Published:Updated:

இப்படித்தான் இருக்கணும் குடும்ப பட்ஜெட்!

குடும்ப பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
குடும்ப பட்ஜெட்

நிதியும் நீயே!

இப்படித்தான் இருக்கணும் குடும்ப பட்ஜெட்!

நிதியும் நீயே!

Published:Updated:
குடும்ப பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
குடும்ப பட்ஜெட்

குடும்பத்தின் தேவைகளுக்காக கணவன் மனைவி என இருவரும் சேர்ந்து சம்பாதித்தாலும் பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் மட்டுமே குடும்பத்தின் பொருளாதாரத்தை நிர்வகிப்பவர்களாக இருக்கிறார்கள். வீட்டின் பொருளாதார சூழலை மனைவி தெரிந்துகொள்ளாதபட்சத்தில், ஆடம்பரச் செலவுகள் அதிகரித்து குடும்பத்தின் சேமிப்பு குறையும். கடன்களும் அதிகமாகலாம். இது போன்ற சூழல்களைத் தடுக்க குடும்பத்தின் பொருளாதார நிலையில், பெண்களின் பங்கும் அவசியம். குடும்ப நிதிநிலையை கணவன் மனைவி சேர்ந்து திட்டமிடுவதன் நன்மைகள் என்னென்ன? எப்படித் திட்டமிடுவது?

இப்படித்தான் இருக்கணும் குடும்ப பட்ஜெட்!

வீட்டு பட்ஜெட்டும் பெண்களும்

அனிதா பட் - பொருளாதார நிபுணர்

உங்கள் குடும்பத்தின் மொத்த வருமானம் என்ன என்பதை குடும்பத்தலைவியான நீங்கள் தெரிந்துவைத்திருத்தால் மட்டுமே, திட்டமிடலுடன் செலவு செய்ய முடியும். `பெண்களிடம் வரவு செலவுகளை ஒப்படைத்தால் சின்ன சின்ன செலவுகளுக்குக்கூட மனைவியிடம் அப்ளிகேஷன் கொடுக்க வேண்டுமே' என்கிற பயத்தில்தான் பெரும்பாலான ஆண்கள், வரவு செலவுகளை மனைவியிடம் சொல்வதில்லை. எனவே, வருமானம் பற்றி கணவர் உங்களிடம் சொல்ல மறுத்தாலும், குடும்ப எதிர்காலத்துக்காக அதிகாரத் தோரணையில்லாமல், `வீட்டின் நிதிநிலையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து திட்டமிட்டால்தான் எதிர்காலத்துக்காக சேமிக்க முடியும்' என்பதைப் புரியவைத்து, குடும்ப பட்ஜெட்டில் பங்கெடுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் வீட்டின் நிதிநிலை தெரியும் பட்சத்தில் தேவையில்லாத ஆசைகள் நமக்குள் எழாது. `எனக்கு இந்தப் பொருளால் பயனில்லை, இந்தத் தொகை என் குடும்பத்தின் மற்றொரு பயனுள்ள செலவுக்கு உதவும்' என்கிற மனநிலைக்கு நீங்களே வந்துவிடுவீர்கள்.

கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகிறீர்கள் எனில், அவரவர் செலவுகளை மட்டும் பார்த்துக்கொள்ளாமல், குடும்ப சேமிப்போ, செலவோ இருவரும் சேர்ந்து திட்டமிட்டு எடுக்கும் முடிவே ஆரோக்கியமானதாக இருக்கும்.

இப்படித்தான் இருக்கணும் குடும்ப பட்ஜெட்!

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து திட்டமிடுவது என்றாகும்போது இருவருக்கும் சேர்த்து ஜாயின்ட் அக்கவுன்ட் ஒன்றைத் தொடங்குங்கள். இதன் மூலம் முதலீடு ஒரே இடத்தில் இருக்கும். வரவு செலவுகளை இருவரும் சேர்ந்து கவனிக்க எளிதாகவும் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திட்டமிடுவது எப்படி?

