ஆடையில் அடுக்கடுக்காக லேயர் வைத்துத் தைக்கும் ரஃபில் (Ruffle) உடைகள்தாம் இப்போது லேட்டஸ்ட் டிரெண்ட். இந்த ரஃபில் உடைகளை நிகழ்ச்சிகளுக்கேற்ப எப்படித் தேர்வு செய்வது, உடலமைப்புக்கேற்ப எப்படி வடிவமைத்துக்கொள்வது என வழிகாட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த உடை வடிவமைப்பாளர் ஸ்வாதி புருஷோத்தமன்.

மாடர்ன் லுக்

மாடர்ன் லுக் விரும்பும் பெண்கள் லெஹெங்கா போன்ற டிசைனில் உடையை வடிவமைத்து, அதற்கேற்ற வகையில் பிளவுஸ்களை மிக்ஸ் மேட்ச் செய்து கொள்ளலாம். லெஹெங்கா முழுவதும் ரஃபில் வைத்து வடிவமைத்தால் கூடுதல் அழகாக இருக்கும். மாடர்ன் லுக் உங்களுடைய விருப்பம் என்பதால் கூடுமானவரை ப்ளைன் மெட்டீரியல் உங்களுடைய சாய்ஸாக இருக்கட்டும். அணிகலன்களைத் தவிர்த்தால் கேஷுவல் லுக்கும் கிடைக்கும்.

சிம்பிள் லுக்

டிரெண்டிடாக அணிய ஆசைதான்... ஆனால், சிம்பிளாகவும் இருக்க வேண்டும் எனில் ஸ்கர்ட் அண்டு டாப்ஸ்களைத் தேர்வு செய்யலாம். மூன்று நிறங்களில், சிமிலர் ஷேடுகளில் உருவாக்கப்படும் இதுபோன்ற ஸ்கர்ட்டுகளுக்கு ஜர்தோஸி அல்லது ஸ்டோன் வொர்க் செய்யப்பட்ட கிராப் டாப் அல்லது ஷர்ட்டுகளை மிக்ஸ் மேட்ச் செய்து கொள்ளலாம். போல்டு லுக் விரும்புபவர்களுக்கு ஹை காலர், ஃபுல் ஸ்லீவ் டாப்ஸ் நல்ல தேர்வாக இருக்கும். இன்சர்ட் செய்யும் வகையில் டாப்ஸை வடிவமைத்தால் தனித்துவமாக அமையும்.

கேஷுவல் லுக் பிரியைகள் கிராப் டாப்பை மிக்ஸ் மேட்ச் செய்துகொள்ளலாம். கல்லூரி நிகழ்ச்சிகள், ஃப்ரெண்ட்ஸ் அவுட்டிங் போன்றவற்றுக்கு இந்த உடை பொருத்தமாக இருக்கும்.

டிரெடி - டிரெண்டி லுக்

‘புடவையில் ரஃபில் டிசைன் செய்துகொள்ள முடியுமா?’ என்றால், நிச்சயமாக முடியும். புடவையின் அடிப்பகுதியில் இரண்டு, மூன்று அடுக்குகள் வைத்து ரஃபில் ஸ்கர்ட் போன்று வடிவமைத்துக்கொள்ளுங்கள். புடவையின் கீழ்ப்பகுதி சிம்பிள் லுக்கில் இருக்கிறது எனில், புடவையின் பள்ளு பகுதியைக் கொஞ்சம் கிராண்டாக வடிவமைத்துக் கொள்ளலாம். தனித்துவமாகத் தெரிய விரும்புகிறீர்கள் எனில், கான்ட்ராஸ்ட்டான இரண்டு நிறங்களை மிக்ஸ் மேட்ச் செய்து புடவையை வடிவமைக்கலாம். இன்னும் கூடுதல் அழகில் தெரிய விரும்பினால் புடவையின் மேல் பகுதியில் உள்ள பார்டருக்குப் பதிலாக ரஃபில் வைத்துக்கொள்ளலாம். ஒல்லி, சப்பி (Chubby) என எல்லோருக்கும் இந்த ரஃபில் புடவைகள் பொருத்தமாக இருக்கும்.

இதில் புடவைக்கு ஏற்ற பிளவுஸ்களை வடிவமைப்பதில் கூடுதல் கவனம் தேவை. ரிசப்ஷன், சங்கீத் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த ரஃபில் புடவைகள் பொருத்தமாக இருக்கும்.

கிராண்டு லுக்

கிராண்டு லுக் வேண்டும், அதே நேரம் டிரெண்டியாக வும் இருக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் ரஃபில் கேப் உடைகளைத் தேர்வு செய்யலாம். சிம்பிளான உடை அணிந்து அதற்கு மேல் ரஃபில் டிசைனில் வடிவமைக்கப்பட்ட கேப் போன்ற நெட்டட் பகுதியை மிக்ஸ் மேட்ச் செய்து, தனித்துவமாக வலம் வரலாம். பார்ட்டி, கல்லூரி நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு இது பொருத்தமாக இருக்கும்.

எத்னிக் லுக்

எத்னிக் லுக் உங்களுடைய சாய்ஸ் எனில், உடையை ஸ்கர்ட் அண்டு டாப் ஆகவோ, கவுனாகவோ வடிவமைத்துக்கொள்ளலாம். ஸ்கர்ட் அண்டு டாப் எனில் மூன்று மைல்டு அல்லது டார்க் நிறங்களைத் தேர்வு செய்து, படத்தில் உள்ளதுபோல அன்ஈவன், அசிமெட்ரிக் என ஸ்கர்ட்டை வடிவமைத்துக்கொள்ளலாம். இதற்கு, கிராண்டான கிராப் டாப் பொருத்தமாக இருக்கும். ஸ்கர்ட்டுக்கு கான்ட்ராஸ்ட்டான நிறத்தில் டாப் தேர்வு செய்தால் அசத்தலாக இருக்கும். ஸ்கர்ட்டில் உள்ள நிறங்களை மையமாக வைத்து டாப்பில் ஜர்தோஸி அல்லது எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்துகொள்ளலாம். ஸ்லீவ்களை கோல்டு ஷோல்டர், ஃபுல் ஸ்லீவ், எல்போ ஸ்லீவ் என உடலமைப்புக்கேற்ப வடிவமைத்து, ஸ்லீவின் அடிப்பகுதியில் ரஃபில் வைத்து டிசைன் செய்தால் நீங்கள்தான் டிரெண்ட் செட்டர்! இது போன்ற ஆடைகள் மாலை நேர நிகழ்ச்சிகளுக்கு ஏற்றது.

குறிப்பு:

சாஃப்ட் சில்க், காட்டன், நெட்டட், சின்தடிக் என உங்கள் விருப்பத்துக்கும் வசதிக்கும் ஏற்ப எந்த மெட்டீரியலிலும் ரஃபில் உடைகளை வடிவமைக்கலாம்.