என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

அடிப்படை முதல் அட்வான்ஸ்டு லெவல் மேக்கப்வரை... வாசகிகளுக்கு வழிகாட்டிய `அவள் விகடன்' பயிற்சி!

மேக்கப் பயிற்சி...
பிரீமியம் ஸ்டோரி
News
மேக்கப் பயிற்சி...

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் ரூ.350 மதிப்புள்ள ஆர்கானிக் மேக்கப் பொருள்களும் வழங்கப்பட்டன.

பொருளாதார ரீதியாகப் பெண்கள் சுதந்திரத்துடன் இருந்தால் அது கொடுக்கும் மனோதிடமே தனி. அந்த வகையில் எந்த வயதில் கற்றுக்கொண்டாலும் கணிசமான வருமானத்தை அள்ளித் தரும் ஒரு தொழில் `பிரைடல் மேக்கப்’. முறையான பயிற்சி பெற்றால் அசத்தலான மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிவிடலாம். அதிக கட்டணம் வசூலிக்கும் மேக்கப் கோர்ஸுகளுக்கு மத்தியில் பட்ஜெட்டுக்குள் அடங்கும் மேக்கப் வகுப்புகளை நடத்துகிறது `H3 பியூட்டி அகாடமி'.
அடிப்படை முதல் அட்வான்ஸ்டு லெவல் மேக்கப்வரை... வாசகிகளுக்கு வழிகாட்டிய 
`அவள் விகடன்' பயிற்சி!

பெண்கள் தினத்தை முன்னிட்டு அவள் விகடன் நடத்திய நிகழ்ச்சி களின் தொடர்ச்சியாக H3 Beauty Academy உடன் இணைந்து Basic to Advanced Makeup & Bridal Styling என்ற பயிற்சியை வாசகிகளுக்கு வழங்கியது. கோவிட்-19 பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குறைவான எண்ணிக்கையிலானவர்களே பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 5,000 ரூபாய் மதிப்புள்ள பயிற்சி அவள் விகடன் வாசகிகளுக்காக ரூ.500 சிறப்புக் கட்டணத்தில் வழங்கப்பட்டது. மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பயிற்சியில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பயிற்சி வகுப்பில்...
பயிற்சி வகுப்பில்...

பயிற்சியில் பிரைடல் மேக்கப், தினசரி மேக்கப், விதவிதமான ஹேர்ஸ்டைல்கள் வரை கற்றுக்கொடுக்கப்பட்டன. மேக்கப்பில் பயன்படுத்தப்படும் நுணுக்கங்களும் தொழில்நுட்பங்களும் மட்டுமல்லாமல் மேக்கப் பிராண்டுகளின் தன்மை, அவற்றை நுணுக்கமாக உபயோகப்படுத்தும் முறை போன்ற தகவல்களையும் பயிற்சி யாளர்களுக்குக் கற்றுக்கொடுத்தார் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் உமேஷ்வரி.

எந்த உடல்வாகுக்கு எந்த மாதிரியான உடைகள் பொருந்தும், தோற்றத்துக்கேற்ப உடைகள் அணிய வேண்டியதன் அவசியம். மேக்கப்புக்கு இணையான முக்கியத் துவத்தை ஸ்டைலிங் செய்வதிலும் கொடுக்க வேண்டியதன் அவசியம் என சகலத்தையும் விளக்கினார் செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் சினேகா சஜித்.

மேக்கப் பயிற்சி...
மேக்கப் பயிற்சி...

முக அமைப்புக்குத் தகுந்தாற்போல் ஹேர் ஸ்டைல் செய்துகொள்ள வேண்டியதன் அவசியம் தொடங்கி பல நுணுக்கங்களைப் பயிற்றுவித்தார் ஹேர் ஸ்டைலிஸ்ட் சுகுணா.

அடிப்படை முதல் அட்வான்ஸ்டு லெவல் மேக்கப், சருமப் பராமரிப்பு, ஹேர் ஸ்டைல், காஸ்டியூம் தேர்வு செய்வது, கலர் தேர்வு செய்வது, ப்ரீ வெடிங் மற்றும் போஸ்ட் வெடிங் ஸ்டைலிங் டெக்னிக்குகள் போன்றவை இந்த Basic to Advanced Makeup & Bridal Styling பயிற்சியில் வழங்கப்பட்டன.

 H3 பியூட்டி அகாடமி உரிமையாளர் கஸாலி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் உமேஷ்வரி, பயிற்சி கலந்து கொண்டவர்கள், செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் சினேகா சஜித்
H3 பியூட்டி அகாடமி உரிமையாளர் கஸாலி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் உமேஷ்வரி, பயிற்சி கலந்து கொண்டவர்கள், செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் சினேகா சஜித்

மார்ச் 27, 28 ஆகிய இரண்டு தேதிகளில் நான்கு பேட்ச்சுகளாக சென்னையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் அவள் விகடன் வாசகிகள் பலர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் ரூ.350 மதிப்புள்ள ஆர்கானிக் மேக்கப் பொருள்களும் வழங்கப்பட்டன. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின் பற்றுதல் என கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளுடன் நடைபெற்ற பயிற்சி இனிதாக நிறை வடைந்தது.