Published:Updated:

உலகப் புத்தகத்தைப் புரட்டுவோம், வாருங்கள்! - மீனாட்சி

மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
மீனாட்சி

வித்தியாசம்

உலகப் புத்தகத்தைப் புரட்டுவோம், வாருங்கள்! - மீனாட்சி

வித்தியாசம்

Published:Updated:
மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
மீனாட்சி

‘`இந்த உலகம் ஒரு புத்தகம். பயணங்கள் மேற்கொள்ளாதவர்கள், இந்தப் புத்தகத்தின் ஒருபக்கத்தை மட்டுமே வாசிக்கின்றனர் என்று செயின்ட் அகஸ்டின் சொல்லியிருக்கிறார். இதை அனுபவத்தில் உணர்ந்தவள் நான். நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும், நமக்கான பாடங்கள். பயணத்தின்போது நாம் சந்திக்கும் மனிதர்களே நம் ஆசிரியர்கள்” என்று வித்தியாசமாகத் தொடங்குகிறார், பயணங்களின் காதலி மீனாட்சி.

கோயம்புத்தூரைச் சேர்ந்த மீனாட்சிக்கு 47 வயது. இதுவரை 70 நாடுகளின் மண்ணை மிதித்திருக்கும் மீனாட்சி, சமீபத்தில் கோயம்புத்தூரிலிருந்து ரஷ்யாவரை காரிலேயே பயணப்பட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``நான் திண்டுக்கல்லில் ரிசார்ட் வெச்சிருக்கேன். என் அப்பாவுக்கு ரோடு ட்ரிப் ரொம்பப் பிடிக்கும். குடும்பத்தோடு அடிக்கடி ட்ரிப் போவோம். அப்படித்தான் எனக்கும் காருக்குமான பந்தம் தொடங்கிச்சு. ரெண்டு அண்ணன்களும் கார் பிரியர்கள். டயர் மாத்துறதுலயிருந்து பஞ்சர் பார்க்கிற வரைக்கும், கார் தொடர்பான எல்லா விஷயங்களும் எனக்கு அத்துப்படியானது அவங்களாலதான்.

மீனாட்சி
மீனாட்சி

நல்லா கார் ஓட்டுவேன் என்பதால் அடிக்கடி தனியா பயணம் செய்வேன். ஒருகட்டத்தில், சமூக வலைதளம் மூலமா குழு அமைச்சு, ட்ரிப் ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சோம். அப்படி நான் முதன்முறையா ஒருங்கிணைத்த ட்ரிப், 2016-ல் இந்தியாவிலிருந்து தாய்லாந்து வரையிலான ரோடு ட்ரிப். ஏறத்தாழ 3,000 கி.மீ பயணம். அடுத்து, 2017-ல் கோயம்புத்தூர் முதல் லண்டன் வரை ரோடு ட்ரிப் போனோம்.

2017-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சு 70-வது வருடங்கள் ஆகியிருந்தது. அதனால், சுதந்திரம் கிடைத்து இத்தனை வருடங்கள் கழித்தும், அடிப்படைக் கல்வி கிடைக்காமல் இருக்கும் கிராமப்புறங்களில் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை எங்கள் பயணத்தின் இலக்காக்கினோம்.

மீனாட்சி
மீனாட்சி

2018-ல் சோலோ ட்ரிப்ஸ் நிறைய போனேன். கனடா, எஸ்டோனியா, லேக்டோனியா, லித்தியோனியா போன்ற இடங்களுக்கு வாடகை கார் எடுத்து தன்னந்தனியே பயணப்பட்டேன். 2019-ல் கோயம்புத்தூர் - ரஷ்யாவுக்கு 52 நாள்கள் பயணம். இதற்காக நாங்க பயணப்பட்ட டிரான்ஸ் சைபீரியன் ஹைவேதான், உலகின் மிக ஆபத்தான நெடுஞ்சாலை. 11,000 கி.மீ நீளம் கொண்ட இந்த ஹைவேயில், இடையில் 1,000 கி.மீ-க்கு தங்கவோ, சாப்பிடவோ, டீசல் போடவோ எந்த வசதியும் இருக்காது. அதனால், இவை எல்லாவற்றுக்கும் முன்னேற்பாட்டோடு கிளம்பினோம். நிறைய திட்டமிடல் தேவைப்பட்ட ட்ரிப் இது. இந்தப் பயணத்துல எங்களின் கரு, கர்ப்பப்பைவாய் புற்றுநோய்த் தடுப்பு மருந்துக்கான விழிப்புணர்வு’’ என்கிறவர், ஒரு பெண்ணாக பயணங்கள் பற்றிய தன் பார்வைகளைப் பகிர்கிறார்.

``70 நாடுகளுக்குப் பயணப்பட்ட அனுபவத்தில் சொல்றேன். பயணங்கள் பெண் களுக்குப் பாதுகாப்பற்றது என்கிற எண்ணமே தவறு. முறையான திட்டமிடலோடு சென்றால் பாதுகாப்புக்கு எந்தப் பிரச்னையும் வராது.

மனுஷங்களை நம்புங்க... எல்லா இடத்துலயும் நல்லதே நடக்கும். மொழி ஒரு பிரச்னையே இல்லைனு, நான் சந்திச்ச மனுஷங்கள் உணரவெச்சாங்க. அடிப்படை ஆங்கிலம்கூடத் தெரியாத எத்தனையோ ஊர்களுக்கு நான் பயணப்பட்டிருக்கேன். டீ, காபி வேணும்னாகூட எப்படிக் கேட்கிறதுன்னு தெரியாது. ஆனா, மொழியைத் தாண்டி மனுஷனுக்கு மனுஷன் ஒரு கனெக்ட் இருக்கு. அதுக்கு, நாம மனுஷங்களை முதல்ல நம்பணும்’’ என்று நம்பிக்கை அளிக்கிறார்.

‘`பயணங்கள் வாழ்க்கையை இன்னும் அழகாக்கும். கதை களையும் அனுபவங்களையும் பரிசளிக்கும்.

கிராமப்புறங்களில் வசிக்கிற மக்களைப் பார்க்கும்போதுதான், நாம அனுபவிச்சிட்டிருக் கிற சுதந்திரத்தோட அருமையை உணர முடியுது. குறிப்பா, கல்வியறிவு கிடைக்காத எத்தனையோ கிராமங்கள் நம் நாட்டில் இருக்கு. நமக்குக் கிடைச்ச எல்லாமும் அவங்களுக்கும் கிடைக்கணும்னு தோணும். இந்த மனசை, புரிந்துணர்வை பயணங்களே எனக்குக் கொடுத்துச்சு. ஒவ்வொரு பயணம் முடியும்போதும், இன்னும் பயணிக்கணும்னு தான் எனக்குத் தோணும். இந்த ரஷ்யா ரோடு ட்ரிப்பும் அப்படித்தான் அமைஞ்சது. அந்த வகையில இதைவிட சூப்பரான ஒரு பயணத்தை முடிச்சுட்டுச் சொல்றேன்!” - நிரம்பிய எனர்ஜியுடன் நிறைவு செய்கிறார் மீனாட்சி.