கலை நிகழ்ச்சிக்காக சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்தாராம் தொகுப்பாளர் சித்ரா, ``பத்து நாள்கள் ஜப்பான்ல தங்கியிருந்தேன். இதுவரைக்கும் புத்தர், புத்த மதம் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தேன். இந்தப் பயணம் புத்த மதம் பற்றி ஆழமாக அறியும் ஆர்வத்தை உண்டாக்கியிருக்கு. அதன் நினைவா, ஒரு பெரிய புத்தர் சிலை வாங்கிட்டு வந்திருக்கேன்’’ என்கிறார் சித்ரா.

ஷூட்டிங் இல்லாத நாள்களில் பொறுப்பான குடும்ப நிர்வாகியாக கணவருடைய பிசினஸில் உதவுகிற நடிகைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. சுஜிதாவும் மோனிகாவும் தங்கள் விளம்பர நிறுவனங்களுக்குச் செல்கிறார்கள். ஷப்னம் தங்களுடைய ‘கார் ஸ்பா’வை நிர்வகிக்கக் கிளம்பிவிடுகிறார். ‘செம்பருத்தி’ ஜெனிஃபர், கணவர் நடத்தும் டிராவல்ஸ் பிசினஸின் வரவு செலவில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். ஆனந்தியை அவரது ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பார்க்க முடிகிறது.

கடந்து போன தீபாவளி ‘பிக் பாஸ்’ மதுமிதாவுக்குத் தலை தீபாவளி. ‘புடவையா, நகையா... கணவர் என்ன பரிசு தந்தார்?' என்று கேட்டோம். `‘மறுநாள் தீபாவளிங்கிறதைக் கவனிக்காம முந்தைய நாள் ஒரு நிகழ்ச்சிக்கு வர்றதா கமிட் பண்ணியிருந்தேன். அதுவும் தூத்துக்குடியில. நிகழ்ச்சி முடிச்சிட்டு மாலையில கிளம்பிட்டேன். சரி, காலையில சீக்கிரம் போய் தலை தீபாவளியைக் கொண்டாடிடலாம்னு நினைச்சா ‘டிராஃபிக்’ மண் அள்ளி போட்டிருச்சு. வந்து சேர்ந்தப்ப மதியம் ஆகிடுச்சு. உள்ளே நுழைஞ்சதும், ‘கடுகடு’ன்னு இருந்த மனுஷனைப் பார்த்து கிஃப்ட் கேட்க எப்படி தைரியம் வரும்? அமைதியா கிச்சனுக்குப் போய் சிக்கன்ல அவருக்குப் பிடிச்ச உப்புக்கறி செஞ்சு சமாதானப்படுத்தினேன். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காவது ஏதாவது கிஃப்ட் கிடைக்குதான்னு பார்க்கலாம்’' என்கிறார் கண்ணடித்தபடி.

‘மைனா’ நந்தினி - யோகேஸ்வராம் திருமணம் நவம்பர் 11 அன்று சென்னை சேப்பாக்கத்தில் கோயில் ஒன்றில் வைத்து எளிமையாக நடந்து முடிந்திருக்கிறது. ‘வசந்த மாளிகை’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் எஸ்.வி.ராமதாஸின் பேரன்தான் யோகேஸ்வராம். திருமணம் குறித்து யோகேஸ்வராமிடம் கேட்டபோது, ‘ஒரு ரியாலிட்டி ஷோவுல நந்தினியைச் சந்திச்சேன். நண்பர்களா பழகினோம். ஒருகட்டத்துல, நட்பு தாண்டிய ஒரு பிரியம் அவங்க மேல உண்டாச்சு. எங்க வீட்டுல அதைச் சொன்னேன். அவங்க நேரடியா நந்தினி வீட்டுல பேச, இப்ப ரெண்டு பேரும் கணவன் மனைவி ஆகிட்டோம்’' என்கிறார்.

வாழ்த்துகள்!