Published:Updated:

பெண்கள்படை ஆச்சர்ய அனுபவங்கள்!

ஸ்ரீ அம்ரித வர்ஷிணி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீ அம்ரித வர்ஷிணி

விகடன் மாணவ நிருபர்கள்

பெண்கள்படை ஆச்சர்ய அனுபவங்கள்!

விகடன் மாணவ நிருபர்கள்

Published:Updated:
ஸ்ரீ அம்ரித வர்ஷிணி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீ அம்ரித வர்ஷிணி
பெண்கள்படை ஆச்சர்ய அனுபவங்கள்!

வ்வோர் ஆண்டும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் மூலம், இளம் பத்திரிகையாளர்களை விகடன் குழுமம் உருவாக்கிவருகிறது. அவர்களில் பெண்களின் பங்களிப்பும் கணிசமாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இந்த வருடமும் பேனா படை புறப்படத் தயாராகிவிட்டது. இந்த ஜூனியர்களுக்கு வழிகாட்டும்விதமாக, தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள், சென்ற வருட மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வாகி, விகடன் குழும இதழ்களில் பல முத்தான கட்டுரைகளை எழுதிய இந்தப் பெண்கள்!

பூ.பவித்ரா, மதுரை

பெண்கள்படை ஆச்சர்ய அனுபவங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளியில் ஒலிக்க முடியாத எளிய மனிதர் களின் குரலை ஒலிப்பதற்கான வாய்ப்பாக இதைப் பார்க்கிறேன். அனுமதியில்லாமல் சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கவிருந்ததை நிறுத்திய என் கட்டுரை, பூங்காவில் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தைக் குறைக்க வைத்த என் கட்டுரை என இவையெல்லாம் இந்த ஓராண்டுக் காலத்தில் என் பெருமை மிகுந்த தருணங்கள். அவள் விகடனுக்காக, கரகாட்டக்காரப் பெண் கலைஞரைப் பேட்டி எடுத்தபோது, என் அறியாமையை விலக்கிக்கொண்டேன்; அவர்களின் வாழ்வியலைப் புரிந்துகொண்டேன். இப்படிப் பலதரப்பட்ட அனுபவங்களை இந்தத் திட்டம் எனக்குத் தந்திருக்கிறது!

ரா.கெளசல்யா, கோவை

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெளிமனிதர்களோடு அதிகம் பேசியிராத நான், விகடனில் மாணவர் நிருபராகச் சேர்ந்ததும் பலரோடு பேச வேண்டியிருந்தது. அதனால் என் தன்னம்பிக்கை கூடியிருக்கிறது. ‘காடு’ என்பதை வார்த்தையாக மட்டுமே அறிந்திருந்த நான், விகடன் கட்டுரைகளுக்காக பல வனப்பகுதிகளுக்கும் செல்ல நேர்ந்தது. ‘காட்டுவாசி கெளசல்யா’ என்று என்னை நண்பர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு, என் வாழ்க்கை மாறியது. கானுயிர்கள் பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். சூழலியல் பத்திரிகையாளராக ஆக வேண்டும் என்ற தெளிவையும் அது குறித்த அறிவையும், இந்த திட்டம் என்னுள் விதைத்திருக்கிறது.

வெ.துர்க்கீஸ்வரி, திண்டுக்கல்

பெண்கள்படை ஆச்சர்ய அனுபவங்கள்!

இந்த ஒரு வருடத்தை என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அளவுக்கு விகடன் எனக்குத் தந்திருக்கும் பொக்கிஷத் தருணங்கள் நிறைய. முருகன் மலையில் ஒருநாள் இரவு எடப்பாடி கிராமத்து மக்கள் தங்குவார்கள் என்று கேள்விப்பட்டு, அதைப் பற்றி நான் எழுதிய கட்டுரை வைரலாகியது.

கார்த்திகா.பா, சென்னை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு நபரை பேட்டிக்காகச் சந்திக்கச் செல்வதற்கு முன், போட்டோகிராபர் செய்ய வேண்டிய முன்தயாரிப்புகளில் தொடங்கி, பல விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். குறிப்பாக, பிரஸ் மீட் அனுபவங்கள். அவை மிகவும் பிரமிப்பாக இருந்தன. சக போட்டோ கிராபர்களின் அறிமுகம் கிடைத்தது. நிச்சயம் நான் ஒரு நல்ல போட்டோகிராபராக ஆவேன் என்ற தன்னம்பிக்கையை விகடன் அளித்திருக்கிறது.

