செய்ய முயன்றாலும், எங்காவது சிறு புள்ளியில் தவறவிட வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்ந்தால், ‘இதுவும் சகஜம்’ என்று எடுத்துக் கொண்டு கடந்துவிடுங்கள். இந்த இயல்பு உங்களை டென்ஷன் ஃப்ரீயாக வைக்கும். அதனால், அடுத்த முறை இன்னும் சரியாக நேர மேலாண்மை செய்வீர்கள். உங்கள் வொர்க் - லைஃப் பேலன்ஸும் நிம்மதியாக இருக்கும்!

சமையற்கட்டில் நேர மேலாண்மை!

``பெரும்பாலான பெண்களின் பெரும்பான்மையான நேரத்தை சாப்பிடுவது கிச்சன்தான். சமையலறையில் சின்னச் சின்ன ஏற்பாடுகளின் மூலம் எப்படி நேரத்தை மிச்சப்படுத்தலாம்'' என்று, அசத்தலான டிப்ஸ் சொல்கிறார் சமையற்கலைஞர் நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.

யோசித்தாவது வைத்துக்கொள்ளுங்கள்!

மறுநாள் சமையலுக்கு இரவே காய்கறிகளை வெட்டிவைத்துக் கொள்ளலாமா அல்லது காலையில் வெட்டிக்கொள்ளலாமா என்பது உங்களுடைய விருப்பம். ஆனால், மறுநாள் என்ன சமைக்க வேண்டும் என்பதை முந்தைய நாள் இரவே குறைந்தபட்சம் யோசித்தாவது வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், ஃபிரிட்ஜை திறந்து வைத்துக்கொண்டு என்ன சமைக்கலாம் என்று யோசித்து நேரத்தை வீணாக்காமல் இருக்கலாம்.

எடுத்து வைக்கலாம்!

மறுநாள் காலையில் சமைக்க வேண்டியதை அதனதன் பாத்திரங்களில் இரவே எடுத்து வைக்கலாம். உதாரணத்துக்கு சாதம் வைக்கிற பாத்திரத்தில் அரிசியையும் குக்கரில் பருப்பையும் முந்தைய இரவே எடுத்து வைத்து விட்டால், காலையில் எழுந்தவுடன் கழுவி அடுப்பில் ஏற்றுவதற்கு வசதியாக இருக்கும்.

தோல் உரித்து வைக்கலாம்!

மறுநாள் வெங்காயக்குழம்பு அல்லது பூண்டுக்குழம்பு வைக்கப் போகிறீர்களென்றால், காலை வேளையில் இவற்றை உரிப்பது நேர விரயம். குறிப்பாக, சின்ன வெங்காயத்தையும் சிறு பல் பூண்டையும் உரிப்பதற்கு நீண்ட நேரம் ஆகும். அதனால், முந்தைய நாள் இரவே இவற்றைத் தோலுரித்து வைக்கலாம். அதே நேரம் வெங்காயத்தின் நுனிகளைக் கிள்ளாமல் தோலை மட்டும் உரித்து வைக்க வேண்டும்.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

கேரட், பீட்ரூட்டில் நேரத்தை மிச்சப்படுத்தும் வழி!

கேரட்டும் பீட்ரூட்டும் சமைக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட, அதை நாம் நறுக்க எடுத்துக்கொள்கிற நேரம்தான் அதிகம். அதனால், இவற்றைத் தோல் சீவி, அரிசி அல்லது பருப்பைக் குக்கரில் வைக்கும்போது மேலாக இதையும் வைத்து வேக வைத்துவிடுங்கள். வெந்த கேரட் அல்லது பீட்ரூட்டை கட்டரில் சுலபமாக நறுக்கி, தாளித்து, தேங்காய்த்துருவல் தூவினால் பொரியல் ரெடி.

இது மூன்று மாதங்கள் தாங்கும்!

அரைத்த குழம்பு செய்வதற்கு நிறைய நேரமாகும். அதைக் குறைக்க, வறுத்து அரைக்கிற சாமான்களைக் கெட்டியாக அரைத்து உருண்டை பிடித்து, ஜிப்லாக் கவரில் போட்டு ஃப்ரீசரில் வைத்துவிட்டால், மூன்று மாதங்கள் வரைக்கும் கெடாது. தேவைப்படும்போது கைபடாமல் கரண்டியால் தேவையானதை எடுத்துக்கொண்டு, மீதத்தை மறுபடியும் ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும்.

பத்து நாள்கள் தாங்கும் புளிக்கரைசல்!

ஒரு வாரம் அல்லது பத்து நாள்களுக்குத் தேவைப்படுகிற புளியை எடுத்து அதனுடன் தேவையான தண்ணீர் ஊற்றி, குக்கரில் ஒரு விசில் விடுங்கள். நீர் ஆறியதும் புளியைக் கரைத்து வடிகட்டி காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால், தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். புளிக்கரைசல் என்பதால் பீங்கான் அல்லது மண்பாண்டத்தில் ஊற்றிவைப்பது நல்லது.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

இஞ்சி பூண்டு பேஸ்ட்!

