Published:Updated:

நல்விதையை மாணவர்களிடம் விதைக்க வேண்டும்!

வானதி
பிரீமியம் ஸ்டோரி
வானதி

வித்தியாசம்

நல்விதையை மாணவர்களிடம் விதைக்க வேண்டும்!

வித்தியாசம்

Published:Updated:
வானதி
பிரீமியம் ஸ்டோரி
வானதி

அந்தக் கிராமத்தில் குடிநீர் வேண்டியிருந்தாலும் சரி, குழந்தைகள் கல்வி என்றாலும் சரி, கோயில் திருவிழா என்றாலும் சரி, இவர் வீடு தேடி வருகிறார்கள் மக்கள். ``எனக்கான கடமை மக்கள் பணி மட்டுமே. அரசியலிலிருந்து செய்வதைவிடவும் ஆசிரியராக இருந்து என் மக்களுக்கு நிறைய உதவ முடிகிறது'' என்று ஆச்சர்யம் கொள்ளவைக்கிறார் வானதி.

திருச்சி மாவட்டம் வெங்கடாசலபுரம் பஞ்சாயத்தில் நடுநிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார் வானதி. இது இன்றைய அடையாளம். 15 ஆண்டுகளுக்கு முன்னர், அவர் அதே பஞ்சாயத்தின் தலைவர். `பஞ்சாயத்துத் தலைவர் டு ஆசிரியர் பணி'க்கான அவரது பாதை வலியும் வலிமையும் கலந்தது.

ஈழத்திலிருந்து 1967-ம் ஆண்டு கலவரம் காரணமாக இந்தியாவுக்குப் பெற்றோருடன் குடிபெயர்ந்தார் வானதி. தந்தையின் பூர்வீகமான வெங்கடாசலபுரத்தில் பள்ளிப் படிப்பு. பிறகு டியூஷன் எடுத்துச் சம்பாதித்து கல்லூரிப் படிப்பை முடித்தார். திருமணத்துக்குப் பிறகு கணவரின் உந்துதலோடு முதுகலைப் பட்டப்படிப்பும் ஆசிரியர் பயிற்சி பட்டயமும் பெற்றார். எனினும், குழந்தைகளுக்காகத் தனக்கு வழங்கப்பட்ட கல்லூரி பேராசிரியர் பணியை மறுத்து வீட்டிலிருக்கிறார். அப்போதுதான் அவரது வாழ்க்கையில் அந்தத் திருப்புமுனை...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
vanathi
vanathi

ஊர்மக்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க 2002-ம் ஆண்டு பஞ்சாயத்துத் தலைவர் ஆகிறார். பதவியேற்றதும் இவரது அயராத மக்கள் பணியும், அதிரடி நடவடிக்கைகளும், வெங்கடாசலபுரத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றுகிறது. கிராம நிர்வாக கணக்குகளைக் கணினிமயமாக்கியது, அனைத்து வீடுகளிலும் மழைநீர்ச் சேகரிப்பைத் தொடங்கியது, 100 சதவிகிதம் வரி செலுத்தும் கிராமமாகப் பெருமைகொண்டது, கள்ளச் சாராயத்தை ஒழித்தது, லஞ்சம் தவிர்த்தது, கழிப்பறைப் பயன்பாட்டை மேம்படுத்தியது, தமிழ்நாட்டுக்கே முன்னோடியாகத் தெரு விளக்குகளை சோலார் மயமாக்கியது, நீர் மேலாண்மையைக் கடைப்பிடித்து, மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தது, அரசு நிதிகளை வெற்றிகரமாகக் கிராம வளர்ச்சிக்குப் பயன்படுத்தியது, கிராமத்தில் சாலைகள் அமைத்தது என ஓயாது சுழன்றிருக்கிறார் வானதி.

ஆனால், நேர்மையற்றவர்களுக்கு இவரது உண்மை உறுத்துமே... அரசியல் சூழ்ச்சிகளுக்கும் சாதிய வன்மங்களுக்கும் இவரது கனவுகளும் பணிகளும் பலியாகின. `சாதி எண்ணங்கள் ஒழியாமல் வளர்ச்சி சாத்தியப்படாது' என்று எண்ணியவர், அதற்கான விதையை இளம்பருவத்தில் பள்ளி மாணவர்களிடம்தான் விதைக்க முடியும் என்று முடிவெடுக்கிறார். விளைவு... அன்றே தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அந்தக் கிராமத்துப் பள்ளியிலேயே ஆசிரியர் பணியில் சேர்ந்து இன்று வரை தன் பணியைத் தொடர்கிறார்.

`கிராமியம்' எனும் அறக்கட்டளை தொடங்கி, தன்னுடைய வருமானத்தைக்கொண்டே, பல்வேறு மாணவர்களின் படிப்புக்கு உதவி வருகிறார். தன் கடமைகளைச் செய்ய விடாது தடுத்த அதே மக்கள் வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்க, அவர்களுக்கும் சேர்த்தே தன் சேவைகளைத் தொடர்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism