Published:Updated:

``என் ஆயாவைத் தவிர யாரும் மனசார எனக்கு உதவினதில்ல... நன்றி!" - விகடன் உதவியால் நெகிழ்ந்த செம்பருத்தி

செம்பருத்தி
News
செம்பருத்தி

இதுவரை 1,78,500 ரூபாய் பண உதவி கிடைச்சிருக்கு. எங்களுக்கு உதவின வாசகர்களுக்கு என்றென்றைக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கேன் என கண்கலங்க பேசத் தொடங்கினார் செம்பருத்தி.

``என் ஆயாவைத் தவிர யாரும் மனசார எனக்கு உதவினதில்ல... நன்றி!" - விகடன் உதவியால் நெகிழ்ந்த செம்பருத்தி

இதுவரை 1,78,500 ரூபாய் பண உதவி கிடைச்சிருக்கு. எங்களுக்கு உதவின வாசகர்களுக்கு என்றென்றைக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கேன் என கண்கலங்க பேசத் தொடங்கினார் செம்பருத்தி.

Published:Updated:
செம்பருத்தி
News
செம்பருத்தி
செம்பருத்தி தனது பத்தாவது வயதில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவர் அதற்கு பின் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். தற்போது அவருடைய நண்பரான ஹூசைன் என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

செம்பருத்தி அக்காவின் கதையை நம்முடைய ஆனந்த விகடன் இதழிலும், வீடியோவாக ஆனந்த விகடன் யூடியூப் தளத்திலும் பதிவிட்டிருந்தோம். அவருக்கு உதவ நினைத்த விகடன் வாசகர்கள், நாம் பகிர்ந்திருந்த அவர்களின் வங்கிக் கணக்கு மூலமாக செம்பருத்திக்கு பணம் அனுப்பி வைத்து உதவினர். இப்போது அவருக்கு 1,78,500 ரூபாய் பண உதவி கிடைத்துள்ளது.

செம்பருத்தி
செம்பருத்தி

'எங்களுடைய நிலைமை புரிந்து எங்களுக்கு உதவின நல்ல உள்ளங்களுக்கு ரொம்ப நன்றி! அவங்க குடும்பமே நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிறேன்!' என நெகிழ்ந்து பேசினார் செம்பருத்தி. இதுவரை வாங்கின கடனை அடைச்சிட்டேன் எனப் புன்னகைக்கிறார்.

பத்தாவது வயதில் தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது கரண்ட் பெட்டியில் தீப்பிடித்து பக்கத்தில் இருந்த குடிசை வரை தீ பற்றிக் கொண்டிருக்கிறது. அந்த தீ விபத்தில் சிக்கி முகம் சிதிலமடைந்த நிலையில் இந்த சமூகத்தை எதிர்கொள்ள சிரமப்பட்டவர் தற்போது தைரியமாக இந்த உலகை பார்க்க முன்வந்திருக்கிறார்.

``என் ஆயாவைத் தவிர யாரும் மனசார எனக்கு உதவினதில்ல... நன்றி!" - விகடன் உதவியால் நெகிழ்ந்த செம்பருத்தி

அம்மா, அப்பா, சகோதர்கள் என அனைவரும் நிராகரித்ததன் வலியை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். மேலும், துணிக்கடையில் லோடு மேனாக வேலை செய்யும் அவரது கணவரின் தினசரி கூலி வருமானம் 400 ரூபாயிலும், தான் பூக்கட்டிக் கொடுக்கும் வேலையில் சம்பாதிக்கும் 50,100 ரூபாயிலும் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். குடும்பம் நடத்தவே கஷ்டமான சூழலில் இருப்பதாகவும், சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற இலக்கை நோக்கி பயணிப்பதாகவும் செம்பருத்தி நம்மிடையே தெரிவித்திருந்தார்.

``என் ஆயாவைத் தவிர யாரும் மனசார எனக்கு உதவினதில்ல... நன்றி!" - விகடன் உதவியால் நெகிழ்ந்த செம்பருத்தி

அவரைப் பற்றி ஆனந்த விகடன் இதழிலும், ஆனந்த விகடன் யூடியூப் தளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம். அதைப் படித்த விகடன் வாசகர்கள் பலர், செம்பருத்திக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர். இதனையடுத்து செம்பருத்தியின் வங்கிக் கணக்கு எண்ணைப் பெற்று வாசகர்களிடம் கொடுத்தோம். அவர்கள் தங்களால் இயன்ற தொகையை நேரடியாக அந்த வங்கிக் கணக்குக்குச் செலுத்தினர்.

"இதுவரை 1,78,500 ரூபாய் பண உதவி கிடைச்சிருக்கு. எங்களுக்கு உதவின வாசகர்களுக்கு என்றென்றைக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கேன்" என கண்கலங்க பேசத் தொடங்கினார் செம்பருத்தி.

"இத்தனை வருசமா என் ஆயாவைத் தவிர எனக்கு யாரும் மனசார உதவி பண்ணினதில்லை. ஆயா போன பிறகு யாருமில்லாமல் நிற்கதியா நிற்கிற உணர்வு எனக்குள்ள இருந்துச்சு. நீங்களாக என்னைத் தேடி வந்து என் கதையைக் கேட்டீங்க. என்னை மாதிரி யாரையும் கேலி, கிண்டல் பண்ணி தலைகுனிய வைக்கக்கூடாதுன்னு நினைச்சேன். இனியும் என் முகத்தை மறைச்சு வைக்கக் கூடாது.. தைரியமா முன்னேறணும்னு ஆசைப்பட்டேன். என்னோட கதையை உங்ககிட்ட பகிர்ந்துக்கிட்டேன். என் வலியை அப்படியே விகடனில் எழுதுனீங்க. அதைப் பார்த்துட்டு இத்தனை பேர் எனக்கு உதவியிருக்கிறது ரொம்ப நெகிழ்வா இருக்கு. இந்தப் பணம் நிச்சயம் என்னுடைய குடும்பத்துக்கு மிகப் பெரிய உதவியா இருக்கும். எல்லாருக்கும் மனப்பூர்வமா நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன்.. உங்க குடும்பம் நல்லா இருக்கணும்னு கடவுளை பிராத்திக்கிறேன்!' என கண்ணீர்மல்க நன்றிகூர்ந்தார்.

அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! இவருக்கு உதவ நினைப்பவர்கள் help@vikatan.com என்கிற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.