யூடர்ன் தமிழரசன்
பெண்களின் அழகைத் தனித்துக்காட்டி வசீகரிக்கச் செய்பவை உதடுகள். லிப் மேக்கப்பில் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டாலே, நீங்களும் `மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல்' பட்டத்தையும் பாராட்டையும் வாங்குவீர்கள். சரியான முறையில் லிப் மேக்கப் செய்வது எப்படி, லிப் மேக்கப்புக்கான ஷேடுகளைத் தேர்வு செய்வது எப்படி என்று விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ரதி ராதிகா.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஸ்டெப் 1: உதடுகளில் லிப் பாம் அப்ளை செய்யவும்.

ஸ்டெப் 2: க்ளென்சரை ஒரு காட்டன் துணியில் நனைத்து உதடு முழுவதும் தேய்த்து, காய்ந்திருக்கும் சருமத்தை நீக்கவும்.

ஸ்டெப் 3: மீண்டும் லிப் பாம் அப்ளை செய்யவும்.

ஸ்டெப் 4: உதடுகளின் நிறத்தில் இருக்கும் லிப் லைனர் பயன்படுத்தி அவுட்லைன் வரைந்து கொள்ளவும்.

ஸ்டெப் 5: அதே லிப் லைனர் பயன்படுத்தி உதடுகளின் மேடு பள்ளங்களை நிரப்பவும். இதற்கு `கான்டோரிங்' என்று பெயர்.

ஸ்டெப் 6: அவுட்லைன் செய்துள்ள நிறத்துக் கேற்ற ஷேடில் லிப்ஸ்டிக் பயன்படுத்தி மற்ற இடங்களை நிரப்பவும்.

ஸ்டெப் 7: லிப் மேக்கப்பை தனித்துக் காட்டும் விதத்தில் உதடுகளைச் சுற்றி முகத்துக்கான ஃபவுண்டேஷன் க்ரீம் அப்ளை செய்யவும். லிப்ஸ்டிக்குக்கு மேல் லிப் க்ளாஸ் பயன்படுத்தினால் பளபளப்பு கூடும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
லிப்ஸ்டிக் தேர்வு
உதடுகள் அதிக வறட்சியாக இருப்பவர்களுக்கு... க்ரீம் வடிவ லிப்ஸ்டிக்.
பளபளப்பான உதடுகளுக்கு... க்ளாஸி வகை லிப்ஸ்டிக். பளபளப்பு வேண்டாம் என்றால் மேட் ஃபினிஷ் நல்ல சாய்ஸ்.
உதடுகள் சுருக்கங்களுடன் இருப்பவர்களும், எந்த லிப்ஸ்டிக் போட்டாலும் எடுக்காதவர்களும் லிப் பிரைமரை அப்ளை செய்து அதன்பின் லிப் மேக்கப்பை தொடங்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யாருக்கு, எந்த நிறம்?
டார்க், டஸ்கி ஸ்கின் டோன் உடையவர்கள்: ப்ரவுன், கேரமல், ஓயின், பர்கண்டி.
வெளிர் நிறம் உடையவர்கள்: லைட் பிங்க், பீச், நியூடு நிறங்கள், டஸ்டி சிவப்பு, கோரல்.
மாநிறம் உடையவர்கள்: ரோஸ், செர்ரி சிவப்பு.
மெல்லிய உதடுகள் கொண்டவர்கள்: க்ரீம் அல்லது க்ளாஸி (அடர் நிறங்களைத் தவிர்க்கவும்).
பெரிய உதடுகள் உடையவர்கள்: லிப்ஸ்டிக் ஷேடு பயன்படுத்துவது தவிர்த்து மைல்ட் நிற லிப்ஸ்டிக் பயன்படுத்துவது நல்லது.

உதடுகள் பராமரிப்பு டிப்ஸ்
கருமையான உதடுகள் உடையவர்கள் ரோஜா இதழ்களை வேகவைத்து, சர்க்கரைப்பாகு கலந்து உதடுகளில் தடவவும். அரைமணி நேரம் கழித்து, காட்டன் துணியால் துடைத்துவிட்டு லிப் பாம் அப்ளை செய்யவும்.
உதடுகள் வறண்டு சருமம் உரிந்தால் தினமும் இரவு வெண்ணெயை உதடுகளில் தடவி வரலாம்.
உதடுகள் வெடித்து சுருக்கங்களுடன் இருந்தால் பாதாம் எண்ணெய், வெண்ணெய் தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து தினமும் இரவு உதடுகளில் தடவி வரலாம்.
உதடுகளுக்கு வாரம் ஒரு முறை ஸ்க்ரப் பயன்படுத்துவது நல்லது. ஸ்க்ரப் வாங்க முடியாதவர்கள் சர்க்கரையை உதடுகளில் தேய்த்து லேசாக மசாஜ் செய்து சுத்தம் செய்தால் இறந்த செல்கள் நீங்கி உதடுகள் இயற்கை அழகில் மிளிரும்.
இரவு தூங்கச் செல்லும் முன் உதடுகளின் மேல் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து லிப்ஸ்டிக்கை காட்டன் துணி கொண்டு துடைத்து எடுத்துவிடுவது நல்லது.
மாடல்: மோகனா செல்வராஜ்