கொரோனா தொற்று வந்ததிலிருந்து சமையலில் இஞ்சி பூண்டு சேர்ப்பதைப் பலரும் விரும்புகிறார்கள். வாரத்துக்கு ஒருமுறை 70:30 அல்லது 60:40 என்ற விகிதத்தில் இஞ்சி - பூண்டு பேஸ்ட்டை அரைத்து சிறிதளவு வினிகர் விட்டு, ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால், தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். இஞ்சியின் தோலுரித்து, பூண்டின் தோலுரித்து என்று தினமும் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

அவனும் கைகொடுக்கும்!

இரண்டு பர்னர் கொண்ட கேஸ் ஸ்டவ்தான் இருக்கிறது என்றால், மைக்ரோவேவ் அவனையும் சமைக்கிற நேரத்தை மிச்சப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம். காய்கறிகளை நறுக்கி தண்ணீர் தெளித்து மூடி வைத்துவிட்டால், வெந்துவிடும். ரெடியாக இருக்கிற தாளிப்பை இதனுடன் சேர்த்தால் சில நிமிடங்களில் பொரியல் ரெடியாகிவிடும்.

எந்நேரத்திலும் கைகொடுக்கும் பவுடர்!

பத்து நாளுக்கு ஒருமுறை தேவையான அளவு பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், உப்பு மூன்றையும் தண்ணீர்விடாமல் பவுடராக அரைத்து வைத்துவிட்டால், சட்னி தேவைப்படும்போது இதனுடன் தேங்காய்த் துருவலும் நீரும் சேர்த்து அரைத்து, ரெடியாக உள்ள

தாளிப்பைச் சேர்த்தால் போதும். கூடுதல் சுவை வேண்டுமென்றால், தேங்காய்த் துருவலுடன் சிறிதளவு வேர்க்கடலை சேர்த்துக்கொள்ளலாம். இந்த சட்னி செய்வதற்கு நிஜமாகவே இரண்டு நிமிடங்கள்தான் ஆகும்.

இன்ஸ்டன்ட் சட்னி!

சில வீடுகளில் தேங்காய்ச்சட்னி மட்டும் வைத்தால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். காரமாக இன்னொரு சட்னியும் கேட்பார்கள். இதற்கு, ஊறவைத்த காய்ந்த மிளகாய்களுடன் தேவையான அளவு உப்பு, புளி, வெங்காயம் சேர்த்து அரைத்து, தாளித்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால், ஒரு வாரம் வரைக்கும் கெடாது. ஆனால், நிறைய எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பொடிகளும் இருக்கட்டும்!

வீட்டில் எப்போதும் பருப்புப்பொடியும் இட்லிப்பொடியும் வைத்திருங்கள். அவசர சாம்பார் செய்ய, இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள உதவுவதோடு, வெந்த காய்கறிகளின் மீது தூவிக் கிளறினால் சுவையான பொரியலும் தயாராகிவிடும்.

ஒருமுறை அரைத்து, இரண்டிரண்டாகப் பிரித்து..!

வாரம் ஒருமுறை இட்லி, தோசைக்கு மாவு அரைத்து, இரண்டிரண்டு நாள்களுக்குத் தேவையான அளவுக்கு மாவைப் பிரித்து, தனித்தனியான கன்டெய்னர்களில் ஊற்றி வைத்துவிட்டால், வாரம் முழுக்க இட்லி, தோசை சாப்பிடலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் அடை - அவியல், பூரி - கிழங்குபோல குடும்பத்துக்குப் பிடித்த டிபனை செய்து சாப்பிடலாம்.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

ஈஸியாக செய்யலாம் ரவா தோசை!

ஒரு கப் அரிசி மாவுடன் இரண்டு டீஸ்பூன் மைதா, ஒரு டீஸ்பூன் ரவை, தேவையான அளவு சீரகம், உப்பு அனைத்தையும் சேர்த்து மிக்ஸாக கலந்து வைத்துக்கொண்டால், தேவைப்படுகிற நேரத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்து ரவா தோசை செய்யலாம்.

வீடு, வேலை, குடும்பம், குழந்தைகள், கிச்சன்... இனி டென்ஷனை தூக்கிப்போடுவோம், நிதானமும் நிம்மதியும் அடைவோம்!

*****

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

உங்கள் நேரத்தை இப்படிச் செலவழிக்காதீர்கள்!

`நான் மசாலாவை அரைச்சு குழம்பு வெச்சாதான் என் வீட்ல எல்லாருக்கும் பிடிக்கும்’, ‘உதிரிப்பூ வாங்கி நானே என் கையால கட்டினாதான் திருப்தியாக இருக்கும்’ என்பதுபோல நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்கிற வேலைகளில் தினமும் சிக்கிக்கொள்ளாதீர்கள். இன்றைய கலப்பட உலகில் இது மிகமிகச் சரியான முடிவே. முடிந்தவரை அனைத்தையும் வீட்டிலேயே தயாரிப்பதுதான் ஆரோக்கியமானதும்கூட. அதற்காக அந்த வேலைகள் அனைத்தையும் நீங்களே அள்ளிப்போட்டுக் கொண்டால்... ஆபத்துதான். கணவர், குழந்தைகள், வீட்டுப்பெரியவர்கள் என்று அனைவரையும் அதில் ஈடுபடுத்துங்கள். சாமான்களை வாங்கிவருவது, காயவைப்பது, தேவைப்படும் சாமான்களை (மிளகாய், மல்லி, அரிசி, கோதுமை) வெளியில் மில்லுக்குச் சென்று அரைத்துவருவது, வந்ததும் ஆறவைத்து பாட்டில்களில் அடைப்பது என்று வேலைகளைப் பகிர்ந்துகொடுங்கள்.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

குழந்தைகளைப் பழக்கப்படுத்துங்கள்!