பத்மநாபன் - நிதி ஆலோசகர்

மாதாந்திர பட்ஜெட்டில் கவனிக்க வேண்டியவை...

`வருமானம் - செலவு = சேமிப்பு' என்றில்லாமல், `வருமானம் - சேமிப்பு = செலவு' என்று திட்டமிடுங்கள். உங்களின் கடந்த மாத பட்ஜெட்டை எடுத்துப்பாருங்கள். அதிலுள்ள அநாவசிய செலவுகளை இந்த மாதம் தவிர்த்துவிடுங்கள். கிரெடிட் கார்டு பயன்பாட்டில் மறைமுகக் கட்டணங்கள் அதிகமென்பதால் நமது செலவுத்தொகையும் கூடும். அதனால் கூடுமான வரை கிரெடிட் கார்டு பயன்பாட்டைத் தவிர்க்கலாம். விடுமுறை நாள்களில் வெளியூர்களுக்குச் செல்ல திட்டம் இருந்தால், சில மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு, ஒவ்வொரு மாதமும் குறைந்த அளவு தொகையை தனியே எடுத்து வையுங்கள். பட்ஜெட் போடுவது மட்டுமல்ல; அதை எப்பாடுபட்டாவது நடைமுறைப்படுத்த முயலுங்கள். பட்ஜெட்டுக்குத் திட்டமிடும்போது வீட்டில் இருக்கும் எல்லோரிடமும் கலந்தாலோசியுங்கள். அப்போதுதான் வீட்டின் நிலையைப் புரிந்துகொண்டு, தேவையற்ற செலவுகளைக் குறைக்க எல்லோரும் பங்களிப்பார்கள்.

பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்?

மாத வருமானம் 20,000 ரூபாய் என வைத்துக்கொள்வோம். வீட்டு வாடகைக்கு 6,000 முதல் 8,000 வரை ஒதுக்கலாம். மின்சாரக்கட்டணம், மளிகை, மொபைல் செலவு, குழந்தைகள் கல்வி செலவு என அடிப்படைத்தேவைகளுக்கு 10,000 முதல் 12,000 வரை ஒதுக்கலாம். மீதம் இருக்கும் 2,000 ரூபாய் உங்கள் சேமிப்பு.

இப்படித்தான் இருக்கணும் குடும்ப பட்ஜெட்!

குடும்பத்தின் வருமானம் 30,000 எனில் வீட்டு வாடகை 10,000 முதல் 12,000 என்றும், அடிப்படைத்தேவைகளுக்கு 14,500 முதல் 16,000 ஒதுக்கவும். மீதம் இருக்கும் 4,500 ரூபாய் சேமிப்பாக இருக்கும்.

மாத வருமானம் 40,000 என்றால் வீட்டு வாடகை 12,000 முதல் 14,000 என்றும் அடிப்படைத் தேவைகளுக்கு 12,000 முதல் 18,000 வரை ஒதுக்கலாம். மீதம் இருக்கும் 8,000 ரூபாய் உங்கள் சேமிப்பாக மாறும்.

சொந்த வீடு என்றாலோ, இங்கே குறிப்பிட்டதைவிட வாடகை குறைவு என்றாலோ அந்தத் தொகையும் சேமிப்புதான். உங்களின் வருமானம் என்னவாக இருந்தாலும் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை சேமிப்பது அவசியம்.

தவணை முறையில் பொருள் வாங்க வேண்டாம்!

உங்களுடைய மாத வருமானத் தொகையைவிட ஆறு மடங்கு தொகையை வங்கி வைப்பு நிதியாகவோ, லிக்விட் ஃபண்டிலோ, சேமிப்புக்கணக்கிலோ வைத்துக்கொள்வது நல்லது. இது அவசர தேவைகளின்போது கைகொடுக்கும். அவசியம் இன்றி தனிநபர் கடன்களை வாங்காதீர்கள். வட்டி அதிகம் என்பதால் நீங்கள் செலுத்தவேண்டிய தவணைத் தொகையும் அதிகமாகும். இது சேமிப்பைப் பாதிக்கும். செலுத்த வேண்டிய கடன்தொகை போக மீதமுள்ள தொகைதான், உங்களின் மாத வருமானம் என்று நினைத்து மற்ற செலவினங்களைத் திட்டமிடுங்கள். தவணை முறையில் பொருள் வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள்.

