Published:Updated:
சமையலுக்கும் வீட்டு வேலைகளுக்கும் இல்லத்தரசிகள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டுமா? #VikatanPoll

இல்லத்தரசி என்றாலும் சமையல், வீட்டு வேலைகள் அனைத்துக்கும் அவர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டுமா? #VikatanPoll
மலையாளத்தில் வெளியான 'The Great Indian Kitchen' சமூக வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. காலங்காலமாகச் சமையலறையும் இதர வீட்டு வேலைகளும் மட்டுமே தன் அன்றாட பணி என ஓய்வின்றி சம்பளமின்றி வேலை பார்க்கும் இல்லத்தரசிகளின் வலியையும், அதன் பின்னான ஆணாதிக்க அரசியலையும் படம் தோலுரித்துக் காட்டுகிறது. இந்தச் சமயத்தில், பணிக்குச் செல்லும் பெண்கள் மட்டுமல்லாது, இல்லத்தரசிகளுக்கும் சமையலும் வீட்டு வேலையும் மட்டுமே பணி என்ற பின்புத்தியைக் கேள்வி கேட்பது அவசியமாகிறது.
இல்லத்தரசி என்றாலும் சமையல், வீட்டு வேலைகள் அனைத்துக்கும் அவர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டுமா? உங்கள் கருத்தைக் கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...