இந்தப் பரிந்துரையும் குடும்பத்தலைவிகள், வேலைபார்க்கும் பெண்கள் இருவருக்குமே பொருந்தும். சில வீடுகளில், ‘என் பொண்ணை முட்டை வாங்கிட்டு வரச்சொன்னா கண்டிப்பா உடைச்சிட்டுத்தான் வருவா’, ‘என் பையனைக் கடைக்கு அனுப்பினா மீதி சில்லறையை கரெக்டா வாங்கிட்டு வரமாட்டான்’ என்று சொல்லி, அந்த வேலைகளையும் தாங்களே செய்வார்கள். இப்படியே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்றால், அந்தப் பிள்ளைகள் காலப்போக்கில் அவர்களுடைய வீட்டு வேலைகளைச் செய்யப் பழகியிருக்கவே மாட்டார்கள். உங்களிடமும் இந்தப் பழக்கம் இருக்கிறது என்றால், உடனே மாற்றிக்கொள்வது நல்லது. இல்லையென்றால், இந்தப் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் தங்களுடைய எல்லா வேலைகளுக்கும் உங்களைச் சார்ந்தே இருப்பார்கள். இது அவர்களுக்கும் நல்லதில்லை. உங்கள் நேரமும் வீணாகும்.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

இது வேண்டவே வேண்டாம்!

வொர்க் ஃப்ரம் ஹோம் செய்துகொண்டிருக்கிற பெண்களை `வீட்ல இருந்துகிட்டுதானே வேலைபார்க்கிறே... இப்பவாவது மதியம் சூடா சமைச்சுக் கொடுக்கலாமே’ என்கிற குடும்பத்தினர் இருக்கவே செய்கிறார்கள். நீங்களும் அதைக் காதில் வாங்கிக்கொண்டு அலுவலக வேலைகளுக்கு இடையே குக்கர் வைப்பது, மீட்டிங்கில் வீடியோவை மியூட்டில் போட்டுவிட்டு தோசை வார்ப்பது என்று இருக்கவே இருக்காதீர்கள். சாப்பாடு சூடாக வேண்டுமென்றால், சாப்பிடுவதற்கு முன்னால் உணவுகளைச் சூடாக்கிக் கொள்ளலாம். எதற்காகவும் அலுவலக நேரத்தில் வீட்டு வேலைகளைச் செய்யாதீர்கள். செய்தீர்களென்றால், பணிகள் பெண்டிங் ஆகி உங்களுடைய பர்சனல் நேரத்தை அலுவலக வேலைகள் பறித்துவிடும்.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

நேர மேலாண்மையின் எதிரிகள்!

அலுவலகங்களில் வேலைசெய்துகொண்டிருக்கிற ஒருவருடைய டேபிளைச் சுற்றி நின்றுகொண்டு இரண்டு, மூன்று பேர் கதையடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களும் வேலை செய்யாமல் வேலைபார்த்துக் கொண்டிருப்பவரையும் தொந்தரவு செய்கிற செயல் இது. உங்களுக்கே இந்தப் பழக்கம் இருந்தால் விட்டுவிடுங்கள். ஒருவேளை இன்னொருவர் உங்கள் வேலையை இந்த முறையில் கெடுக்கிறார் என்றால், ‘என்னால வேலையில கவனம் செலுத்த முடியல, ப்ளீஸ்’ என்று நாசுக்காகச் சொல்லி அவரை உங்கள் டேபிளை விட்டு நகர வையுங்கள். நேர மேலாண்மையின் எதிரிகள் இப்படிப்பட்டவர்கள்.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

எல்லை வேண்டும்!

நீங்கள் வொர்க்கஹாலிக்காக இருந்தாலும், வேலை நேரத்துக்குக் கட்டாயம் எல்லைக்கோடு போட வேண்டும். வொர்க் - லைஃப் பேலன்ஸுக்கு இது முக்கியம்.

வீடு, ஆபீஸ், குடும்பம், குழந்தை, கிச்சன்... டைம் மேனேஜ்மென்ட் ஆலோசனைகள்!

வாரத்துக்கு ஒருமுறை தாளிப்பு!

வாரத்துக்கு ஒருமுறை எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டால், தாளிப்பு நேரம் மிச்சமாவதோடு, தாளிப்புக்குப் பயன்படுத்திய பாத்திரங்களைத் துலக்குகிற நேரமும் மிச்சமாகும். இதிலிருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து சமைத்த உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.