இப்படித்தான் இருக்கணும் குடும்ப பட்ஜெட்!

எவற்றிலெல்லாம் சேமிப்பது?

சேமிப்பு என்றவுடன் தங்கமாகவோ, வங்கி வைப்பு நிதியாகவோதான் சேமிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தங்கத்தை சேமிக்கிறீர்கள் எனில், அது உங்கள் அவசரத் தேவைக்கு நிச்சயம் கை கொடுக்காது. தங்கத்தில் முதலீடு செய்யும்போது தங்கத்தின் விலையோடு செய்கூலி, சேதாரம் என கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத விபத்தோ, உடல் சார்ந்த பிரச்னைகளோ உங்களின் சேமிப்பை முழுவதுமாக கரைக்க வாய்ப்பு உண்டு. அதனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சேர்த்து ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால பயன்களுக்காகச் சேமிக்கிறீர்கள் எனில், வங்கிகளில் வைப்பு நிதியாக வைப்பதைத் தவிர்த்து, வருமானத்துக்கு ஏற்ற திட்டங்களுடன் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யுங்கள்.

ஷோபனா - குடும்ப நிர்வாகி
ஷோபனா - குடும்ப நிர்வாகி

கடனில் இருந்து மீண்டோம்!

ன் கணவர் பிசினஸ் செய்துட்டு இருந்தார்.வீட்டின் எல்லா செலவுகளையும் அவர்தான் பார்த்துப்பார். பொருளாதார மந்தநிலை காரணமாக திடீரென்று பிசினஸில் நஷ்டம் ஆகிருச்சு. ஆறு லட்சம் ரூபாய் கடன். சேமிப்பு பணமும் எதுவும் இல்லை. வேறு வழியில்லாமல் என்னுடைய நகைகளை விற்று கடன்களை அடைத்தோம். என் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். வீட்டின் எல்லா வரவு செலவுகளையும் ரெண்டு பேரும் சேர்ந்து திட்டமிட்டுச் செயல்படுத்த ஆரம்பிச்சோம். 25,000 சம்பளத்தொகையில் மாதம் 5,000 ரூபாய் சேமிப்புன்னு எடுத்துவைக்க ஆரம்பிச்சேன். அடுத்தடுத்து சம்பளம் கூடும்போது சேமிப்பு தொகையும் அதிகமாச்சு. இப்போ என் குழந்தைகளின் கல்விக்கான சேமிப்பு போக 15 சவரன் நகையையும் சேமிச்சு வெச்சிருக்கேன்!

மோகனா - குடும்ப நிர்வாகி
மோகனா - குடும்ப நிர்வாகி

சேர்ந்தே திட்டமிடுகிறோம்!

ரெண்டு பேரும் வேலைக்குச் செல்வதால் குடும்ப வரவு செலவுகளை திருமணமானதில் இருந்தே நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தேதான் திட்டமிடுவோம். மாதச் செலவுகள், கரன்ட் பில் கட்டுவதுன்னு ஆளுக்கு ஒரு வேலையைப் பிரிச்சுப்போம். ரெண்டு பேருக்கும் ஜாயின்ட் அக்கவுன்ட் இருப்பதால், எந்தப் பொருள் வாங்கலாம், எதில் முதலீடு செய்யலாம்னு திட்டமிடுவது எளிது. அதனால் வருமானத்துக்கு அதிகமா செலவு செய்ததே இல்லை. அவசியம் எது, ஆடம்பரம் எது என ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுத்தால் பிரச்னைகள் இல்லாமல் எதிர்காலத் திட்டமிடலுடன் வாழ்க்கை சுமுகமாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism