பிரீமியம் ஸ்டோரி

லாசோ பேன்ட்டுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, டிரெண்டாகி இருக்கிறது சராரா. லாங் டாப், ஷார்ட் டாப் என எந்த ஆடையுடனும் மிக்ஸ் மேட்ச் ஆகும் சராராவில் ஸ்டைலாக வலம்வர டிப்ஸ் வழங்குகிறார் ஃபேஷன் டிசைனர் செளந்தர்யா.

எங்கெல்லாம் அணியலாம்?

“சராரா என்பது டைட் மற்றும் ஃப்ரீ ஃபிட் கொண்ட பேன்ட் ஸ்டைல். அதாவது, இந்த ஆடை உடலின் தொடை பாகம் வரை இறுக்கமாகவும் அதன் பின் தளர்வாகவும் இருக்கும். உயரமானவர்கள், உயரம் குறைந்தவர்கள் என எல்லோருக்கும் அழகாகப் பொருந்தும். திருமண நிகழ்ச்சிகள், பார்ட்டிகள், வீட்டு விசேஷங்களுக்கு அணியலாம். சிம்பிள், கிராண்டு, டிரெண்டி என இதில் வெரைட்டி காட்ட முடியும்.

ரா... ரா... சராரா... 
அனைவரும் அசத்தலாம் அழகாக!

சிம்பிள் லுக் போதும் என்றால் காட்டன், இக்கட் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்ட சராராவை தேர்வு செய்யலாம். கிராண்டு லுக் பிரியைகள் வேலைப்பாடுகளுடன்கூடிய மெட்டீரியல்கள், நெட்டடு மெட்டீரியல்களைத் தேர்வு செய்யலாம்.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என எங்கு சராராவை ஷாப்பிங் செய்தாலும் உங்களின் தொடையின் அளவைக் கணக்கிட்டுதான் வாங்க வேண்டும். டிரெண்டி ஆடை என்பதால் ஃப்ரீ ஹேர் ஸ்டைல் அல்லது கர்லி ஸ்டைல் பொருத்தமாக இருக்கும். அதிக மேக்கப்பைத் தவிர்க்கலாம். தரையில் படுகிறது என்பதற்காக சராராவைக் கையில் பிடித்தபடி நடக்கக் கூடாது.
ரா... ரா... சராரா... 
அனைவரும் அசத்தலாம் அழகாக!

டாப்ஸ் தேர்வு

ஃப்ரீ ஸ்டைலில் இருப்பதால் சராராவே உங்களை டிரெண்டியாகத்தான் காட்டும். இன்னும் டிரெண்டியாக வேண்டும் என்றால் டாப்ஸை மிக்ஸ் மேட்ச் செய்வதில் கவனம் செலுத்தலாம். டாப்ஸில் ரஃபில் வைத்தோ, ஜம்ப் சூட் அல்லது ஓவர் லே போன்றோ டிசைன் செய்துகொள்ளலாம். சராராவில் நிறைய வேலைப்பாடுகள் இருந்தால் பிளெயின் டாப்ஸ் போதும். உங்களிடம் இருக்கும் குர்தி, கிராப் டாப்ஸ், ஷர்ட், ஷார்ட் அனார்கலி டாப்ஸுக்கும் சராராவை மிக்ஸ் மேட்ச் செய்யலாம். சராராவின் அழகு வெளியே தெரியாது என்பதால் கூடுமானவரை லாங் டாப்ஸைத் தவிர்க்கலாம்.

டார்க் ஷேடு சராராவுக்கு லைட் ஷேடு டாப்ஸும், லைட் ஷேடு டாப்ஸுக்கு டார்க் ஷேடு சராராவும் அசத்தலாக இருக்கும். சராராவுக்கு துப்பட்டா அவசியமில்லை. ஆனால், சிங்கிள் ஃப்ளீட் துப்பட்டா இன்னும் அழகாக்கும்.

அழகு சேர்க்கும் அணிகலன்கள்

இது குஜராத்தி டைப் ஆடை என்பதால் ஆடைக்கு ஏற்ற நிறத்தில் கை நிறைய வளையல்கள் அணிந்துகொள்ளலாம். சிம்பிளான நெக் பீஸ் போதும். பெரிய காதணிகள் அணிந்தால் நெக் பீஸ் தேவையில்லை.

பருமனா... ஒல்லியா?

உடல் பருமனாக இருப்பவர்கள் சராராவை தொடைப்பகுதியில் இறுக்கமாக இல்லாமல் தளர்வாகவே வடிவமைக் கலாம். அல்லது ஸ்லிட் இல்லாத டாப்ஸை மிக்ஸ் மேட்ச் செய்யலாம். ஃபுல் ஸ்லீவ் மற்றும் ஹை காலர் டாப்ஸைத் தவிர்க்கலாம்.

ஒல்லியாக இருப் பவர்கள் இரண்டு மூன்று அடுக்குகள் கொண்ட லேயர்டு சராரா, மிகவும் தளர்வாக இருக்கும் ஃப்ரீ ஸ்டைல் சராராவைத் தேர்வு செய்யலாம். தொடைவரை இருக்கும் டாப்ஸ் அல்லது கிராப் டாப்ஸை மிக்ஸ் மேட்ச் செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு