Published:Updated:

குழந்தை பெற்றுக்கொள்வதா... வேண்டாமா? முடிவை எடுக்க வேண்டியது யார்?

உபாசனா கொனிடெலா

நடிகர் ராம்சரண் - உபாசனா திருமணம் நடந்து பத்து ஆண்டுகள் ஆகியும், இவர்கள் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. அது பற்றிய உற்றார், உறவினர்களின் கேள்விக்கணைகள் சமூகத்திலும் கல்வியிலும் பணியிலும் பணத்திலும் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் உபாசனாவையும் விட்டுவைக்கவில்லை!

குழந்தை பெற்றுக்கொள்வதா... வேண்டாமா? முடிவை எடுக்க வேண்டியது யார்?

நடிகர் ராம்சரண் - உபாசனா திருமணம் நடந்து பத்து ஆண்டுகள் ஆகியும், இவர்கள் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. அது பற்றிய உற்றார், உறவினர்களின் கேள்விக்கணைகள் சமூகத்திலும் கல்வியிலும் பணியிலும் பணத்திலும் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் உபாசனாவையும் விட்டுவைக்கவில்லை!

Published:Updated:
உபாசனா கொனிடெலா

'ஆர்.ஆர்.ஆர்’ பட நாயகன் ராம்சரண் தேஜா; இவரின் மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா. இவர், அப்போலோ மருத்துவமனை நிறுவனர் பிரதாப் சி.ரெட்டியின் பேத்தி. அப்போலோ அறக்கட்டளையின் துணைத்தலைவர். URLife அமைப்பின் நிறுவனராகவும், FHPL என்ற காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் செயல்படுகிறார்.

சமூகநலன் சார்ந்த வணிகங்களை உருவாக்குவதில் நம்பிக்கை உடையவர் உபாசனா. தனது தொழில் வாழ்க்கை என்பது தான், தன்னுடைய மதிப்புகள் மற்றும் தான் வாழும் விதம் ஆகியவற்றின் விரிவாக்கமே என்று கருதுகிறார்.

ராம்சரண் குடும்பம்
ராம்சரண் குடும்பம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கிலாந்தில் உள்ள ரீஜன்ட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வி கற்றிருக்கிறார் உபாசனா. சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ள இவர், பழங்குடியின மக்களின் மறுவாழ்வுக்காகவும் திட்டமிடுகிறார். WWF அமைப்பு இவரை, வனத்துறை ஹீரோக்களின் தூதுவராகவும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் நல்லெண்ணத் தூதுவராகவும் பரிந்துரைத்துள்ளது.

உபாசனா, 2017-ம் ஆண்டில் சுகாதாரப் பாதுகாப்புக்கான ஃபெமினா விருதைப் பெற்றார். 2018-ம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இதழால் பாராட்டப்பட்டார். 2019-ம் ஆண்டில் இவருக்கு தாதா சாகேப் பால்கே சிறப்பு விருது வழங்கப்பட்டது. GQ இதழின் கோவிட்-19க்கு எதிரான போரில் பங்கேற்ற ‘ஹீரோஸ் 2021’ பட்டியலில் இவரும் இடம் பெற்றிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்போது எதற்கு உபாசனா பற்றி இவ்வளவு நீள அறிமுகம்? காரணம் இருக்கிறது. தென்னிந்தியாவின் இளமையான, உத்வேகமான, செல்வாக்குள்ள நபர்களில் ஒருவரான இவரும் சராசரி பெண்கள் சந்திக்கும் அதே கேள்வியை, அடிக்கடி சந்தித்து வருகிறார்.

ராம்சரண் - உபாசனா திருமணம் நடந்து பத்து ஆண்டுகள் ஆகியும் இவர்கள் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. அது பற்றிய உற்றார் உறவினர்களின் கேள்விக்கணைகள் சமூகத்திலும் கல்வியிலும் பணியிலும் பணத்திலும் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் உபாசனாவையும் விட்டுவைக்கவில்லை!

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘நானும் என் கணவரும் பத்தாண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளாதது குறித்து எங்கள் உறவினர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு வருகிறார்கள். ஆனால், எங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை. எங்களுக்கென சில இலக்குகள் இருக்கின்றன’’ என்றும் கூறினார்.

உபாசனா
உபாசனா

‘‘எனக்கும் என் மனைவிக்கும் சில இலக்குகள் உள்ளன. குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த இலக்கில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை’’ என்று இதற்கு முன்பே, நடிகர் ராம்சரண் தேஜா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

குழந்தை பெற்றுக்கொள்வது என்பது பெண் மேற்கொள்ளவேண்டிய ஓர் அத்தியாவசியக் கடமையாகவே இந்திய சமூகத்தில் சித்திரிக்கப்பட்டு வருவதுதான் உலகம்மாள் முதல், உபாசனாக்கள் வரை அத்தனை பெண்களும் அனுபவிக்கும் பிரச்னைக்கான அடிப்படை. தாய்மையே பெண்ணின் அடையாளமாக மேன்மைப்படுத்தப்படுவதும் இதன் பின்னணியில்தான்.

தாய்மை என்பது மனித வாழ்வின் அற்புத தருணங்களில் ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தாய்மையைப் பயன்படுத்தி பெண்களின் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதுதான் பிரச்னை.

தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா, வேண்டாமா? குழந்தை பெற்றுக் கொள்வதானால் அது இப்போதா, பின்னரா? இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்டு தனக்குத்தானே பதில் பெற்று முடிவெடுத்து செயல்பட வேண்டியவள், அந்தப் பெண் மட்டுமே.

’உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போக வேண்டும்’ என்று பெரியார் கூறியிருக்கிறார். இதை ஆணாதிக்கத்தை ஒழிப்பதற்கான ஒரு வழிமுறையாகவே அவர் மிகத் தெளிவாக அன்றே விளக்கிச் சென்றிருக்கிறார்.

“கர்ப்பத்தடையின் அவசியத்தை பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும் மற்றவர்கள் கருதும் காரணங்களுக்கும் அடிப்படையான வித்தியாசமிருக்கிறது. அதாவது பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகிறோம். மற்றவர்கள், பெண்கள் உடல் நலத்தை உத்தேசித்தும், நாட்டின் பொருளாதார நிலையை உத்தேசித்தும், குடும்பச் சொத்துக்கு அதிகம் பங்கு ஏற்பட்டுக் குறைந்தும் குலைந்தும் போகாமல் இருக்கவேண்டும் என்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியமென்று கருதுகிறார்கள்” என்கிறார் பெரியார்.

குழந்தை
குழந்தை
சித்திரிப்புப் படம்

பெண்ணின் உடல் மீது அவளுக்கே உரிமையில்லாத நிலை மாற வேண்டும் என்பதற்காகவே, பெரியார் இதைக் கூறியிருக்கிறார். குடும்பம் முதல், சமூகம் வரை பெண்ணின் உடல்மீது உரிமை கொண்டாடுகின்றன. அதைத் தவிர்த்து பெண் முழுமையான விடுதலை பெற இதை ஓர் உத்தியாக அவர் கூறுகிறார். இல்லையெனில் ஆணாதிக்கமும் குடும்ப அமைப்பும் சாதியக் கட்டமைப்பும் மதங்களும் பெண்ணைச் சுரண்டிக்கொண்டே இருக்கும் என்பதுதான் நிஜம். இந்தப் பின்னணியில்தான் பெரியாரின் கருத்துகளைப் பார்க்க வேண்டும்.

இன்றும் பெண்ணின் உடல் சார்ந்த உரிமை பிரச்னை இருக்கவே செய்கிறது என்பதற்கான பல உதாரணங்களை நாம் தினம் தினம் காண்கிறோம். குறிப்பாக குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த முடிவுகளை சுயமாகவே எடுக்கும் பெண்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

2021-ம் ஆண்டு வெளியான ‘சாரா’ஸ்’ மலையாளத் திரைப்படத்தின் நாயகி அதைத்தானே வெளிச்சம்போட்டுக் காட்டினாள்? அந்தப் படத்தின் நாயகி சந்தித்த கேள்விகளும், உபாசனாவும் பிற பெண்களும் எதிர்கொள்ளும் கேள்விகளும் வேறு வேறல்ல!

- சஹானா