தி.குணநிலா, திருவாரூர்

திருக்குவளைக்குப் பல தடவை போயிருக் கிறேன். ஆனால், கலைஞரின் மறைவுக்குப் பின், மாணவப் பத்திரிகையாளராக அங்கு சென்றபோது ஒவ்வொரு விஷயத்தையும் உள்வாங்கிப் பார்த்தது புதிய அனுபவமாக இருந்தது. சாதனை மாணவர்களைப் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதினேன். அவர்கள் எல்லாம் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக என்னை நினைப்பது சந்தோஷமாக இருக்கிறது. டெல்டா பகுதியில் மக்கள் போராட்டம் நடத்துவதை அதுவரை செய்தித்தாள்களில் மட்டுமே படித்தவள், ஒரு நிருபராக கதிராமங்கலத்துக்குச் சென்றபோது, நிலைமையின் முழு வீரியம் புரிந்தது. இப்படி இந்த ஒரு வருடத்தில் பல கற்றல்கள்!

ஷே.ஆயிஷா அஃப்ரா, கோவை

நான் ப்ளஸ் டூ படித்தபோது நடந்த ஒரு விபத்தில் மிகவும் பாதிக்கப்பட்டேன். அந்தத் துயரங்களை எல்லாம் மறந்து, கடந்து வர, விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் உதவியாக இருந்தது. போட்டோகிராபி தொடர்பான சில வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். அதிலும் சோர்வான ஒரு தருணத்தில்தான், இந்தத் திட்டத்தில் இணைந்தேன். விகடன் வாயிலாக சந்தித்த பல புதிய மனிதர்கள் தந்த நம்பிக்கை என்னை வேகமாகப் பயணிக்கவைத்திருக்கிறது.

பி.கல்பனா, சென்னை

பெண்கள்படை ஆச்சர்ய அனுபவங்கள்!

நான் விகடனில் வீடியோக்களை ஒருங்கிணைக்கிற வேலைகளைச் செய்வதில் என் பயணத்தை ஆரம்பித்தேன். அதன் மூலம் நிறைய பேரைச் சந்திக்கவும் புதுப்புது ஐடியாக்களை உருவாக்கவும் முடிந்தது. குறிப்பாக, அரசியல் தொடர் பான வீடியோக்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதும் போது நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். தேர்தல் சர்வேக்குப் போனது மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மக்களிடம் பேசியபோது, `ரிப்போர்ட்டர்' என்று எனக்கு அவர்கள் கொடுத்த மரியாதையை பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.

பா.நந்தினி, கடலூர்

பேட்டிக்காகச் செல்லும்போது பொறுப்பில் இருக்கும் ஒருவரிடமோ, மக்களிடமோ எப்படிப் பேச வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். பசுமை விகடனில் எழுதிய தொடருக்காக நிறைய விஷயங்களைத் தேடித் தேடிப் படித்தேன். பலரிடம் ஆலோசனை கேட்டேன். அவை அனைத்தையும் எழுத்தில் கொண்டுவருவது சவாலாக இருந்தது. அதே நேரம் நல்ல பயிற்சி யாகவும் இருந்தது. விழுப்புரத்தில் தேர்தல் சர்வேக்காகப் போயிருந்தபோது பல விஷயங்கள் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தன. தேர்தல் முடிந்த பிறகு அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் தொடர்பே இல்லை என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்துகொண்டேன். இரு தரப்புக்கும் பாலமாக இருந்து தொடர்ந்து எழுத ஆசைப்படுகிறேன்.

ஸ்ரீ அம்ரித வர்ஷிணி, சென்னை

டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்பது என் ஆசை, கனவு. ஆனால், மார்க் கொஞ்சம் குறைந்ததால் அது முடியாமல் போய்விட்டது. அந்த ஏக்கத்தை ஈடுகட்டும் விதமாக, மருத்துவம் சார்ந்த பல கட்டுரைகளை எழுதும் வாய்ப்பைக் கொடுத்தது விகடன். அந்தக் கட்டுரைகள் எல்லாம் எனக்குள் ஒரு நம்பிக்கையை ஊன்றியது. சோர்ந்திருந்த எனக்குப் புது துணிச்சலைத் தந்து, பல புதிய மனிதர்களைச் சந்திப்பதற்கும், அவர்களோடு பழகுவதற்கும் பாலமாக எனக்குக் கிடைத்தது விகடன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism